உங்களுக்கு உள்ளங்கைகளில்மட்டும் வியர்வை மிகுதியாகவருமா?
Wed Jun 15, 2016 3:06 pm
நான் சிறுவனாயிருந்தபோது எனக்கு உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் வேர்த்துக்கொண்டேயிருக்கும். தேர்வெழுதும்போது தேர்வுத்தாளெல்லாம் நனைந்துவிடும்! காலிலுள்ள செருப்புகூட வழுக்கிக்கொண்டு ஓடும்!
என் தாயார் ஒரு வைத்தியஞ்சொன்னார். அதாவது, கத்தரிக்காயை சமைப்பதற்கு அதை வெட்டி தண்ணீரிலே போட்டுவைப்பார்களல்லவா? அந்த தண்ணீரில் கைகளைமட்டும் நனைத்து சற்றுநேரத்துக்கு வைத்துக்கொண்டிருக்கச்சொன்னார்கள். நான் ஒரு ஐந்தாறுமுறைதான் அவ்வாறு செய்திருப்பேன். என்னவியப்பென்றால், அந்த வியர்வை நின்றுவிட்டது!
இப்போதும் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு நான் அதைத்தான்சொல்கிறேன். என் தாயாருக்கு அது எப்படித்தெரிந்ததென்பது இன்றுவரை விடைகாணமுடியாதவொன்றாயிருக்கிறது!
இந்த நோய் உள்ளவர்களுக்கு கைகளில்மட்டுமன்றி கால்களிலும் அதேபோல் வியர்வை மிகுதியாயிருக்கும். உள்லங்கால்கள் அப்படி வியர்ப்பதால் செருப்பெல்லாம் நனைந்து கால்களைவிட்டு வழுக்கிக்கொண்டுபோகும்!
இந்த வைத்தியத்தில் கையைமட்டுமேநனைத்தாலும் கால்களில்வியர்ப்பதும் அத்துடன் நின்றுவிடும்.
தேர்வெழுதும்போது தாளெல்லாம் நனைந்துவிடும்! ஒரு கைக்குட்டையை கைக்கடியில் வைத்துக்கொண்டுதான் தேர்வில் எழுதமுடியும்.
எல்லாத்துன்பமும் ஒரேவாரத்தில் சரியாகிவிடும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum