வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
Wed Jun 15, 2016 8:23 am
பல நாட்கள் பாடுபட்டு, உங்கள் கனவு இல்லத்தை கட்ட ஒரு இடத்தை வாங்கி விட்டீர்களா? சரி, ஒரு வீட்டுக்கடன் பெற்று, வீட்டைக் கட்ட ஆரம்பிக்கலாம். வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. வீடு கட்ட எவ்வளவு தொகை தேவைப்படும், மாதா மாதம் EMI எவ்வளவு செலுத்த முடியும், நமக்கு ஏற்ற வங்கி எது என்று பல விஷயங்களை ஆராய்ந்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.
1. எவ்வளவு கடன் பெற முடியும்?
கடன் பெறுவதற்கு முன்பு, பொருளாதார ரீதியாக நாம் எங்கிருக்கிறோம் என்பதை சற்று ஆராய வேண்டும். எப்போதுமே, வங்கிகள், நாம் முன்பு பெற்ற கடன்களை எப்படி அடைத்திருக்கிறோம் என்பதைப் பார்த்துவிட்டுதான், அடுத்த கடனை அளிக்கும். அதனால், ஒரு தெளிவான பதிவு இருக்க வேண்டியது (clear record) மிகவும் அவசியம்.
அநேகமாக, வங்கிகள் நம் சொத்தில் 80 சதவிகிதத்தை கடனாக அளிக்கின்றன. இத்தொகையை நாம் மாதா மாதம் அடைக்க வேண்டியிருப்பதால், ஒரு மாதம், நம் வரவு, செலவு ஆகியவற்றைக் கணக்கு பார்த்து வைக்க வேண்டும். இதனால், நம்மால் எவ்வளவு தொகையை செலுத்த முடியும் என முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக் கொள்ளலாம்.
வேறு கடன்கள் இருந்தால், அதை முன்கூட்டியே அடைத்து விடுவது நல்லது. ஏனெனில், நம் பெயரில் "Existing EMI" காட்டப்படும். மேலும், கடனை அடைத்து விடுவதால்:
1. மாதா மாதம் கையில் அந்த தொகை அதிகமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, ஒரு பைக் லோனிற்கு மாதம் ரூ.5,000 EMI கட்டுகிறோம் எனில், அதை அடைத்துவிட்டால் மாதம் ரூ.5,000 மிச்சமாக இருக்கும்.
2. நம் பெயரில் பழைய கடன்கள் இல்லாததால், வீட்டுக் கடனிற்கான தொகை அதிகரிக்கும்.
இதுமட்டுமில்லாமல், நம் credit card பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. இப்படி, அனைத்து கடன்களையும் ஆராய்ந்துவிட்டு ஒரு கணக்கைத் தயார் செய்து வைத்துக் கொள்வது, ஒரு தெளிவான முடிவை எடுக்க உதவும்.
2. CIBIL scoreஐ சரிபார்க்கவும்:
Credit Information Bureau India Ltd.ல் நம் மதிப்பெண்ணை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நம் Credit card, வங்கிக் கணக்கு, இருக்கும் கடன், எத்தனை முறை கடனுக்கு விண்ணப்பித்து இருக்கிறோம் எனப் பல கூறுகளை ஆராய்ந்து 300 முதல் 900 வரை நம்மை மதிப்பீடு செய்யும்.
சில வருடங்களுக்கு முன்னால், சரியாக அடைக்கப்படாத கடன் முதலாக பல விஷயங்கள் நம் Cibil scoreல் இடம்பெறும். 750+ cibil score இருந்தால் அநேகமாக கடன் பெற்று விடலாம். 750+ Cibil score பெற்ற 100ல் 79 பேர், கடனைப் பெற்று விட்டனர்.
Cibil அறிக்கையை 6 மாதங்களுக்கு முன்பாகவே பெற்று வைத்துக் கொள்வது நல்லது. காரணம், சில நேரங்களில் ஏதேனும் ஒரு தவறை திருத்த வேண்டும் என்றால், பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதனால், முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது.
3. கால அளவு (Loan Tenure):
நாம் செலுத்த வேண்டிய EMI, கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் கால அளவால் நிர்ணயிக்கப்படுகிறது. கால அளவு கூடினால் EMI குறையும்; கால அளவு குறைந்தால் EMI அதிகரிக்கும். ஆகவே, நம் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
4. Loan Type:
வட்டி விகிதத்தைப் பொறுத்து கடன் fixed loan, floating loan என இருவகைப் படுகிறது. Fixed loanல் வட்டி விகிதம், சந்தைக்கு ஏற்றாற்போல மாற்றம் அடையாது. ஆனால், Floating interestஐக் காட்டிலும் 1-2.5% இது அதிகமாக இருக்கும்.
மற்றொரு பக்கம், Floating loanல் வட்டி விகிதம் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இதனால், செலுத்த வேண்டிய EMI தொகையும் மாறும். இதில், எது நமக்கு வசதியோ அதை தேர்வு செய்ய வேண்டும்.
5. ஆவணங்கள்:
எந்த ஒரு முக்கியமான விஷயத்திற்கும் ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து வைப்பதே நல்லது. அதுவும் வங்கி சம்பந்தப்பட்டது என்றால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டுக்கடன் பெற தேவையான ஆவணங்களின் checklist உங்களுக்காக:
2-3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
அடையாள அட்டை (பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை)
Address proof (EB பில், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை)
3 மாதகால சம்பள சீட்டு (salary slips)
கடந்த 3 ஆண்டுக்கான ITR (Income Tax Return)
6 மாதகால Bank statement
நம்முடைய அனைத்து சேமிப்புகளுக்கான proof
கடந்த ஒரு வருடத்திற்கான loan account statement
வீடு/நிலப் பத்திரம் (கிரைய பத்திரம், தாய் பத்திரம், ஒப்பந்த பத்திரம்)
Tax ரசீதுகள்
Layout approval plan sanction
Completion certificate
NA certificate
இவை அனைத்தும் சரியாக உள்ளதா என ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டுக்கடனுக்கு விண்ணப்பியுங்கள். மேலும், வேறு வேலைக்குச் செல்லும் எண்ணமிருந்தால், முதலில் கடனைப் பெற்றுவிட்டு வேலை மாறவும். ஏனெனில், வேலை மாறிவிட்டால், கடனைப் பெறுவது கடினம்.
இப்படி பல விஷயங்களை ஆரய்ந்து, தயார் செய்த பிறகே வீட்டுக் கடன் பெற முயல வேண்டும். இல்லை அலைச்சல் மட்டும்தான் மிஞ்சும்.
ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிக்கையாளர்)
நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum