கட்டுமான பணியின்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Thu Jul 02, 2015 2:23 am
கட்டுமானங்கள் வலிமையுடன் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் கட்டிடத்தின் உறுதி தன்மையை பரிசோதிக்க வேண்டும். அத்துடன் கட்டுமான விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஒரு கட்டிடம் கட்டப்படும்போது கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பார்ப்போம்.
* முதலில் கட்டிடம் கட்டும் பில்டர் கட்டுமானத்துறை பற்றி முழுமையாக அறிந்தவராக இருக்க வேண்டும்.
அவர் சிவில் என்ஜினீரியங் படித்திருந்தால் கூடுதல் பலம். அதை விட முக்கியம் அங்கு வேலை செய்யும் என்ஜினீயர் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
* கட்டிடம் கட்டும் இடத்தில் உள்ள மண்ணின் தன்மை, கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் மணல், தண்ணீர், கம்பி, சிமெண்டு, ஜல்லி, செங்கல் போன்ற அனைத்து பொருள்களும் தரப்பரிசோதனை செய்யப்பட வேண்டும். இவைகளில் ஏதேனும் ஒன்று தரம் குறைவானதாக இருந்தாலும் கட்டிடத்தின் பாதுகாப்பில் பிரச்சினை ஏற்படக்கூடும்.
* கான்கிரீட் போட்ட பின்பு அதன் ‘க்யூப் டெஸ்ட்’
7 நாள் மற்றும் 28 நாட்களில் அதன் உறுதி தன்மை பரிசோதிக்கப்பட வேண்டும். இதற்காக சென்னையில் பரிசோதனை கூடங்கள் உள்ளன. இவையனைத்தும் சரியாக கட்டப்படுகிறதா? முறையாக பரிசோதிக்கப்படுகிறதா? என மேற்பார்வை செய்ய தனியாக பொறியாளர்களும் உள்ளனர்.
அவர்கள் மூலம் தரப்பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
* வேலை செய்யும் ஆட்களை கட்டுமான பகுதியில் தங்குவதற்கு கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
18 வயது குறைந்தவர்களை பணியில் அமர்த்தவும் கூடாது.
* கட்டுமானத்தொழிலாளர்கள் தங்கள்
குழந்தைகளை பணிகள் நடைபெறும் இடத்திற்கு அழைத்துவர அனுமதிக்க கூடாது. ஏனென்றால்,
வேலை நடக்கும் போது உயரத்தில் இருந்து ஏதேனும்
பொருள்கள் தவறி விழுந்தால் அது அவர்கள் மேல்விழுந்து காயம் ஏற்படக்கூடும்.
* கட்டுமான பணியாளர்களின் நிரந்தர மற்றும் தற்போது தங்கி இருக்கும் இடத்தின் முகவரி, தொலைபேசி எண் போன்றவை கட்டுமானம் நடைபெறும் இடத்தில் உள்ள அலுவலகத்திலும், கட்டுமான நிறுவனத்தின்
தலைமை அலுவலகத்திலும் இருக்க வேண்டும்.
* கட்டுமானம் நடைபெறும் இடத்தில் பணிநேர இடைவேளையின்போது தற்காலிகமாக
வேலை ஆட்கள் தங்குவதற்கோ, அல்லது கட்டுமான பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கோ எளிதில் தீ பிடிக்கும் தென்னகீற்று போன்றவற்றினால் கூரை அமைப்பது
தடை செய்யப்பட வேண்டும்.
* கட்டுமானம் நடைபெறும் இடத்தில் முதலுதவி பெட்டி அவசியம் இருக்க வேண்டும்.
* மேலும் அருகில் உள்ள போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் பெயர், தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் எழுதி வைக்க வேண்டும்.
* கட்டுமான பணிக்கு அலுமினியம், இரும்பு ஏணிகளை பயன்படுத்த வேண்டும். மர ஏணிகளை தவிர்க்க வேண்டும்.
* பாதுகாப்பு பணிகளை கவனிப்பதற்கு என்று
தனியாக பொறியாளரை பணியமர்த்த வேண்டும்.
* தண்ணீர், மின்சாரம் போன்ற பகுதிகள் தனியான இடத்தில் அமைப்பதோடு தகுந்த பாதுகாப்பு அரணை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
* கட்டுமானத்தில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும் குழு இன்சூரன்ஸ், இ.எஸ்.ஐ போன்ற பாதுகாப்பு அவசியம் ஏற்படுத்த வேண்டும்.
* கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ஒரு முறை அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
* தீ அணைப்பான் கருவி தயார் நிலையில் இருக்க வேண்டும். வாளியில் மணல் நிரப்பி வைத்தலும் தகுந்த முன் எச்சரிக்கையாக அமையும்.
* கட்டுமானம் நடைபெறும் இடத்தில் வேலை செய்யும், ஜே.சி.பி., லாரி போன்றவற்றுக்கு தகுதி பெற்ற டிரைவர்களை பணியில் அமர்த்தவேண்டியது அவசியம். நிறுத்தி வைத்த வாகனத்தின் கீழ் எவரும் அமருவதற்கு அனுமதிக்க கூடாது.
* கட்டுமானம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் கொண்ட பதாதைகளை ஆங்காங்கு வைக்க வேண்டும்.
* கட்டுமான பணிக்காக சேமித்து வைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை தகுந்த பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
* கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் கட்டிடத்தை வடிவமைத்த ஆர்க்கிடெக்ட் விஜயம் செய்து கட்டிடம் சரியான முறையில் கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கட்டிட வடிவமைப்பு என்ஜினீயரும் ஒவ்வொரு நிலையிலும் ஆரம்பம் முதல் பரிசோதிக்க வேண்டும். இவர்கள் பரிசோதித்த பிறகே கட்டிடத்துக்கு கான்கிரீட் போட வேண்டும்.
* அனைத்து கட்டிட மாற்றங்களையும் பில்டர், ஆர்க்கிடெக்ட் மற்றும் சம்பந்தப்பட்ட என்ஜினீயர்களிடம் தெரிவிக்க வேண்டும். கட்டுமான பொருட்கள் தரமாக இருக்கிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆர்க்கிடெக்ட், கட்டிட பொறியாளர்கள், பில்டர்கள் இணைந்து கூட்டம் நடத்தி பணிகள் பற்றிய விவரங்களை விவாதிக்க வேண்டும். இதில் எடுக்கப்படும் முடிவுகள், தெரிவிக்கப்படும் ஆலோசனைகள் போன்றவை தொகுக்கப்பட்டு அனைத்து தரப்பினருக்கும் அனுப்பப்பட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்டுமானப் பணிகளின் தரம் மேம்படும். குறைகள் இருந்தால் உடனுக்குடன் சரிசெய்ய முடியும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum