கிறிஸ்துவ தத்துவங்கள் - 5
Fri Jun 03, 2016 8:18 am
கடவுளை அறிந்துள்ளோம் என்பவர்கள் - தன் வாழ்வின் மூலம் கடவுளைக் காட்டாதவரை
பிற ஜனங்கள் கண்ட இடமெல்லாம் கடவுளைத்தேடி அலையத்தான் செய்வார்கள் "
Re: கிறிஸ்துவ தத்துவங்கள் - 5
Fri Jul 08, 2016 8:37 am
டைம் இல்ல! டைம் இல்ல! நாள் முழுவதும் வேலை,வருடம் முழுவதும் பிஸி, கார் வாங்கனும், வீடு வாங்கனும், பாரீன் போகனும், செட்டில் ஆகனும்!!!!
அப்போதான் மத்தவங்க முன்னால கெளரவமா நாம தெரிவோம், நான் இல்லைனா? அங்க வேலையே நடக்காது, உலகம் சரியா இயங்க நான் ஒரு முக்கிய காரணம், அதனால அரசாங்கமே என்னைய விடாது, இப்டியெல்லாம் வாழரவங்களையும் பாத்தாச்சு, வாழ துடிக்கிறவங்களையும் பாத்தாச்சு - "ஆர்வம்,
ஆசை, ஞானம், திறமை, வேகம், வேலை, ஓட்டம், எல்லாமே உலகத்துக்கு அர்ப்பணிக்கும் கிறிஸ்துவை அறிந்தவர்களே!!! படைத்த இயேசுவுக்கு, இரட்சிக்கும் இயேசுவுக்கு ஒரு நிமிடம் கூட தர மனமில்லாமல் இருக்கிறாயோ???
உலக பணிகள் தரும் உயர்வு மாய்மாலமானது! பரலோகம் தரும் கிரீடமோ நித்திய ஜீவனை உடையது என்பதை அறிந்துக்கொள்! இயேசு வாஞ்சையோடு அனைவரையும் நன்கு அறிந்து அழைக்கிறார் அவரின் சுவிஷேஷ பணியை செய்திட, "அழைக்கப்பட்டவர்கள் அனேகர்"
இதில் உலக ஆசைகளுக்காகவும், இச்சைகளுக்காகவும், உயர்வுகளுக்காகவும் "குருடரை போல இயேசுவை பார்காதவர்களாகவும், செவிடர்களைபோல இயேசுவின் வார்த்தைகளை கேளாதவர்கள் போலவும், ஊமையர்களை போல இயேசுவின் அன்பை சொல்முடியாதவர்களை போல நடித்து தப்பிக்க பார்கின்றாயோ??
"தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்" இயேசுவை விசுவாசித்து, நேசித்து, உலக ஆசைகள், இச்சைகள், உயர்வுகளை உதறி தள்ளி சுவிஷேஷ பாரத்தை செய்யும் சிலரே இயேசுவை "தெரிந்துகொண்டனர்" தேவ அழைப்பை நீ அசட்டை செய்தால்? இயேசு உன்னை அசட்டை செய்வார்! வாஞ்சையோடு வா இயேசுவிற்காய்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum