தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் Empty ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்

Sat May 21, 2016 5:51 am
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு 

1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான் றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட் டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.

இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டார அலு வலரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்மந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்ப தாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதாவது, இந்த ஆண்டு 1.4.2015 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்படும் ஓபிசி சான்றிதழை 31.3.2016 வரை பயன்படுத்த முடியும். 

இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?

1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப் பிரிவில்தான் அதாவது திறந்த போட் டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.

2. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.

3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தை களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது.

4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்து வர்கள், பொறியாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. 

அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?

1. குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.

2. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர் களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 

3. விவசாய வருமானம் ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப் பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம். 

தமிழக அரசின் ஆணை:

ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த ஆணையின்படி, பிற்படுத்தப்பட்டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத் துக் கொள்ளக்கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவல கத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.

அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக் கும்.

 இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில், OM and Orders என்கிற பகுதியில், O.M. No.36012/22/93-Estt.(SCT), தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும். 

தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளை களுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக அரசின் ஆணை, விண்ணப் பப்படிவம், தேவைப்படுவோர், aiobc.gk@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் Empty Re: ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்

Mon Jun 27, 2016 4:45 am
  ஓபிசி(OBC) CREAMY LAYER - விளக்கங்கள்! 
  


யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.
 

தமிழ்நாடு அரசின் வருவாத்துறை இந்தச் சான்றிதழை வழங்க வேண்டும்.

இதற்கு மூன்று சோதனைகள் உள்ளன.




1. அரசுவேலை தர நிர்ணயம். ( Class of govt employees)

2. வருமானச் சோதனை. (Income test)

3. செல்வச்சோதனை (wealth test)




ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.









1. அரசு வேலை தர நிர்ணயச் சோதனை:



ஓபிசி கோரும் நபருடைய பெற்றோர் அரசு வேலையில் இருந்தால் அவர்களின் குரூப் என்ன என்று சோதிக்கப்படும். மத்திய மாநில அரசு வேலைகள் குரூப் ஏ, பி, சி, டி என வகைப்படுத்தப் பட்டுள்ளன.




ரூ. 6600 க்கும் மேல் தர ஊதியம்- கிரேட் பே பெறும் அரசு ஊழியர்கள் குரூப் ஏ பிரிவில் வருவார்கள். அதாவது, மாவட்ட வருவாய் அலுவலர் டிஆர்ஓ, இணை இயக்குநர் - ஜேடி, இணை பதிவாளர் - ஜேஆர், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்- ஏடிஎஸ்பி, செயற் பொறியாளர் - இ.இ, முதன்மைக் கல்வி அலுவலர் - சிஇஓ, போன்ற மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் குரூப் ஏ என்று வகைப்படுத்தப் படுவர் .







இது போன்ற உயர் அலுவர்களின் குழந்தைகள் நல்ல கல்வி வசதியும் நல்வாய்ப்புகளையும் குழந்தைப் பருவத்தில் பெற்றுவிடுவதால் அவர்கள் கிரிமி லேயர் - வசதியான பிரிவினர் என்று வகைப்படுத்தப்பட்டு பொதுப்பிரிவினராக கருதப்படுவர். ஓபிசி இட ஒதுக்கீடு இவர்களுக்கு இல்லை.

இதில் அடுத்த நிலை ஒன்று உள்ளது. பதவி உயர்வில் குரூப் ஏ நிலையை அடைந்த பெற்றோர் அதை நாற்பது வயதுக்குள் அடைந்திருக்க வேண்டும். 







இல்லையெனில் அவர்களை வசதியான பிரிவு - கிரிமி லேயரில் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் நாற்பது வயதுக்குள்தான் வளரும் இளம்பருவ குழந்தைகள் அவருக்கு இருக்கும். குழந்தைகளின் கல்விகொடுக்கும் காலத்தில் ஒருவர் குரூப் சி, குரூப் பி நிலையில் இருந்துவிட்டு ஓய்வு பெறும் நிலயில் குரூப் ஏ நிலையை அடைபவரால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வசதியை அளித்திருக்க முடியாது என்பது இந்த நாற்பது வயது என்பதற்கான காரணம்.







அடுத்து பெற்றோர் இருவர் குரூப் பி நிலையில் நேரடியாக அரசு வேலை பெற்றிருந்தால் அவர்களின் குழந்தைகள் கிரிமி லேயர்- வசதியான பிரிவில் வருவர். இடஒதுக்கீடு கிடையாது.







இது தவிர குரூப் பி, குரூப் சி நிலையில் வேலைபார்க்கும் பெற்றோரின் குழந்தைகள் நான் கிரிமி லேயர்- வசதியற்ற பிரிவினர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பெற்றோரின் ஆண்டு வருமானம் பல ஆண்டுகள் வேலை பார்த்த ஊதிய உயர்வின்மூலம் ஆறு இலட்ச ரூபாயை மீறினாலும் அதை. கருத்தில் கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. 




இவைதான் விதிகள்.







2. வருமானச் சோதனை:



யாரெல்லாம் அரசு வேலையைத் தவிர்த்து பிற வருமானம் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டு வருமானச் சோதனை என்று ஒரு சோதனை நடத்தப் பெறும்.







அதாவது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 6 இலட்சங்களுக்கு மேல் வருமானம் வரும் பெற்றோரின் குழந்தைகள் வசதியான பிரிவினர் - கிரிமி லேயர் என்றுகருதப்படுவர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதற்கு குறைவாக வருமானம் பெறுபவருக்கு இடஒதுக்கீடு உண்டு.







3. செல்வச் சோதனை :

ஒவ்வொரு மாநிலத்திலும் நில உச்ச வரம்பு சட்டம் உள்ளது. அந்த உச்ச வரம்பில் 85% அளவுகு மேல் நீர்ப்பாசன நிலம் வைத்துள்வர்கள் வசதியான பிரிவினர் வகைபாட்டில் வருவர். தமிழ் நாட்டில் நில உச்ச வரம்பு 15 ஏக்கர். அதில் 85% என்பது 12.75 ஏக்கர் நிலம்.




சரி இதெல்லாம் விதிமுறைகள். அனைவருக்கும் தெரியும்.







என்ன இப்பொழுது சிக்கல்?

இவ்வளவு காலமாக வருவாய்த்துறை இந்த ஆயணைகளைப் பின்பற்றி ஓபிசி சான்று வழங்குகிறது. அதை யூபிஎஸ்சி, டிஓபிடி ஏற்றுவந்தது. இந்த ஆண்டு ஓபிசி சான்றுகளை அறிவுக்கு ஒவ்வாத வகையில் டிஓபிடி கிளர்க்குகள் ஸ்குரூடினி செய்யத் தொடங்கினர்.







முதலில் பெற்றோரின் வருமானத்துக்கு வருமான வரிகட்டிய வருமானவரி ரிட்டன் கேட்டனர். வெறும் நாற்பதனாயிரம் வருமானம் வரும் கூலித் தொழிலாளியிடம் வருமான வரி ரிட்டன் கேட்ட பிரகஸ்பதிகளுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கலாம்.




அடுத்ததாக வருமான வரி ரிட்டன் ஃபைல் செய்யாதவர்களுக்கு வருவாய்த்துறையிலிருந்து வருமானச்சான்று கேட்டனர். அந்த வருமானச் சான்றில் வேலைசெய்யும் மகன், மகளது வருமானத்தைச் சேர்க்கத்தேவையில்லை என்று தாசில்தார், ஆர்ஐ, விஏஓக்களுக்கு புரிய வைக்க பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது.




இந்தச் சான்றுகளும் போதாது என்று ஒரு செல்ஃப் டிக்லரேஷன் கேட்டனர். இதில் ஒரே சான்றினை அனுப்பியபிறகும் வந்து சேரவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். எப்படியோ ஒரு வழியாக அதைச் சமர்ப்பித்தோம்.




அடுத்ததாக, மத்திய மாநில அரசுப் பணி தவிர்த்து மின் வாரியம், எல்ஐசி, பிஎஸ்என்எல், என்எல்சி, வங்கிகளில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளைக் குறி வைத்தனர். தனியார் நிறுவனப் பணியாளர்களும் தப்பவில்லை.







இதில் இவர்கள் ஒரே வினாவினை எழுப்பினர். உங்கள் பெற்றோர் குரூப் ஏ அலுவலர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம். மூன்று நாட்களில் சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் ஓபிசி கிளைம் செய்தது போலி என்று முடிவு செய்து விடுவோம் என்று கடிதம் அனுப்பினர்.







இவ்வளவுகாலம் இந்தச்சான்றுகளை ஏற்று வந்தவர்களுக்கு என்ன திடீர் என்று ஞானம் பிறந்தது என்று தெரியவில்லை. !







சில மாணர்கள் தங்களின் பெற்றோர் சாதாரண கிளரிக்கல் நிலையிலும், குரூப் சி, பி நிலையிலும் வேலை செய்யும் பணியாளர்கள் எனறு கூறி வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து சான்றுகளைப் பெற்று அனுப்பி வைத்தனர்.







அதைச் சொல்வதற்கு நீங்கள் ஆள் அல்ல. மத்திய அரசோ மாநில அரசோதான் சொல்ல வேண்டும் என்று இறுதித்தீர்ப்பு எழுதிவிட்டனர்.







மத்திய மாநில அரசுகளில் இதுபோன்று வாரியங்களில், பிஎஸ்யூக்களில் வேலை செய்யும் நபர்களையும் அரசுப்பணியாளர்களையும் இணைத்து குரூப் ஏ, பி, சி என்று எந்த வகைபாட்டில் வைப்பது என்பது குறித்து இதுவரை ஒரு அரசாணைகூட வெளியிடப் படவில்லை.







எனவே, 6 இலட்சரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர் அவர் குரூப் டி பதவியில் இருந்தாலும் வசதியானவர் - கிரிமி லேயர் என்று நிர்ணயம் செய்து அனைவரையும் ஓபிசியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டனர். ஜெனரல் ரேங்க் பெற்றவர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு வந்துள்ளது. மற்றவர்களுக்க பணிஏதும் கிடைக்கவில்லை!







இதுதான் இப்பொழுது எழுந்துள்ள சிக்கல்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum