கருப்பட்டி நெல்லி, கம்பு இலை அடை, வரகு புளிசோறு
Sat May 07, 2016 6:06 pm
கருப்பட்டி நெல்லி
உடலுக்குக் குளிர்ச்சியையும் பலத்தையும் தரும்!
கம்பு இலை அடை
கம்பு மாவு - 1/2 கோப்பை, வெல்லம் - 5 மேசைக் கரண்டி, நெய் - 1 மேசைக் கரண்டி, வாழைப்பழம் - 1, தேங்காய் (துருவியது) - 1 மேசைக் கரண்டி, ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை.
செய்முறை:
மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் சிறிது நீர்விட்டு நன்கு பிசைந்து, மாவை வாழை இலையில் மடித்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவு. அமினோ ஆசிட்,
பி-காம்ப்ளெக்ஸ் நிறைந்தது. பித்தப்பை கல்
வருவதற்கான வாய்ப்பைக்
குறைக்கிறது!
வரகு புளிசோறு
வரகு புழுங்கல் அரிசி - 1 கப், புளி - 20 கிராம்,
நல்லெண்ணெய் - 20 மில்லி,
வெந்தயத் தூள் (வறுத்துப் பொடித்தது) - 1 டீ ஸ்பூன்,
கடுகு - சிறிது, பெருங்காயம் - சிறிது,
பூண்டு - 10 பல், மஞ்சள் - 3 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வர மிளகாய் - 4, வெல்லம் - 1 சிட்டிகை.
செய்முறை:
வரகு அரிசியைச் சுத்தப்படுத்தி ஊறவைக்கவும். புளியுடன் மஞ்சள், உப்பு, 2ரு கப் நீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, பெருங்காயம், பூண்டு, வெந்தயம் போட்டுத் தாளித்துக் கொள்ளவும். விரும்பினால் கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு வதங்கியதும், கரைத்த புளித்தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெல்லம் சேர்த்து, ஊறிய அரிசியை நீரின்றி அதனுடன் சேர்த்து வேகவிடவும். இது, பயணக் காலங்களில்
சிறந்த உணவாக இருக்கும்; சர்க்கரையின் அளவைக்
கட்டுப்பாட்டில் வைக்கும். நெல்லரிசியைவிட ஐந்து மடங்கு
நார்ச்சத்து உள்ள வரகு, ரத்தத்தில் கொழுப்பின்
அளவைக் கட்டுப்படுத்தும்!
இரண்டு கைப்பிடி கல் சுண்ணாம்பை 3.5 லிட்டர் தண்ணீரில் போட்டு, சூடு அடங்கியதும் தெளிந்த நீரை மட்டும் வடித்து எடுக்கவும். நெல்லிக்கனியை தெளிந்த சுண்ணாம்பு நீரில் போட்டால், அந்த நீர் கத்திரிப்பூ நிறத்தில் மாறும். நெல்லியைப் பொறுத்து நிறத்தின் அடர்த்தி குறையவும் அதிகரிக்கவும் செய்யும். சிறிது நேரம் கழித்து, நெல்லியை மட்டும் எடுத்துத் துடைத்துவிட்டு, நீர்த்த கருப்பட்டிப் பாகில் கொதிக்கவிட வேண்டும். போதுமான அளவுக்கு வெந்ததும், வாய் அகலமான பாத்திரத்தில் பாகுடன் இருக்கும் நெல்லிக்கனியை மாற்றி, துணியால் மூடி தினமும் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். நீர் சுண்டும் வரை இப்படிச் செய்யலாம். விலை உயர்ந்த தேன்நெல்லியைவிட இது சிறந்தது.
உடலுக்குக் குளிர்ச்சியையும் பலத்தையும் தரும்!
கம்பு இலை அடை
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 1/2 கோப்பை, வெல்லம் - 5 மேசைக் கரண்டி, நெய் - 1 மேசைக் கரண்டி, வாழைப்பழம் - 1, தேங்காய் (துருவியது) - 1 மேசைக் கரண்டி, ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை.
செய்முறை:
மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் சிறிது நீர்விட்டு நன்கு பிசைந்து, மாவை வாழை இலையில் மடித்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவு. அமினோ ஆசிட்,
பி-காம்ப்ளெக்ஸ் நிறைந்தது. பித்தப்பை கல்
வருவதற்கான வாய்ப்பைக்
குறைக்கிறது!
வரகு புளிசோறு
தேவையான பொருட்கள்:
வரகு புழுங்கல் அரிசி - 1 கப், புளி - 20 கிராம்,
நல்லெண்ணெய் - 20 மில்லி,
வெந்தயத் தூள் (வறுத்துப் பொடித்தது) - 1 டீ ஸ்பூன்,
கடுகு - சிறிது, பெருங்காயம் - சிறிது,
பூண்டு - 10 பல், மஞ்சள் - 3 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வர மிளகாய் - 4, வெல்லம் - 1 சிட்டிகை.
செய்முறை:
வரகு அரிசியைச் சுத்தப்படுத்தி ஊறவைக்கவும். புளியுடன் மஞ்சள், உப்பு, 2ரு கப் நீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, பெருங்காயம், பூண்டு, வெந்தயம் போட்டுத் தாளித்துக் கொள்ளவும். விரும்பினால் கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு வதங்கியதும், கரைத்த புளித்தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெல்லம் சேர்த்து, ஊறிய அரிசியை நீரின்றி அதனுடன் சேர்த்து வேகவிடவும். இது, பயணக் காலங்களில்
சிறந்த உணவாக இருக்கும்; சர்க்கரையின் அளவைக்
கட்டுப்பாட்டில் வைக்கும். நெல்லரிசியைவிட ஐந்து மடங்கு
நார்ச்சத்து உள்ள வரகு, ரத்தத்தில் கொழுப்பின்
அளவைக் கட்டுப்படுத்தும்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum