வரகு போண்டா
Sun Dec 20, 2015 10:15 pm
வரகு போண்டா
வாய்க்கு ருசியைத் தரும் வரகில், வற்றாத சத்துகள் உள்ளன. வரகின் தோலில் ஏழு அடுக்குகள் உள்ளன. கிராமங்களில் உரலில் போட்டு, வெகு நேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது.
பலன்கள்
நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. அரிசிக்குப் பதிலாக வரகில் இட்லி, தோசை செய்யலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
வரகு போண்டா
300 கிராம் வரகு அரிசி மாவு, 200 கிராம் கடலை மாவு, 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது, சீரகத் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து, போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
#Doctorvikatan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum