ஹெச் -1பி விசா கேட்டு 2,36,000 விண்ணப்பங்கள்
Thu Apr 14, 2016 6:25 pm
அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கப்படும் ஹெச் 1பி விசா நடைமுறைகளில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) துறை நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அடுத்த நிதியாண்டுக்கான (ஏப்ரல் 1,2017) ஹெச் 1 பி விசாவுக்கான விண்ணப்ப காலத்தில் 2,36,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களிலிருந்து கணினி தேர்ந்தெடுக்கும் 65,000 விண்ணப்பங்களுக்கு மட்டும் ஹெச் 1பி விசா அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்தும் ஐடி துறையை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். அனுமதிக்கப்படும் அளவான 65,000 எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிக விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
இந்த கணினி குலுக்கல் முறையில் சரியான விண்ணப் பங்கள் அடையாளம் காணப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டன. இதன்படி வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா வில் பணியாற்ற அரசு அனுமதிக்கும் அளவான 65,000 ஹெச் 1 பி விசா அளிக்கப்படும். மேலும் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி படிக்க விரும்பும் 20 ஆயிரம் மாணவர்களுக்கும் இந்த விசா அனுமதிக்கப்படும். மாணவர்களுக்கான இந்த விசா அமெரிக்க கல்வி நிறுவனங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களில் உயர் கல்விக்காக வரும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 9-ம் தேதியிலிருந்து கணினி வழியிலான தேர்ந்தெடுக் கும் முறை மூலம் உத்தேச தேர்ந்தெடுக்கும் பணிகளை யுஎஸ்சிஐஎஸ் தொடங்கியுள்ளது. இதில் தேர்வானவர்கள் அடுத்த கட்ட தேர்வுகளுக்கு அனுமதிக்கப் படுவார்கள். அதிகபட்சமாக 65,000 விசா மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால் உத்தேச தேர்ந்தெடுப்பு என்பது இந்த தேர்வுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப் பங்களுக்கு அதற்கு செலுத்திய கட்டணங்களை விண்ணப்பதாரர் களுக்கு திரும்ப அளிக்கப்படும். போலி விண்ணப்பங்கள் கண்டறிய ப்பட்டால் அதற்கான கட்டணங் களை திரும்ப பெற முடியாது என்றும் யுஎஸ்சிஐஎஸ் கூறியுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்களுக்கு அளிக்கப்படும் இந்த ஹெச் 1 பி விசா பொதுவான விசா நடைமுறைகளிலிருந்து வேறுபட்டது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது. ஹெச் 1 பி விசா மூலம் அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 38 நாடுகளுக்கு சென்று இறங்கி விசா எடுத்து கொள்ளலாம். (ஆன் அரைவல் விசா) இந்திய பாஸ்போர்டுக்கு.
- சார்லி சாப்ளின் பேசி கேட்டு இருக்கிறீர்களா?
- ஏழு மணி நேரத்தில் பிரிட்டன் விசா சூப்பர் ப்ரையாரிட்டி விசா அறிமுகம்…….!
- மும்பை ஐஐடியில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
- அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum