பொன்னால் பதிக்கப்படவேண்டிய ஸ்பர்ஜனின் எழுத்துக்கள்
Sun Apr 03, 2016 6:27 am
1,வேதவசனத்தைப்போல் வேறெதுவும் என் ஆன்மாவை அசைப்பதில்லை. அது என்னைப் பறக்கச் செய்கின்றது, அல்லது பதறச் செய்கின்றது. அது என்னை வெட்டி வீழ்த்துகிறது. இல்லையேல் கட்டி எழுப்புகின்றது. தாவீதின் விரல்கள் வீணையை மீட்டியதைவிட வேதவசனங்கள் என்னை அதிகமாய் மீட்டுகின்றன.
2,ஆண்டவரை அறிய விரும்புகிறவன் அவரது வார்த்தையை அறியவேண்டும். அவரது வல்லமையைக் காணவிரும்புகிறவன் அவர் தம் வார்த்தையினால் செயலாற்றுவதைக் காணவேண்டும். அவரது திட்டத்தை முன்னறிய விரும்புகிறவன் அவரது வார்த்தையினால் அதைக் கண்டறியவேண்டும்.
3,அனைத்துத் தலைமுறை ஞானிகளின் அனைத்துக் கண்டு பிடிப்புகளையும்விட தேவனது ஒரு வசனம் அதிக நிச்சயமானது.
4,தத்துவ ஞானிகளின் 50000 வார்த்தைகளைப் பேசுவதைவிட இப்புத்தகத்தின் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே விரும்புகிறேன். எழுப்புதல் தேவையா? அப்படியானால் முதலாவது வேதத்திற்கு நாம் அளிக்கும் மதிப்பு உயிர்ப்பிக்கப்படவேண்டும். மக்கள் மனந்திரும்பவில்லையா? அப்படியானால் பிரசங்கங்களில் கதைகளை அடுக்காமல் கர்த்தருடைய வார்த்தைகளைச் சொல்லிப்பாருங்கள்.
5,நடமாடும் வேதமாயிருங்கள்.
6,இரத்தசாட்சிகள், மொழிபெயர்ப்பாளர்கள், விசுவாசவீரரின் இரத்தம் நமது வேதத்தில் தெளிக்கப்பட்டுள்ளது. நமது உபதேசமனைத்தும் இரத்தத்தில் முழுக்கி எடுக்கப்பட்டவை. அவற்றை அறிக்கையிட்டோர் வாளுக்குப் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் துண்டிக்கப்பட்டு எறியப்பட்டாலும் ஒரு சத்தியத்தையாகிலும் அவர்கள் பயந்து மறைத்துவைக்கவில்லை.
7,ஒரு வசனத்திற்காக நிற்க நாமனைவருமே சிறைக்கோ, ஏன் சுடுகாட்டிற்கோ சென்றாலும் அது பெரிய தியாகமல்ல.
8,பொன்னான புத்தகமே கோலியாத்தின் பட்டயத்தைக் குறித்துத் தாவீது சொன்னது உனக்கே தகும். அதற்கு நிகரில்லை. அதை எனக்குத் தாரும் ( 1.சாமு.21:9). நிணமும், கொழுப்பும், தேனும், திராட்சரசமும் நீயே. தேவதூதரின் மன்னாவும், கன்மலையாம் கிறிஸ்துவிலிருந்து வரும் ஊற்றும் நீயல்லவா. மனதுக்கு அமிர்தமும், ஆன்மாவிற்கு அப்பமும் நீதானே.
9,வேதவசனத்தைக் கண்டு அஞ்சுவானேன்? ஒரு வசனத்தைச் சந்திக்க நடுங்குவீர்களானால் அதைச் சந்திக்கத் தகுதிபெறும்வரை உங்களைத் தாழ்த்துங்கள். உங்கள் கொள்கையும் வேதமும் ஒத்துப்போகாவிடில் உங்கள் கொள்கைக்குக் கொள்ளிவைத்துவிட்டு வேதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சபையில் வேதத்திற்கு முரணானவை இருக்குமானால் அந்தச் சபையை விட்டு விலகுங்கள்.
10,நோயாளிகள் சிலர் மாத்திரை சாப்பிடச் சொன்னாலும் அறிவில்லாது அதைச் சுவைப்பர். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அதை உடனே விழுங்கவேண்டும். தெளிவான வசனங்களை கேள்வி கேட்டுக்கேட்டு சுவைத்துக்கொண்டேயிராமல் விசுவாசத்துடன் விழுங்கிவிடவேண்டும். கடின உபதேசங்கள் விசுவாசமென்னும் உன்னதப் பயிற்சியினால் ஆன்மாவிற்குள் செலுத்தப்படவேண்டும்.
11,அட்டை முதல் அட்டைவரை வேதம் தவறற்றது என நான் விசுவாசியாதிருந்தால் இப்பிரசங்க பீடத்தில் ஏறியிருக்கமாட்டேன்.
12,ஒரு வசனத்தின் விளக்கத்தை வேறு முறைகளை விட முழங்காலில் கற்றுக்கொள்வதே சாலச்சிறந்ததென அறிந்திருக்கிறேன். அதற்காக அகராதிகளையும் விளக்க வேதாகமங்களையும் புரட்டி எழுத்தின்படி அதன் அர்த்தத்தையும் ஒத்தவாக்கியங்களையும் பார்க்கக்கூடாதென்பதல்ல. ஆனால் அதெல்லாம் செய்து முடித்த பின்பு ஜெபத்தில் நிற்கும்போது தேவன் அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி என் மடியில் போட்டுவிடுவார்.
13,உனக்கு ஐயோ என்று விரலினால் எழுதக்கூடிய அளவிற்கு உன் வேதப்புத்தகத்தின் மேல் தூசி படிந்திருக்கிறதே.
14,வேதத்தைப்போல் இந்நாட்களில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் புத்தகம் வேறொன்றுமில்லை. பாசம் படர்ந்த புத்தகங்களின் எண்ணிக்கையிலும் வேதமே முன்னோடும் என்பதில் ஐயமில்லை. அதிகமாய் வாங்கி, அவசரமாய் ஒதுக்கி வைத்து, அவகாசமின்றி காத்திருக்கும் புத்தகங்களில் வேதத்தைப்போல் வேறில்லை.
15,வேதத்தை மறந்துவிட்ட கிறிஸ்தவனை அதின் அட்டைமீது படிந்துள்ள தூசியே நியாயந்தீர்க்கும்.
16,வேதத்தை தாங்களே ஆராய்வதைவிட்டு மக்கள் என் பிரசங்கப்புத்தகங்களைப் படிப்பார்களானால் அவற்றையெல்லாம் சுட்டுச் சாம்பலாக்கத் தயங்கேன். மாறாக என் புத்தகங்கள் வேதத்தைப் படிக்க மக்களை நடத்துமானால் அவற்றை அச்சிட்டதற்காக மகிழுவேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum