தமிழ் எழுத்துக்கள்
Wed May 01, 2013 6:08 am
உயிராகி
மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு
நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால்
வகுக்கப்பட்டுள்ளது.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)
ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம்
ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா ?
சம்பந்தம் இருக்கிறது.
இந்த
21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள்
உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன்
120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள்
குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி
உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே. !
இணையத்தில் வந்த பதிவின் பகிர்வு...
Re: தமிழ் எழுத்துக்கள்
Wed May 01, 2013 6:09 am
நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...
க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.,
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.,
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில்
ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களைத்
தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன், உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…
த் + அ = 'த' வாகவும்,
ம் + இ = 'மி' யாகவும்,
ழ் + உ = ‘ழு’ வாகவும்
என்று "தமிழு" என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.
மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா..?!?!?!?!
தகவல் மூலம்: அதிசயம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum