கோடைகாலத்தில் உடல் சூடு நீங்க
Thu Mar 24, 2016 7:46 pm
உடல் சூடு நீங்க...
கஸ்தூரி மஞ்சள் பொடியில் சிறிது உப்பு கலந்து தேங்காய் எண்ணெயுடன் குழைத்து உடலில் தேய்த்து 15 நிமிஷம் ஊறியபின் குளித்தால் சருமம் புது பொலிவுடன் இருக்கும். உடல் அரிப்பு நீங்கும். இம்மாதிரி குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக பயத்தம் மாவு அல்லது கடலைமாவு தேய்த்து குளிக்கலாம்.
மோரில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து வாய் கொப்பளித்தால் வாய்நாற்றம் நீங்கும்.
சிலருக்கு உள்ளங்காலில் எரிச்சல் இருக்கும்! அவர்கள் இரவில் படுக்கப் போகுமுன் உச்சந்தலையிலும் உள்ளங்காலிலும் சிறிது விளக்கெண்ணையை அழுந்த தேய்த்தால், உடல் சூடு நீங்கி கால் எரிச்சலும் நீங்கும்.
வயிறு உப்புசமாக இருந்தால் கொஞ்சம் மோரில் பெருங்காயம் கலந்து குடித்தால் வாயு நீங்கி உடனடி நிவாரணம் கிடைக்கும்.
காலில் முள் குத்தி பாதி முள் தங்கி விட்டால், எருக்கம் பாலை அந்த இடத்தில் பிழிய முள் தானாக வெளியேறிவிடும்.
ருத்திராட்ச கொட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரால் வாய் கொப்பளித்தால் வாய் வெடிப்பு குணமாகும்.
சருமநோய் உள்ளவர்கள் முந்திரி பழம் சாப்பிடக் கூடாது. பிரச்சனை மேலும் அதிகமாகும்.
அரச மரத்தின் அடிமரப் பாலை பாதத்தில் தடவி வந்தால் சீக்கிரமே பித்த வெடிப்பு மறைந்து கால் அழகாகும்.
சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காதது மாதிரி உணர்வார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் அரை டம்ளர் வெந்நீர் குடித்தால் போதும். தாகம் சட்டென்று நிற்கும்.
கீழாநெல்லி இலையை அரைத்து பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். ஆனால் அச்சமயத்தில் புளியல்லாத பத்திய சமையல் சாப்பிட வேண்டும்.
தாமரை இலையில் தொடர்ந்து உணவு சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.
அகத்தி கீரைக்கு குளுமை சக்தியுண்டு. ஏகாதசி பட்டினி இருந்த மறுநாள் அகத்தி கீரையும், நெல்லிமுள்ளி பச்சடியும் சாப்பிட்டால் உடல் குற்றாலத்தில் குளித்த மாதிரி குளுகுளுவென்றாகி விடும்.
அகத்தி கீரை பித்தம் தணிக்கும். ரத்த கொதிப்பையும் கட்டுப்படுத்தும். மேலும் அகத்திக் கீரையை பச்சையாகவே மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும்.
சிறு குழந்தைகளுக்கு வேப்பங் கொழுந்து சாப்பிடக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகளை அடித்துக் கொண்டு வந்து விடும். ஆனால் குழந்தைகள் லேசில் சாப்பிடுமா? அதற்கு ஒரு வழி... வேப்பங் கொழுந்தை அம்மியில் வைத்து மையாக அரைத்து உருண்டையாக்கி கொள்ளுங்கள். சுண்டைக் காயளவு உருண்டையை குழந்தைகளின் அடிநாக்கில் வைத்து, கூடவே ஒரு பெரிய ஸ்பூன் தயிரையும் ஊற்றவும் கசப்பு தெரியாமல் விழுங்கி விடுவார்கள்.
வாழைத்தண்டை வட்டமாக நறுக்கி, எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து ஆண்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் தோன்றாது.
சிலருக்கு எண்னை தேய்த்து குளிக்கப் பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து ஷாம்ப்பூ போட்டு குளித்தால் உடல் குளுமை அடையும். எண்ணை தேய்த்து குளித்த பலன் கிடைக்கும்.
பள்ளிப் பிள்ளைகளுக்கு தலையில் பேன், பொடுகு தொல்லைகள் சகஜம். அதற்கான நிவாரணி, ஒரு பிடி கருந்துளசியுடன் மூன்று பிடி வேப்பிலையும் துளி உப்பும் சேர்த்து மையாக அரைத்து தலையில் பூசி அரைமணி ஊற விடுங்கள். பிறகு செம்பருத்தி இலையை கசக்கி அதன் சாறுடன் சீயக்காய் கலந்து தலையில் தேய்த்து அலசவும். இரண்டொரு முறை இம்மாதிரி செய்து வந்தால் பேன், பொடுகு போயே போச்!
மதியம் ஒரு பிடி கொண்டை கடலை சுண்டல், அல்லது முழு உளுந்து அல்லது மொச்சை கொட்டை சுண்டல் சாப்பிடுவது நீரிழிவுக்காரர்களுக்கு ரொம்ப நல்லது. தினம் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயப் பொடி சிறிதளவு சாப்பிடுவதும் நல்லது. கசப்பு தெரியாமலிருக்க ஒரு கரண்டி தயிர் குடிக்கவும்.
உணவு உண்டு மூன்று மணிநேரத்துக்கு நொறுக்கு தீனிகள் எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுக்கு நல்லது.
வெள்ளரிக்காயை துருவி பிழிந்து அதன் ஜலத்தை குடித்தால் நீர்க்கடுப்பு நீங்கும். குறிப்பாக கோடை காலத்தில் அடிக்கடி குடிக்க வேண்டும். சிறந்த பலனளிக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum