நல்ல கேள்வியும் - நலமான பதிலும்
Thu Mar 24, 2016 7:23 am
கேள்வி: வருடா வருடம் சலிப்பூட்டும் குருத்தோலை ஞாயிறு... கிறிஸ்மஸ் கீத பவனி போன்ற சடங்குகள் தேவையா ? இதையெல்லாம் ஆண்டவர் ஏற்கனவே ஒழித்துவிட்டாரே ?
பதில்: ஆண்டவர் எதையும் எதிர்க்கவில்லை... எதையும் மாற்றிவிடவில்லை... செய்வது எதுவானாலும் அதை உள்ளன்போடு செய்யுங்கள் என்றே சொன்னார். பக்திவிருத்திக்கேதுவாக செய்யுங்கள் என பவுலடிகள் சொல்லுகிறார். யுகங்களைக் கடந்தும் ஒரு மார்க்கம் உயிரோட்டமுள்ளதாக இருக்கவேண்டுமானால் இதுபோன்ற விழாக்கள் அவசியமே. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் வாசம் உண்டு என்று சொல்லி சமூக நல்லிணக்கம் வளர்த்த இந்த மண்ணில் இப்படி பிரிந்து சிதைந்து சிந்தையினால் வேறுபட்டு செல்லுவது நம்மையே பெலவீனப்படுத்திவிடும். இப்படி ஒவ்வொருவருடைய யோசனைக்கும் ஏற்ப சபையை மாற்றிக்கொண்டே வந்தால் விரைவில் சபையென்ற ஒன்றே இருக்காது. அதுவே எதிரியின் நோக்கமாகும். பிரிவினை எண்ணம் அது எந்த ரூபத்தில் வந்தாலும் சாத்தானின் பட்டறையிலிருந்தே புறப்படுகிறது. இன்றைக்கு சடங்கு என்று சொல்லப்படும் ஒவ்வொன்றையும் நம்மை ஒருங்கிணைக்கவே அன்று நம் சபை பிதாக்கள் ஏற்படுத்தினர். ஏன் சடங்காக செய்யாமல் ஆர்வத்தோடு செய்யும் அறிவை நாம் பெறக்கூடாது ? மொழியறியாத ஜனங்களிடம் சத்தியத்தை சொல்லுவது ஊமையனுக்கும் செவிடனுக்கும் கதை சொல்லுவதைப் போலவே இருந்திருக்கும். எனவே அன்று இவையெல்லாம் தேவைப்பட்டன. இதை தலைமுறைதோறும் நினைவுகூறுங்கள் என்று ஆண்டவரே சொல்லியிருக்க கிறிஸ்துவின் புண்ணியங்களைக் குறித்த புனிதமான நினைவுகளைப் பழிப்பது நம்மை சிலுவைக்கும் அதன் இரக்கத்துக்கும் தூரமானவர்களாக்கிவிடும்.
நன்றி: Samuel Churchill

Permissions in this forum:
You cannot reply to topics in this forum