செழிப்பு உபதேசம் – சில சிந்தனைகள்
Fri Mar 18, 2016 5:31 pm
சுத்த சுவிசேஷமாகிய ஆதி அப்போஸ்தலரின் ஆரோக்கிய உபதேசத்தை பின்பற்றினால் இம்மையில் நிச்சயமாக உபத்திரவம் வரும் ஆனால் மறுமையில் நித்திய செழிப்பிற்குள் வாழுவோம்,
வேறொரு சுவிசேஷமாகிய அமெரிக்காவின் செழிப்பு உபதேசத்தை பின்பற்றினால் இம்மையில் (இஸ்ரவேலர் காடை பெற்றுக்கொண்டது போல) ஒருவேளை செழிப்பு வரலாம் ஆனால் மறுமையில் நித்திய உபத்திரவத்துக்குள் செல்ல வேண்டும்.
நீங்கள் எதை தெரிந்து கொள்ளுவீர்கள்?
பொருளாதார ஆசீர்வாதத்துக்கு செழிப்பு உபதேசிகள் ஆபிரகாமை உதாரணம் காட்டி பிரசங்கிப்பார்கள். மக்களும் அதைக் கேட்டு ஆபிரகாமைப் போல பொருளாதாரத்தில் ஆசீர்வதிக்கப்படுவது எப்படி என்று தியானிப்பார்கள், அதற்காக விசுவாச அறிக்கை, தசமபாகம் இப்படி பல காரியங்களை செய்து வானத்தின் பலகணி திறந்து காசு கொட்டாதா என்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! ஆபிரகாம் பொருளாதார செழிப்பை தியானித்து, அதை விசுவாச அறிக்கை செய்தெல்லாம் தனது ஐசுவரியத்தை பெற்றுக் கொள்ளவில்லை. இவர்களைப்போல நூறு மடங்கு திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் தசமபாகம் கொடுக்கவில்லை.
நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் எனவே வாக்குத்தத்ததின்படி அவன் ஐசுவரியத்துக்கு பங்காளிகள் என்று செவிப்பறை கிழிய அறிக்கையிடுகிறவர்கள் சிந்திக்க:
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள். ஆபிரகாமைப் போலத்தான் அவர் பெற்றதும் இருக்கும். அப்பனைப் போலத்தான் பிள்ளை! அப்பன் ஐசுவரியத்துக்கு பின்னால் ஓடவில்லை. அவனுக்குப் பின்னால் ஐசுவரியம்தான் நாயைப்போல ஓடி வந்தது. ஆபிரகாமின் பிள்ளை ஆபிரகாமைப் போல கீழ்ப்படிகிறதாயும் தேவனுக்காக பெற்ற மகன் உட்பட எல்லாவற்றையும் விட்டு விடுகிறதாயும்தான் இருக்கும்.
ஐசுவரியத்துக்கு பின்னால் ஓடியவர்கள் பொருளாசைக்காரராகிய பரிசேயர்கள். அவர்களது பிள்ளைகளும் அப்படியே இருக்கிறார்கள்!
இம்மையில் இயேசுவுக்காக பெற்றோரையும், பிள்ளைகளையும், சகோதரரையும் (மிக முக்கியமாக) வீட்டையும் நிலங்களையும் விட்டால் அது நூறத்தனையாக இம்மையிலேயே திருப்பி கிடைக்குமா? அப்படித்தானே வேதம் (மாற்கு 10:28-30, லூக்கா 18:28-30) சொல்லுகிறது என்று சில சகோதரர்கள் கேட்கிறார்கள். இதன் மூலம் பொருளாதார செழிப்பு சாத்தியம்தானே என்கிறார்கள்.
இரத்த சம்பந்தமான பெற்றோரையும், பிள்ளைகளையும், சகோதரரையும் கிறிஸ்துவினிமித்தம் விட்டுவிட்டால் நூறத்தனையாக இரத்த சம்பந்தமான பெற்றோரையும், பிள்ளைகளையும், சகோதரரையும் திருப்பி பெற்றுக்கொள்ளுதல் சாத்தியமா?
இயேசு அப்படியா சொல்லியிருக்கிறார், நிச்சயமாக இல்லை. இயேசு குறிப்பிட்டது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஐக்கிய உறவைப் பற்றியது, புரியவில்லையானால் மத்தேயு 12: 46-50 வசனங்களை வாசித்துப் பாருங்கள்
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் (மத்தேயு 12:50)
நாம் நூறத்தனையாக திரும்பப் பெற்றுக்கொள்வது நம் சொந்த இரத்த சம்பந்தமான உறவையல்ல, இயேசுவின் இரத்தத்தின் சம்பந்தத்தினால் உண்டான ஆவிக்குரிய உறவுகளை! அதுபோல நூறத்தனையாய் பெருகிப்போன சகோதரர்கள் தங்கள் நிலங்களையும் சொத்துக்களையும் பொதுவில் வைத்து அனுபவித்தார்கள். ஒருவனும் தனக்குரியதை தன்னுடையது என்று சொல்லவில்லை என்று வேதம் சொல்லுகிறது (அப் 2: 44-47, அப் 4:32-36), இதுதான் நூறத்தனையாக நிலங்களையும் வீடுகளையும் இம்மையிலேயே பெற்றுக்கொள்ளுதல்.
சகோதரரருக்குள் சகலமும் பொதுவாயிருக்கும் என்றுதான் கர்த்தர் சொன்னாரே தவிர நீ விட்ட ஒரு வீட்டுக்கு ஈடாக நூறு வீடுகளை உனக்கு சொந்தமாக பட்டா போட்டுக் கொடுப்பேன் என்று சொல்லவில்லை. ஆண்டவர் என்ன ரியல் எஸ்டேட்டா நடத்துகிறார்? அப்படிப்பார்த்தால் பவுல் சுவிசேஷத்துக்காக இழந்தவைகளுக்கு ஈடாக தேவன் ஆசியாவையே அவருக்கு சொந்தமாக பட்டா எழுதிக் கொடுத்திருக்க வேண்டும்.
இயேசு சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்த (மத் 6:9-13) ஜெபம் வேதத்தில் இருக்கிறது, சீஷர்களுக்காக பண்ணிய ஜெபமும் (யோவா 17) இருக்கிறது. இரண்டிலுமே சீஷர்களின் பொருளாதாரச் செழிப்புக்காக ஒரு விண்ணப்பமுமில்லை.
பணத்துக்காக எப்பேற்பட்ட Risk-கும் எடுக்க தயாராக உள்ள மனிதர்கள் இருக்கும் இந்த உலகில் சிரமமற்ற பொருளாதார செழிப்பை ஒரு மார்க்கம் வாக்குப்பண்ணுமானால் அதை பின்பற்ற எல்லோரும் தயாராகத்தானே இருப்பார்கள்???
பலரும் நம்புவதுபோல பரலோக ராஜ்ஜியத்தின் சுவிசேஷமானது உண்மையிலேயே “செழிப்பின் சுவிசேஷமாய்” இருந்தால், அதை இடுக்கமான வாசலென்றும் அதின் வழியாக சிலர்தான் உள்ளே நுழைவார்களென்றும் இயேசு சொல்லியிருந்திருக்க மாட்டாரே!
ஊழியத்தை மிக அற்பமான நிலையில் ஆரம்பித்தேன், இப்போது ஊழியம் பரந்து விரிந்திருக்கிறது, ஊழியத்துக்கு தேவையான சொத்துக்கள் குவிந்திருக்கின்றன, திரளான மக்கள் எங்களை பின்பற்றுகிறார்கள், மிகவும் பிரபலமாகிவிட்டேன், ஊழியத்தின் நிமித்தம் பல பணக்கார நாடுகளுக்கு பயணமாகிறேன். மிக மிக வசதியான வாழ்க்கையை ஆண்டவர் கொடுத்திருக்கிறார், அவரது ஆசீர்வாதத்தினால் ஒரு இராஜாவைப்போல செழிப்பாக வாழுகிறேன் என்று ஒருவர் சாட்சி சொல்லுவாரானால் அவரது சாட்சியை வேத வெளிச்சத்தில் ஆராய்ந்து பாருங்கள்.
1. இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் அவருக்கு இப்படி நடந்ததா? அவர் தலையில் கிரீடம் வைத்து அவரை இராஜாவாக்க முனைந்த போது அப்படிப்பட்ட வாழ்க்கையை அவர் ஏற்றுக்கொண்டாரா?
2. புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்கள் யாருடைய வாழ்விலேனும் இப்படி நடந்ததுண்டா? ஊழியம் செய்து செல்வச் செழிப்புடன் இராஜாவைப்போல வாழ்ந்த ஆதி அப்போஸ்தலர் ஒருவரை அடையாளம் காட்டமுடியுமா?.
3. எனக்கு ஊழியம் செய்தால் இந்த பூமிக்குரிய வாழ்வில் உன்னை பிரபலமாக்குவேன், பொன் பொருளை அள்ளிக்கொடுப்பேன், சொத்து சுகத்தோடு சம்பூரணமாக வாழ்வாய், பூமியின் மகிமையையெல்லாம் உனக்கு கொடுப்பேன் என்று புதிய உடன்படிக்கையில் ஏதேனும் வாக்குத்தத்தம் இருக்கிறதா?
மேற்கண்ட 3 கேள்விகளுக்கும் “இல்லை” என்பதே பதிலாக இருக்கமுடியும். அப்படியானால் ஊழியம் செய்பவர்களுக்கு என்னதான் வாக்குத்தத்தம் புதிய உடன்படிக்கையில் தரப்பட்டிருக்கிறது?
உபத்திரவம் (மத் 24:9, யோவா 15:20, யோவா 16:33), நிந்தை, அவமானம் (எபி 13:13, அப் 5:41 ), உலகத்தாரின் எதிர்ப்பு (யோவான் 15:18,19 ), துன்பம் (2தீமோ3:12) இந்த வாக்குத்தத்தங்கள் இதை எழுதும் எங்களுக்கும் பொருந்தும்.
மேற்கண்ட காரியங்களைத்தான் நாம் இயேசு கிறிஸ்துவின் வாழ்விலும், அப்போஸ்தலர்களின் வாழ்விலும் ஆதி மிஷனரிகளின் வாழ்விலும் பார்க்கிறோம். இந்த பூமிக்குரிய வாழ்வில் உபத்திரவமும் நித்திய வாழ்வில் வார்த்தைக்குள் அடங்காத ஆசீர்வாதமும் அவரது அடிமைகளுக்கு வாக்கருளப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களது கண்களை நித்தியத்தின்மீது பதியவைத்தே ஓடவேண்டும்.
அப்படியானால் எனக்கு ஊழியம் செய்தால் பொன்னையும், பொருளையும், பேரையும், புகழையும் இந்த பூமியில் உனக்குக் கொடுப்பேன் என்று வாக்குத்தத்தம் பண்ணினது யார்? எனக்குத் தெரிந்து அப்படி வாக்குத்தத்தம் பண்ணினவன் ஒரே ஒருவன்தான்.
அவன் சாத்தான்….
பிசாசு இயேசுவை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருவேன்” என்றான். (மத்தேயு 4:8,9)
ஊழியத்தின் தேவைகளை இயேசு சந்திப்பார் என்பதை நாங்கள் மறுக்கவில்லை, அதுவேறு. ஊழியத்தின் நிமித்தம் ஒருவனுக்கு பேர்,புகழ், செல்வம், உலக அங்கீகாரம் வந்ததானால் அது இயேசுவால் அல்ல அப்படிப்பட்டவன் இயேசுவின் ஊழியக்காரன் அல்ல, சாத்தானின் ஊழியக்காரன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum