கள்ள உபதேசம் உருவாகக் காரணம் என்ன?
Tue Dec 15, 2015 11:53 pm
கள்ள உபதேசம் உருவாகக் காரணம் என்ன?
இன்றைக்குக் கிறிஸ்தவம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதோ அந்த அளவிற்கு கள்ள உபதேசங்களும் வளர்ந்துள்ளன. ஆனால் இந்த கள்ள உபதேசத்தைப் போதிப்பவர்களும் நாம் பயன்படுத்தும் வேதாகமத்தையே வைத்திருப்பதுதான் நமக்கு ஆச்சரியத்தைத் தருக்கிறது. இது எதனால்? இதற்கு சில கேள்விகளைக் கேட்டுப்பார்க்கலாம்?
1. வேதம் தவறானதா?
2. வேதத்தில் எழுதித் தரப்பட்ட வார்த்தைகள் குழப்பமானதா?
3. வேதாகமத்தை யாராலும் புரிந்துகொள்ளமுடியாதா? இதற்கான பதில்
“தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க”, (யோவான் 10:35)
அதாவது கிறிஸ்து வேதத்தைப் பற்றிச்சொல்லும் போது “வேதம் தவறாததாயிருக்கிறது” என்றார். ஆக ஒன்று நமக்கு புலப்படுகிறது வேதத்தில் எந்த தவறும் இல்லை, அப்படியானால் அதை வாசிக்கும் நம்மிடம் தான் தவறு உள்ளது. வேதத்தில் எழுதித்தரப்பட்ட வார்த்தைகள் குழப்பமானதா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம்.
"நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்" (2 பேதுரு 3:15,16)
பேதுரு இவைகளைக் குறித்து எழுதும்போது வேதத்தில் ஒரு குழப்பமுமில்லை ஆனால் கல்லாதவர்களும், உறுதியில்லாதவர்களும் வேதத்தைப் புரட்டுகிறார்கள் என்று சொல்லுகிறார். ஆக வேதத்தை வாசிக்கும்போது நாம்தான் தவறு செய்கிறோம் வேதத்தில் ஒரு குழப்பமும் இல்லை என்பதே உண்மை.
அப்படியானால் வேதத்தை யார்தான் புரிந்துகொள்ளமுடியும்? நன்கு படித்தவர்கள், பண்டிதர்கள், பட்டம் பெற்றவர்கள், போதகர்கள், இப்படிப்பட்டவர்கள்தான் வேதத்தை விளங்கிக்கொள்ளமுடியுமா? என்று நீங்கள் கேட்கலாம், இதற்கு பதில் இல்லை என்பதே.
வேதம் பட்டம் பெற்றவர்களுக்கு மாத்திரமல்ல, சாதாரண மனிதர்களுக்கும் எழுதித் தரப்பட்டது, இதை புரிந்துகொள்ள சில போதுவான வழிமுறைகளை அறிந்திருந்தாலே போதும். ஆனால் பேதுரு சொன்னதுபோல உறுதியில்லாதவர்களும் கல்லாதவர்களுமே வேதத்தைப் புரட்டுகிறார்கள்.
இங்கு பேதுரு கல்லாதவர்கள் என்று யாரைச் சொல்லுகிறார்? சிலர் நினைப்பது போல எழுதப்படிக்க தெரியாதவர்களைத்தான் பேதுரு சொல்லுகிறார் என்பர் ஆனால் இது உண்மையல்ல. ஏன்?
கல்லாதவர்கள் மற்ற வேதவாக்கியங்களை புரட்டுகிறது போல இந்த வேதத்தையும் புரட்டுகிறார்கள் என்று பேதுரு கூறினார், இவர்கள் மற்ற வேதவாக்கியங்களை புரட்டமுடியும் என்று சொல்லுகிறதினாலே நிச்சயம் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்று உங்களுக்கு நிரூபணமாகிறதல்லவா.
இவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்றால் பின்னே ஏன் பேதுரு கல்லாதவர்கள் உறுதியில்லாதவர்கள் என்று சொன்னார் அப்படியானால் என்ன அர்த்தம்? அதாவது....
வேதத்தில் உள்ள ஒரு வசனத்தின் அர்த்தத்தை அறிந்துகொள்ள ஒட்டுமொத்த வேதத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. உதாரணத்திற்கு......
ஒரு வசனத்தைப் பார்ப்போம்...
(லூக்-5:14) அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார்.
இயேசு குஷ்டரோகமுள்ள ஒரு மனிதனை சுகப்படுத்தினதும் பலி செலுத்தச்சொன்னார் என்று பார்க்கிறோம், இப்போது நாம் இதை பின்பற்றமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது. ஏனென்றால் கிறிஸ்து சிலுவையில் பலியானவுடன் இதெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது நாமறிந்ததே. ஆனால் நாம் எப்படி இதை அறிந்துகொண்டோம், சுவிசேஷ புத்தகங்களை வாசித்ததால் அல்ல நிரூபத்தில் வெளிபடுத்தப்பட்ட சத்தியத்தை அறிந்திருந்ததால் நமக்கு இது எளிதாக விளங்கிவிட்டது.
இப்போது ஒருவர் இந்த ஒரே ஒரு வசனத்தை மாத்திரமே வாசிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் என்ன ஆகும்? அவரும் பலி செலுத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான், அதேசமயம் அவருடைய கூற்றுப்படி வேதத்தின் பிரகாரமே செய்வதாகவும் தர்க்கம் செய்வார் அப்படித்தானே! இது எதனால் வந்தது வேதத்தின் மற்ற பகுதியை அறியாததால் வந்தது, இவர்களே கல்லாதவர்கள் உறுதியில்லாதவர்கள்.
ஆக வேதத்தில் தவறுமில்லை, குழப்பமுமில்லை என்பது தெளிவாகிறது. அதே சமயம் வேதத்தை எல்லோரும் வாசித்து தெரிந்துகொள்ள முடியுமா என்றால் இல்லை எனலாம். அப்படியானால் வேதத்தை யார்தான் தெரிந்துகொள்ள முடியும் என்று பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
வேதத்தை எழுதிக்கொடுத்தது மனிதனாக இருந்தாலும் அவர்களை பயன்படுத்தினது பரிசுத்த ஆவியானவர், ஆக மறுபடியும் பிறந்த ஒருவனால் தான் இந்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு கருத்தையும் அறிந்து கொள்ளமுடியும். அது மாத்திரமல்ல இதில் சொல்லப்பட்ட கட்டளைகளுக்கு அவனால் மாத்திரமே கீழ்படியவும் முடியும்.
Re: கள்ள உபதேசம் உருவாகக் காரணம் என்ன?
Tue Dec 15, 2015 11:54 pm
பயிர்களுக்கு எப்படி களை பிரச்சனைகளைக் கொடுக்கிறதோ அதேபோல சபைக்கு இந்த கள்ளப்போதகர்கள் மிகுந்த பிரச்சனையாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்றைக்கு உள்ள கள்ள போதகர்களையும், கள்ள சபைகளையும் இனங்கண்டு நம் சபைவிசுவாசிகளைக் காத்துக்கொள்வது அவசியமாயிருக்கிறது. இந்த கள்ள உபதேசிகள் நம்மோடும் நம் சபையோடும், கலந்திருப்பதுதான் வேதனையானது.
இந்த மாதிரியான போதனைகளுக்கு என்ன காரணம் என்று பார்த்தால், அது வேதாகமத்தை தவறான கண்ணோட்டத்தில் வாசித்ததினால் வந்த விளைவு எனலாம். ஒருவர் எந்த கண்ணோட்டத்தோடு வேதத்தை வாசிக்கிறார் என்பதை வைத்துத்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.
பொதுவாக வேதாகமத்தை அதை எழுதிக்கொடுத்த கண்ணோட்டத்திலே வாசிப்பதுதான் முறையானது. அதை விட்டுவிட்டு தங்கள் இஷ்டப்படி வேதாகமத்தை வியாக்கியானம் செய்யும்போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. பொதுவாக கள்ள உபதேசிமார்கள் வேதம் வாசிக்கும்போது செய்யும் பிழைகளாவன....
1. வேதத்தில் ஒரு வசனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒரு சில வசனத்திற்கு குறைவான முக்கியத்துவம் கொடுத்தல்
2. ஏற்றுக்கொள்ள ஏதுவானவற்றை ஆதரித்தும் ஏற்றுக்கொள்ள கஷ்டமானவைகளை ஒதுக்கி வைப்பது.
3. மொழிபெயர்ப்புகளில் உள்ள பிழைகளை அறிந்துகொள்ளாமல் வியாக்கியானம் செய்வது.
4. பண ஆசையுள்ளவர் வேதத்தில் உள்ள ஆசீர்வாதமான வசனத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுப்பாரோ, அதேபோல நமது ஆசையையும், விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு வேதத்தை விளக்குதல்...
5. மனிதர்களைப் பிரியப்படுத்த வேதத்தில் வார்த்தைகளை தேடிக்கண்டுபிடிப்பது..
6. நடைமுறைச் சிக்கல்களை மையமாகக் கொண்டு வேதாகமத்தை வியாக்கியானம் செய்வது..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum