நமக்கு வாய்த்துள்ள அடிமை நல்ல புத்திசாலி
Wed Mar 02, 2016 8:27 am
குழந்தைக்குச் சூட்ட நல்ல பெயர் கூறுக’ என்று தினமும் கோரிக்கைகள் வருகின்றன. முதலில் ‘அட... நம்மிடம் பெயரிடக் கோருகிறார்களே...’ என்று இறும்பூது எய்தியபடியே பெயர் சொல்லத் தொடங்கினேன்.
சில பெயர்களைச் சொன்னதும் கேட்டுக்கொள்வார்கள். பிறகு ‘க அல்லது ந என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கூறுக...’ என்பார்கள். ‘நீங்கள் தொடங்கவேண்டிய எழுத்து கா நெடில் அல்ல. க குறில்...’ என்பதுபோல் இருக்கும் அது. smile emoticon மண்டையை உடைத்து அவ்வெழுத்துகளில் தொடங்கும் பெயர்களைச் சொன்னால் அவற்றுக்கு என்ன பொருள் என்று கேட்பார்கள். பொருள் விளக்கம் சொன்னதும் சிறிய அமைதி காணப்படும். பிறகு, ‘உங்ககிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறோம்... உங்களால முடியும்...’ என்பார்கள். ’இது என்னடா வம்பாப் போச்சு’ என்று வெளியே சொல்ல முடியுமா ? துவைத்த துணிபோல் மூளையைப் பிழிந்து மேலும் சில பெயர்களைச் சொல்வேன். கோபிநாத்போல ‘வேற... வேற...’ என்பார்கள்.
‘நமக்கு வாய்த்துள்ள அடிமை நல்ல புத்திசாலி...’ என்று அருகிலிருப்போரிடம் கூறிக்கொள்வார் என நினைக்கிறேன். நான் இங்கே அழாத குறையாக மண்டையைக் குடைந்து பெயர்களைத் துழாவிக்கொண்டிருப்பேன்.
நல்ல தமிழ்ப்பெயராகக் கேட்டுக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் நன்றி சொல்லி அகன்றவர்களிடம் பின்னொருநாள் ‘பெயர் சூட்டு முடிந்ததா ?’ என்று கேட்பேன். ‘சூட்டிவிட்டோம். பரிபிக்ஷிதா...’ என்பதுபோல் ஒரு பெயரைச் சொல்வார்கள்.
என் பிள்ளைகளுக்குப் பெயரிடக்கூட இவ்வாறு துன்புற்றதில்லை. அவர்களைச் சமாளிக்க முடியாமல் கணினியை மூடிவிட்டு ஓடத்தொடங்கினேன்.
இப்போதெல்லாம் குழந்தைக்குப் பெயர் கேட்டால் இணையத்தில் தேடிக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுகிறேன். அப்படியும் விடுகிறார்களா ? ‘அதெல்லாம் பார்த்துட்டோம். இருந்தாலும் நீங்களும் சொல்லுங்க...’என்கிறார்கள். ‘குழந்தைக்குப் பெயர் தேரும் உரிமை, பெயரிடும் உரிமை தாய்தந்தையர்க்கே உண்டு. எனக்கு இல்லை...’ என்று கூறிவிட்டுத் தப்பி ஓடுகிறேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum