குழந்தை முதல் வாலிபப்பருவம் வரை பரிணாம வளர்ச்சி நிலைகள்
Fri Feb 26, 2016 9:44 pm
குழந்தை முதல் வாலிபப்பருவம் வரை பரிணாம வளர்ச்சி நிலைகள்
பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்
தலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக் கொண்டு இருக்கும். திடீரென்று உருவாகும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல். கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருத்தல். குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்து வைத்து கொள்ளுதல்.
6 முதல் 12 வாரங்கள்
* குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
* பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.
* 2 மாதங்கள் – புன்சிரிப்பு
* 4 மாதங்கள் – கழுத்து நிற்பது
* 8 மாதங்கள் – எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காருதல்
* 12 மாதங்கள் – எழுந்து நிற்பது
3 மாதங்கள்
* மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகைச் சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
* குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
* குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
* குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.
6 மாதங்கள்
* குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.
* தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
* குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.
* எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.
* குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
* குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.
9 மாதங்கள்
கைகளை ஊன்றியோ ,எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும். குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.
12 மாதங்கள்
குழந்தை எழுந்து நிற்கும் ‘மாமா’ போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும். வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.
18 மாதங்கள்
யாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரைப் பிடித்துக்கொண்டு குடிக்கும். பால் புட்டிகள் ஏதும் இனிமேல் தேவைப்படாது. கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும். ஓரிரு வார்த்தைகளைப் பேசப்பழகிவிடும். குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடும்.
2 வருடங்கள்
* கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும்.
* கீழே விழாமல் ஓடிச் செல்லும்.
* புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.
* தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும்.
* பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
* உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.
3 வருடங்கள்
* தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
* நீ பையனா? பெண் பிள்ளையா? போன்ற எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
* பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.
* குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.
4 வருடங்கள்
* மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.
* புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.
5 வருடங்கள்
* துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.
* குறைந்த பட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும்
* படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.
* குதித்தும் தாண்டியும் செல்லத் தொடங்கும்.
குமர்ப்பருவம்/காளைப்பருவம்:
உலக சுகாதார நிறுவனம் விடலைப்பருவத்தினை, 10-19க்கும் இடைப்பட்ட வயது என்றும், இப்பருவத்ததில் உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறது. அவையாவன
1. அதிவேக வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி.
2. உடல், சமூக மற்றும் மனரீதியான முதிர்ச்சி ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்படுவதில்லை.
3. பாலின சம்பந்தமான மற்றும் செய்கையில் முதிர்ச்சி.
4. எதையும் ஆராய்ந்து பரிசோதித்தல்.
5. வயது வந்த வாலிபர்/கன்னி என்ற மனநிலையை அடைத்தல், தான் ஒரு வாலிபர்/கன்னி என அடையாளம் கண்டடைதல்.
வளரும் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள்
பருவமடைதல் (பூப்படைதல்) - இது 10லிருந்து 16 வயதிற்குள் ஏற்படுகிறது. அதாவது குழந்தை பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் இந்நிலையை அடைகின்றனர். உடலில், நடத்தையில் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப்பருவத்திற்கு மாறும் போது ஏற்படும் மாற்றங்கள்
1. கைகள், கால்கள், புஜம், பாதங்கள், இடுப்பு மற்றும் மார்பு போன்றவை உருவில் பெரிதாக வளர்தல். உடலில் ஹார்மோன்கள் சுரத்தல். ஹார்மோன் என்பது ஒருவகை சிறப்பு இரசாயன தாதுப்பொருளாகும். இவை உடலில் எப்படி என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் உடல் எப்படி வளர வேண்டும் என்பதனை கட்டுப்படுத்துகின்றன.
2. உடலின் அந்தரங்க உறுப்புகள் (பாலினப் பெருக்க உறுப்புகள் அவை பெரிய அளவில் உருமாறி திரவங்களை உற்பத்தி செய்கின்றன.
3. தோல் பகுதி அதிக எண்ணையுடன் கூடியதாக மாறும்.
4. கை, கால்கள் மற்றும் அக்குள் பகுதிகளில் உரோமங்கள் தோன்றும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum