ஆத்துமாக்களை காப்பாத்துங்க
Sat Feb 20, 2016 5:29 pm
இக்கொடூர சம்பவம் நடந்து நான்கு வருடங்களுக்கு பிறகு டைட்டானிக் கப்பல் விபத்திலிருந்து தப்பித்தவர்கள் நினைவு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அங்கு வந்த ஓர் இளைஞன் அனைவரின் மனதையும் கவர்ந்தார். இந்த இளைஞன் உடைந்து போன கப்பலின் நடுவே மாட்டிகொண்டு உயிருக்கு போராடிகொண்டிருந்தார். அப்பொழுது இவருடன் கப்பலில் வந்த "ஜான் ஹார்ப்பர்" என்பவர் இவரை காப்பாற்றி ஓர் சிறு படகில் ஏற்றினார். அவர் கேட்ட ஓர் கேள்வி "நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?". அவ்விளைஞன் "இல்லை" என்றான். "இதனை விட அதிக மீட்பை கொண்ட ஒன்றை பற்றி உனக்கு தெரிய வேண்டி உள்ளது" என்று கூறின ஜான் அவருடன் சுவிஷேசத்தை பகிர்ந்து கொண்டார்.
பிறகு மீண்டும் ஜான் மற்றவர்களை காப்பாற்ற சென்று விட்டார். அச்சிறு படகில் சுமார் 6 பேரை காப்பாற்றினார். பலரை காப்பாற்றின இவர் தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பவர்களை பார்த்து "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் உங்கள் நம்பிக்கையை வையுங்கள்" என்று கத்தி கொண்டே இருந்தார். கடும் குளிரினால் தன் சக்தியை இழந்து தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்த போதும் சுவிஷேசத்தை அறிவிப்பதில் இவர் தளரவில்லை. இயேசுவை பற்றி சொல்லிகொண்டே உயிரை இழந்தார்.
இதனை இந்த இளைஞன் கண்ணீருடன் கூறின போது அவ்வரங்கமே கலங்கிப்போனது.
யாரிந்த ஜான் ஹார்ப்பர்?
மே 29, 1882 ல் பிறந்த இவர் தன்னுடைய 13 வயதில் இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். நான்கு வருடம் கழித்து அதாவது தன் 17 வது வயதில் இயேசுகிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் தீவிரமாக காணப்பட்டார். வேதத்தின் மேல் உள்ள வைராக்கியத்தினால் லண்டன் தெருவெங்கும் சுவிஷேசத்தை சொல்லிவந்தார்.
செப்டம்பர் 1896ம் வருடம் ஓர் சபையை நிறுவினார். தற்பொழுது "ஹார்ப்பர் நினைவு ஆலயம்" என்றைக்கப்படுகிறது. இந்த 13 வருட இடைவெளியில் திருமணம் செய்த ஜான் மனைவியை இழந்து ஓர் பெண் குழந்தையோடு "நேனா" வாழ்ந்து வந்தார்.
1912, ஏப்ரல் 14ம் நாள் டைட்டானிக் என்ற கப்பலில் பயணம் செய்த போது தான் விபத்தில் இவரும் இவரின் ஒரே பெண் குழந்தையும் மாட்டி கொண்டார்கள். உடனே இவர் தன் பெண் குழந்தையை அச்சிறு படகில் ஏற்றி தப்பிக்க செய்தார். அவளை முத்தம் செய்த இவருக்கு ஆவலுடன் தப்பிக்க மனது ஒத்துவரவில்லை. கடல் நீரில் உயிருக்கு போராடிகொண்டிருந்த ஆத்துமாக்களை கண்டு மனதுருகினார். தன் மகளை முத்தமிட்ட இவர் "உன்னை நிச்சயம் ஓர் நாள் சந்திப்பேன்" என்று கூறி விட்டு இந்த வாலிபனை காப்பாற்றி அச்சிறு படகில் ஏற்றினார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே ....
ஒவ்வொரு வினாடியும் இரண்டு ஆத்துமா நரகத்தை நோக்கி விரைந்து கொண்டிருகின்றது. உலகத்தின் பாவத்தால் அநேக ஆத்துமாக்கள் அனுதினமும் அழிந்து கொண்டிருகின்றன. எத்தனையோ ஊழியர்கள் தங்கள் உயிரையும் துச்சமாக எண்ணி சுவிசேஷம் செய்ததினால்தான், நாம் இன்றைக்கு கிறிஸ்த்தவர்களாக இருக்கின்றோம். தேவன் நம்மை இரட்சித்து மீட்டதின் நோக்கம் நம்மூலமாக ஒரு கூட்ட ஜனம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதுதான். சுவிசேஷம் செய்வது இரட்சிக்கப்பட்ட எல்லா கிறிஸ்தவனின் மீது விழுந்த கடமையாகும். நமக்கு கிடைக்க பெற்ற இயேசுவின் அன்பை நாமும் அநேகருக்கு அறிவிக்க வேண்டும்.
ஏசாயா 52 :7 – ல் “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.” என்று வாசிகின்றோமே.
சுவிசேஷம் சொல்வோம் ... அழிகின்ற ஆத்துமாக்களை காப்போம் ... கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமென்
நன்றி: ஜீவ ஒளி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum