மேசியாவின் இறுதி இராச்சியம் – தானியேல்
Sat Feb 13, 2016 9:03 am
இப்புத்தகம் மூல மொழியாகிய எபிரேயத்தில் தானியீல் (Daniyel) என்றழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம், “கடவுளே என் நியாயாதிபதி” என்பதாகும். நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 27-வது புத்தகமாக வருகிறது. யூதர்கள் தானியேல் புத்தகத்தைத் தீர்க்கதரிசிகளோடு அல்ல, மற்ற எழுத்துக்களுடன் சேர்த்தனர்.
மறுபட்சத்தில், தமிழ் வேதாகமம் கிரேக்க ,லத்தீன் ஆகியவற்றின் புத்தக பட்டியலைப் போல தானியேலை பெரிய மற்றும் சிறிய தீர்க்கதரிசிகளுக்கு இடையில் வைக்கிறது. இப்புத்தகத்தை எழுதியவர் தானியேல். புத்தகத்தின் முதல் பகுதி, காலவரிசைப்படியும் வேறொரு நபர் சொல்வது போலவும் எழுதப்பட்டுள்ளது; அதன் கடைசி பகுதி, தானியேலே சொல்வது போல் எழுதப்பட்டுள்ளது.
இது தீர்க்கதரிசனங்கள் பொதிந்த ஒரு புத்தகமாகும்; உதாரணமாக, உலக வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் குறித்த தீர்க்கதரிசனங்கள், மேசியா தோன்றும் காலக்கட்டம், நம் நாட்களில் நிகழ்கிற சம்பவங்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இதில் உள்ளன. அதே காலத்தில் வாழ்ந்த எசேக்கியேல், நோவாவுடனும் யோபுவுடனும் தானியேலின் பெயரைக் குறிப்பிடுகிறார். (எசே.14:14, 20;28:3) தானியேல் புத்தகம், “யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே” எழுத ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிடுகிறார். இது யோயாக்கீம் நேபுகாத்நேச்சாருக்கு கப்பம் கட்டும் அரசனாக சேவித்த மூன்றாம் ஆண்டாகிய கி.மு. 618 ஆகும்.
தானியேலின் பதிவு, கி.மு. 618-ல் நடந்த ஒரு சம்பவத்தோடு ஆரம்பமாகிறது. அச்சமயத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டு, ‘இஸ்ரவேல் புத்திரரில் சிலரை’ பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்கிறார். (தானியேல் 1:1-3) அவ்வாறு சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவரே தானியேல்; அப்போது அவர் பருவ வயதில் இருந்திருக்கலாம். இப்புத்தகத்தை எழுதி முடிக்கிற சமயத்திலும் அவர் பாபிலோனில் தான் இருக்கிறார். இப்போது ஏறக்குறைய 100 வயதை எட்டியிருக்கும். தானியேல், கடவுளிடமிருந்து இந்த வாக்குறுதியைப் பெறுகிறார்: “நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்.” (தானி.12:13).
இந்தப் புத்தகத்தில் உண்மையில் இரண்டு பகுதிகள் உள்ளன. 1). 1 - 6.அதி அடங்கியதே முதல் பகுதி. இது கி.மு. 617 முதல் கி.மு. 538 வரை அரசாங்க சேவையில் இருக்கையில் தானியேலுக்கும் அவருடைய தோழர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களைக் காலவரிசைப்படி கொடுக்கிறது. (தானி.1:1, 21) 2). 7 - 12.அதி அடங்கிய இரண்டாவது பகுதியை தானியேலே பதிவு செய்வதாக ஒருமையில் எழுதியுள்ளார். மேலும் ஏறக்குறைய கி.மு. 553-லிருந்து ஏறக்குறைய கி.மு. 536 வரை அவர் கண்ட தரிசனங்களையும் தேவதூதரின் சந்திப்புகளையும் அதில் விவரிக்கிறார். (7:2,28;8:2;9:2;12:5,7, இந்த இரண்டு பகுதிகளும் இணைந்தே ஒத்திசைவான ஒரே புத்தகமாகிய தானியேல் ஆகின்றன.
அக்கினி சூளை (அதி.3) பற்றிய தானியேலின் விவரத்தை ஒரு கற்பனைக்கதை எனகூறி ஒதுக்கித்தள்ள சிலர் முயன்றிருக்கின்றனர். ஆனால் பழைய பாபிலோனிய கடிதம் ஒன்றின் ஒரு பகுதி இவ்வாறு சொல்கிறது: “உன் தலைவர் ரிம்-சின் கூறுகிறார்: அவன் அந்த அடிமை பையனை அடுப்பிற்குள் எறிந்ததால், நீ அடிமையை சூளைக்குள் எறிந்துவிடு.” ஜி. ஆர். டிரைவர் இதைக்குறிப்பிடுபவராய், இந்தத்தண்டனை“மூன்று பரிசுத்த மனிதரின் கதையில் காணப்படுகிறது. (தானி.6,15,19-27)” என கூறியது அக்கறைக்குரியது.
மொத்தம் 12 அதிகாரங்களும், 357 வசனங்களையும் கொண்டுள்ளது. 2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 12-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது. உலக சாம்ராஜ்ஜியங்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது போல அவ்வளவு தெளிவாக இராஜாக்களின் சரித்திர ஏடுகள் பதிவு செய்யப்படவில்லை. தானியேலின் காலத்தில் ஆண்ட இராஜாக்களின் பெயர்களைக் காண்போம். அ. நேபுகாத்நேச்சார் (Nebuchadnezzar) ஆ. மெரோடாக் (Merodach) இ. நெரிக்லிசார் (Neriglissar) ஈ. நெபோனிடஸ் (Nebonidus) உ. பெல்ஷாத்சார் (Belshazzar) ஊ. தரியு (Darius [மேதியன்]) ஐ. கோரேஸ் (Cyrus)
அந்தி கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசன குறிப்புகள் உள்ளன. இதில் தானி 8:9-ல் குறிப்பிடப்படுள்ள சின்ன கொம்பு சீரியா,மற்றும் பாலஸ்தீனாவை ஆண்ட அந்தியோக்கியா எப்பிப்பானேஸ் என்ற கிரேக்க தளபதியை குறிப்பதாகும். இவன் தேவாலயத்தில் பன்றியை பலியிட்டான். தன் சாயலாக ஒரு சிலையை செய்து அதை தேவாலயத்தில் வைத்தான். இஸ்ரவேல் ஜனங்களை கொடுமைப்படுத்தினான். எனவே,அந்தி கிறிஸ்துவிற்கு முன்னடையாளமாக சொல்லமாட்டான். ஆனால் தானி.7:7,8-ல் வரும் நபர் வரப்போகும் அந்தி கிறிஸ்துவை குறிக்கிறது. இவன் தேவனுடைய ஆலயத்தில் தேவனைப் போல உட்காருவான் (2 தெச.2:4) இஸ்ரவேல் ஜனங்களையும் கொடுமைப்படுத்துவான். அவனே வரப்போகும் "சின்ன கொம்பு" என்று வர்ணிக்கப்பட்டவன்.
70 வாரங்கள் என்பது: 1 வாரம் = 7 வருடம் 70 வாரங்கள் = 7x70 = 490 வருடங்கள் ஆகும். 70 தீர்க்கதரிசன வாரங்களின் துவக்கம், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்டதிலிருந்து (தானி 9:25) கி.மு. 444-ல் துவங்கி,அவற்றின் 69-வது வாரம் கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட (தானி 9:26) கி.பி. 33-ல் நிறைவடைகிறது. தீர்க்கதரிசன வருடத்தில் 360 நாட்கள் மட்டுமே எனவே இந்த கணக்குப்படி கி.மு.444 + கி.பி.33 = 483 வருடம் (நாட்கள் கணக்குப்படி)
மேசியா சங்கரிக்கப்பட்டதோடு இஸ்ரவேலின் தீர்க்கதரிசன கடிகாரம் நின்று போயிற்று. (இது சிலுவையில் அறையப்பட்டதையே குறிக்கிறது). மீண்டும் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையிலிருந்து இந்த கடிகாரம் மீண்டும் சுழ ஆரம்பித்து தனது கடைசி வார்த்தை அதாவது 7 வருடங்களை ஓடி முடிக்கும். இந்த ஏழு வருடங்கள் இயேசு கிறிஸ்துவின் இரகசிய பகிரங்க வருகைக்கு இடைப்பட்ட நாட்களாகும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum