தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
யார் நம்முடைய எஜமான்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யார் நம்முடைய எஜமான்? Empty யார் நம்முடைய எஜமான்?

Wed Feb 10, 2016 1:11 pm
இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செயய உங்களால் கூடாது'
மத்தேயு - 6:24

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இந்த வசனத்தை பார்க்கும்போது அருள் நாதர் இயேசு கூறுகிறார் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது காரணம் என்ன? அவரே கூறுகிறார் ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான். ஆம் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவரால் கூடாது அப்படியானால் நம்முடைய எஜமான் யார்? கிறிஸ்துவா? அல்லது உலக சிற்றின்பத்தை அள்ளி தருகின்ற துஷ்ட பிசாசனவனா? நம்மை நாமே சிந்திக்க வேண்டும். 

நாம் நடந்து செல்கின்ற பாதை எப்படி இருக்கிறது பொதுவாக சொல்லுவார்கள் வயலில் ஒரு காலும் வரப்பில் ஒரு காலும் வைத்து செல்ல முடியாது என்று. ஒன்றில் வயலுக்குள் செல்ல வேண்டும் அல்லது வரப்பில் செல்ல வேண்டும். இரண்டு இடத்திலும் காலை நாம் வைத்தால் நாம் கீழே விழ வேண்டியது வரும்.

தென் கொரியா நாட்டின் புகழ்பெற்ற பாடகர் ஒருவர் ஒரு முறை சொன்னார் “எனது சிறு வயதில் என்னுடைய தந்தை செருப்பு தைப்பவராக இருந்தார் அவர் அவருக்கு கிடைத்த அந்த சிறிய வருமானத்திலும் என்னை ஒரு சிறந்த பாடகன் ஆக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், என்னை பாடுவதற்கு ஊக்கமளித்தார் நன்கு பாடி பாடி குரல் வளத்தை பெருக்க வேண்டும் என்று என்னுடைய தந்தை எனக்கு அறிவுறுத்தி வந்தார். 

நல்ல முறையில் பாட்டுகளை படிப்பதற்கு என்னை ஒரு ஆசிரியரிடம் அனுப்பி வைத்தார். ஆசிரியரிடம் முறையாக பாட்டுபாட கற்று கொண்ட நான் என் அப்பாவிடம் வந்து, நான் பாடல் கற்று கொடுக்கும் ஆசிரியராக வேண்டுமா? அல்லது பாடகனாகவே இருக்க வேண்டுமா' என்று கேட்டேன் . அப்போது என்னுடைய தந்தை, 'நீ இரண்டு நாற்காலிகளில் அமர வேண்டும் என்று விரும்பினால், நீ அவைகனின் நடுவே விழுந்து போவாய், உன் வாழ்க்கையில் வளம் பெற வேண்டுமானால், ஒரே ஒரு நாற்காலியில் அமர பார் என்று அறிவுரை கூறினார் 

அவருடைய அறிவுரையின்படியே நான் பல வருடங்கள் படித்து, சிறந்த பாடகன் ஆனேன், ஆனால் என் தந்தையின் அறிவுரையின்படி நான், ஒரே ஒரு காரியத்தில் மாத்திரம் என் கவனத்தை செலுத்தினதினால், நான் தேர்ச்சி பெற்ற பாடகனாக மாறினேன் புத்தகம் எழுதுவதானாலும், எதை செய்வதானாலும் முழு முயற்சியுடன் ஈடுபடவேண்டும். எல்லாவற்றையும் விட ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு, அதிலே முழு கவனத்தையும் செலுத்தி, முதலிடம் பெற வேண்டும்' என்று கூறினார்

ஆம் அன்பானவர்களே எதை தெரிந்து கொண்டாலும் நாம் அதில் முழு மனதோடு கவனம் செலுத்த வேண்டும் இரண்டு இடத்தில கவனத்தை செலுத்தினால் நம் கவனம் சிதறுண்டு போகும் நம்மால் வெற்றியை நிச்சயமாக பெற முடியாது.

ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; என அருள்நாதர் கூறுகிறார். அப்படியானால் நம்முடைய எஜமான் யார் அதை நாம் தன் சிந்திக்க வேண்டும்.

இந்த நாளில் கிறிஸ்து நம்முடைய எஜமானாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்று திருமறையின் ஆதாரத்தோடு ஒரு சில காரியங்களை பார்போம்

முதலாவது அவர் நம்மை மேன்மையாக வைப்பார்

ஆம்! அவர் நமக்கு எஜமானாக இருந்தால் நாம் அவர் சத்தத்திற்கு செவிகொடுக்க வேண்டும். உபாகமம் - 28:1 ஐ நாம் படிக்கும் போது
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.

நாம் அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்போமானால் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் அவர் நம்மை மேன்மையாக வைப்பார். நாம் அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுக்கிறோமா?

சங்கீதம் 19 ம் அதிகாரம் 9 முதல் 11 வரை படிக்கும் போது சங்கீதக்காரன் எஜமானகிய கர்த்தருக்கு பயப்படும் பயம் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக கூறுகிறான்

9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.

10 அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.

11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
ஆம் கர்த்தருக்கு பயந்து அவர் நியாங்களை கைகொள்வதினால் மிகுந்த பலன் உண்டு என பார்கிறோம்

இன்னும் சங்கீதம் – 40:4 ல் சங்கீதகாரன் கூறுகிறான்

அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
ஆம் கர்த்தரை நம்புகிற மனுஷன் பாக்கியவான்

எரேமியா தீர்கதரிசி கூறுகிறார் எரேமியா 17 ம் அதிகாரம் 7 ம் 8 ம் வசனங்களை படிக்கும் போது
7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

8 அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

ஆம் கர்த்தரை எஜமானாக கொண்டு அவரையே நம்பி இருக்கிற மனுஷன் வறட்சி காலத்திலும் தப்பாமல் கனி கொடுப்பான் என பார்கிறோம் நம்முடைய நம்பிக்கை யார் மீது உள்ளது. நாம் கர்த்தரை எஜமானாக கொண்டுள்ளோமா?

திருமறையை நாம் பார்க்கும போது கர்த்தரை எஜமானாக கொண்ட ஒருவரும் வெட்கப்பட்டு போனதில்லை என்பதை நாம் பார்கிறோம்.
2 இராஜாக்கள் 18 ம் அதிகாரத்தை நாம் படிக்கும் போது இங்கு நாம் ஒரு ராஜாவை பார்க்கிறோம் 2 இராஜாக்கள் 18ம் அதிகாரம் 3ம் வசனம் முதல் 7ம் வசனம் வரை படிக்கும் போது இங்கு எசேக்கியா ராஜாவை பற்றி கூறப்பட்டுள்ளது.

2 இராஜாக்கள் 18 ம் அதிகாரம் 3 முதல் 7 வரை

3 அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

4 அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.

5 அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.

6 அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.

7 ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

பாருங்கள் அவன் கர்த்தருக்கு பயந்து கர்த்தரையே தன் எஜமானாக கொண்டிருந்தபடியினால் கர்தர் அவனை மேன்மையாக வைத்தார் மட்டுமல்ல அவன் அந்த காலத்தில் இருந்த பெரிய ராஜாவை சேவிக்காமல், அவன் அதிகாரத்தையே தள்ளிவிட்டான் என பார்கிறோம்.

சங்கீதம் – 32:10 ல் சங்கீதகாரன் கூறுகிறான்

துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.

ஆம் அன்பானவேர்களே நமது எந்த பிரச்சனைகளுக்கும் பரிகாரியாக நம் தேவன் இருக்கும்போது எதை குறித்தும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

எபிரெயர் – 10:23ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

ஆம் நமக்கு வாக்குத்தத்தம்பண்ணின நம்முடைய எஜமான் உண்மையுள்ளவராய் இருப்பதினால், நாம் அவருடைய பார்வைக்கு செம்மையானதை செய்து, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்து, அவர் கட்டளைகளை கைகொள்ளும்போது, அவர் நிச்சயமாகவே நம் பரிகாரியாக இருந்து நம் தேவைகளை சந்திப்பார். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொன்ன நம் தேவன் நம்மை மேன்மையாக வைப்பார்


இரண்டாவது எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வர அனுமதிக்க மாட்டார்

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். யாத்திராகமம் 15:26

அவர் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுக்கும் சகோதரனே சாகோதரியே எஜமானகிய கர்த்தர் கூறுகிறார் நானே உன் பரிகாரியாகிய கர்த்தர், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். பாருங்கள் என்ன அருமையான வாக்குத்தத்தம்.

பொதுவாக ஒவ்வொரு நோய்க்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பார்கள். இந்த மருத்துவரிடம் போய் நாம் மருந்து வாக்கினால் ஒவ்வொரு மருந்துக்கும் கேடுள்ள பின் விளைவுகள் உண்டு, ஆனால் எல்லா வியாதிக்கும், எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு பரிகாரி, நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொன்ன நம்முடைய எஜமானகிய இயேசுவே. இந்த இயேசுவிடம் நாம் போனால், அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்தால் நமக்கு கேடுள்ள எந்த பின் விளைவும் இல்லை மற்றுமல்ல எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் நமக்கு வர அவர் அனுமதிக்க மாட்டார்

உபாகமம் 7ம் அதிகாரம் 9ம் வசனத்தை படிக்கும் போது

ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,
உன் தேவனாகிய கர்த்தரை உன் எஜமானாக கொண்டால் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என பார்கிறோம் 

இன்னும் 15ம் வசனத்தி பார்க்கும் போது
கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.

ஆம் கர்த்தரை நம் எஜமானாக கொண்டால் சகல நோய்களையும் நம்மை விட்டு விலக்குவார்; நமக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய நோய்களில் ஒன்றும் நம் மேல் வரப்பண்ணாமல், நம்மைப் பாது காக்கிற உண்மையுள்ள தேவனாக இருக்கிறார்

நம்முடைய அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து நம்மை குணமாக்குகிற கர்த்தர் என சங்கீத காரன் கூறுகிறார் சங்கீதம் – 103: 3 ல் பார்க்கும் போது
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
என பார்கிறோம் 

இன்னும் 2 இராஜாக்கள் 20 ம் அதிகாரத்தை நாம் படிக்கும் போது மரண படுக்கையில் இருந்த எசேக்கியா ராஜாவை அவனுடைய கொடிய நோயேனின்று விடுவித்து அவன் ஆயுசின் வருஷத்தை கூட்டி கொடுத்ததை பார்க்கிறோம்.

ஆம் நம் தேவனாகிய கர்த்தரை நம் எஜமானாக ஏற்று கொண்டால் நம்மை மேன்மையாக வைப்பது மாத்திரமல்ல கொடிய ரோகம் ஒன்றும் நம்மை அணுகாமல் நம்மை பாது காக்க அவர் வல்லவராக இருக்கிறார்.

மூன்றாவது அவர் நம்மை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்

ஆம்! அவர் நமக்கு எஜமானாக இருந்தால் கர்த்தரை நம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டு, அவரை நம்பியிருக்கவேண்டும் 

ஏசாயா 26:3 ஐ நாம் படிக்கும் போது
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்

ஆம் அவரை உறுதியாக பற்றிக் கொண்டு, அவரை நம்பியிருந்தால் அவர் நம்மை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார் மட்டுமல்ல ஆடுகளகிய நம்மை ஜீவதண்ணீர் உள்ள இடத்தில மேய்த்து நம் கண்ணீர் யாவையும் துடைப்பார் வெளிப்படுத்தின விசேஷம் 7ம் அதிகாரம் 17 ம் வசனத்தில் இதை பார்க்கலாம்

17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்

ஆம் நம் கண்ணீர யாவையும் துடைத்து நம்மை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நம்மை நடத்த வல்லவராக இருக்கிறார்.

ஏசாயா தீர்கதரிசி கூறுகிறார் இவரே சமாதான பிரபு ஏசாயா 9ம் அதிகாரம் 6ம் வசனத்தில் இதை காணலாம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கூறுகிறார் தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார் 1 கொரிந்தியர் 14:33ல் இதை காணலாம்.தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. ஆம் நம்முடைய எஜமான் கலகத்திற்கு அல்ல அவர் சமாதானத்துக்கு தேவனாக இருக்கிறார்

ஏசாயா 32:18 ல் நம்முடைய எஜமானகிய கிறிஸ்து தீர்கதரிசி முலமாக நமக்கு வாக்குத்தத்தமாக கூறுகிறார் .என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும் .தேவனுடைய ஜனம் சமாதான தாபரங்களில் அமைதியாய்த் தங்கும்

ஆம் நம்முடைய எஜமானாகிய கிறிஸ்துவுக்கு சொந்த ஜனமாக நாம் இருப்போமானால் நிச்சயமாக அவர் நமக்கு சமாதனமுள்ள அமைதியான இடத்தை நமக்கு சுதந்தரமாக தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; என அருள்நாதர் கூறுகிறார். அப்படியானால் நம்முடைய எஜமான் யார் .உன் வியாதியை உன்னை விட்டு நீக்கி உன்னை பூரண சமாதானத்துடன் காத்து உன்னை மேன்மையாக வைப்பேன் என்று வாக்கு தந்த நம்முடைய எஜமானகிய கிறிஸ்துவுக்கு சொந்த ஜனமாக நம்மை ஒப்பு கொடுப்போமா. நானும் என் வீட்டாருமோ என்றால் ககர்த்தரையே சேவிப்போமே என்ற யோசுவாவை போல நானும் உம்மையே சேவிப்பேன் என்று நம்மை அவர் சமுகத்தில் அற்பணிப்போமா. இதோ ஏசாயா தீர்கதரிசி கூறுகிறார் ஏசாயா -53:5

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் .நமக்காக காயப்பட்டு நொறுக்கப்பட்ட அந்த எஜமானிடத்தில் அப்பா என்னையும் உம்முடைய மந்தையில் சேர்த்து கொள்ளும் என்று அவர் சமுகத்தில் நம்மை ஒப்பு கொடுப்போமா.
கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum