அதிகாலை ஜெபத்தின் முக்கியத்துவம்
Tue Feb 02, 2016 2:25 pm
பரிசுத்த வேதாகமத்தில் பெரும்பாலான சம்பவங்களில் அதிகாலை ஜெபத்தை குறித்த குறிப்புகளை காண முடிகிறது. ஆனால் நவீன கால கிறிஸ்தவர்கள் இடையே அதிகாலை ஜெபத்திற்கு, அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. பொதுவாக காலையில் எப்போது எழுந்திருக்கிறோமோ, அப்போது அதிகபட்சம் 10 நிமிடம் அரை தூக்கத்தில் நமக்காக மட்டும் ஜெபித்துவிட்டு, நமது அன்றாட வேலைகளை துவங்கி விடுகிறோம். சில நாட்களில் அதையும் மறந்து விடுகிறோம்.
ஆனால் கர்த்தருக்காக எழும்பி பிரகாசித்து காலம் சென்ற பல மேன்மையான தேவ ஊழியர்களின் வாழ்க்கையின் பின்னணியில், அதிகாலை ஜெபம் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. அவர்களின் ஊழியங்களில் தேவ வல்லமையும், தேவ கரத்தையும் காண இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
படித்தது:
நம் நாட்டின் மறைந்த சுவிசேஷகரான சாது சுந்தர் சிங்கை குறித்த ஒரு புத்தகத்தில், அவரது வாழ்க்கையில் அதிகாலை ஜெபத்திற்கு இருந்த முக்கியத்துவம் குறித்து காண முடிந்தது. இரவில் சாது எவ்வளவு நேரம் தாமதமாக படுத்தாலும், அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து அவரது அறையில் தனித்து ஜெபிப்பாராம். இந்த ஜெபம் காலை 7 மணி வரை தொடருமாம்.
சாது எந்த ஊருக்கு சென்றாலும், எங்கு தங்கினாலும், இந்த அதிகாலை ஜெபத்தை மட்டும் தவறவிடமாட்டாராம். இந்த ஜெபத்தை முடித்துவிட்டு தான், மற்றவர்களை சந்திப்பாராம். அவர் ஜெபித்துவிட்டு புன்னகையோடு வெளியே வரும் போது, அவரை காண ஊர் மக்களே திரண்டு நிற்பார்களாம். ஏனெனில் அவரது முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் காணப்படுமாம். அந்த பிரகாசம் முழு நாளும் அப்படியே இருக்கும்.
அதிகாலை ஜெபத்தில் பெற்ற தேவ வல்லமையினால், சுவிசேஷத்திற்காக வந்த எல்லா பாடுகளையும் சாது பொறுமையோடு சகிக்க முடிந்தது. மரிக்கும் வரை தேவனுக்காக வல்லமையான சுவிசேஷகனாக ஊழியம் செய்தார். இது குறித்து சில தேவ ஊழியர்கள் கூறுகையில், சாது சுந்தர் சிங் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும், சாதாரண மனிதர்களை சந்திப்பதற்கு முன், தன்னை பாவத்தில் இருந்து மீட்டெடுத்த தேவனை சந்தித்து பேசியுள்ளார் என்று கூறினர். இது உண்மைதான்; தேவனோடு தினமும் பேசாத ஒரு மனிதனால், அவரை போல ஊழியங்களை செய்ய முடியாது.
சிந்தித்தது:
இந்நிலையில் இன்று பல பெரிய ஊழியங்களை ஆண்டவருக்காக செய்ய விரும்பும் நம் வாழ்க்கையில், மேற்கூறிய அதிகாலை ஜெபம் இருக்கிறதா? என்பதை நாம் சோதித்து பார்க்க வேண்டும். அப்படி அதிகாலை ஜெபம் இல்லை என்றால், அதை இன்றே துவங்குவோம்.
அதிகாலை ஜெபத்தினால் ஏற்படும் நன்மைகளில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறோம்.
1. அதிகாலையில் ஜெபத்தின் மூலம், அந்த நாளுக்கு தேவையான புதிய கிருபைகளை தேவன் அளிக்கிறார் (புலம்பல் 3.22,23). இதன்மூலம் அந்த நாளில் நமக்கு ஏற்பட உள்ள எல்லா சோதனைகளையும் ஜெயிக்க தேவையான தேவ பலத்தை பெறுகிறோம்.
2. ஏதேன் தோட்டத்தில் குளிர்ச்சியான நேரம் என்று குறிப்பிடுவது இந்த அதிகாலை நேரத்தை தான். ஏனெனில் யோபு 7.18 வசனத்தின்படி அதிகாலையில் தான் தேவன், தமது மக்களை சந்திக்க உலா வருகிறார். அவர்களின் தேவைகளை குறித்து விசாரிக்கிறார்.
3. அதிகாலையில் தேடுகிறவர்களுக்கு, தேவன் எளிதில் வெளிப்படுகிறார் என்று நீதிமொழிகள் 8.17-ல் வாசிக்கிறோம். நாம் தேவனிடம் சந்தித்து பேசும் போது, அவரது ஆலோசனைகளையும், அபிஷேகத்தையும் அளிக்கிறார். நமக்கு எதிராக போராடும் சத்துருவின் மீது ஒரு பெரிய ஜெயத்தை கட்டளையிடுகிறார்.
4. அதிகாலையில் தான் நமக்கு நன்றாக தூக்கம் வருகிறது. ஆனாலும் அதை தியாகம் செய்து தேவ சந்நதியில் காத்திருக்கும் போது, நமது இதயம் தேவ அன்பினால் நிரப்பப்பட்டு, பாவ சிந்தனைகளில் இருந்து விடுபடுகிறோம். மேலும் நமக்கு எதிரான மந்திரங்கள், கொள்ளை நோய்கள், இச்சைகள், வியாதிகள் போன்றவை செயல் இழந்து விடுகின்றன. ஏனெனில் அதிகாலையில் ஜெபிக்கும் ஒரு மனிதனை, பிசாசினால் அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது.
5. அதிகாலை 4 மணிக்கு எழுந்து நன்றாக கர்த்தரை பாடி துதித்து, ஜெபிக்கும் போது, உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சி உண்டாகிறது. இதனால் நாள் முழுவதும் ஒரு தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது.
மேற்கூறிய காரியங்கள் குறித்து பிசாசிற்கு நன்றாக தெரியும் என்பதால் தான், நமக்கு அதிகாலையில் தூக்கத்தின் ஆவியை அளித்து தேவ சமூகத்தை நெருங்கவிடாமல் பிசாசு தடுத்துவிடுகிறான். எனவே ஆவியில் விழித்திருப்போம். அதிகாலை ஜெபத்தை நம் வாழ்க்கையில் இன்றே துவங்கி, நம் தேசத்தில் ஒரு ஆவிக்குரிய எழுப்புதலுக்கு காரணமாவோம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum