ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் உள்ள இணைய இணைப்பை ஏனைய சாதங்களுடன் பகிர்ந்துகொள்வது எப்படி?
Wed Jan 20, 2016 3:48 am
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் உள்ள இணைய இணைப்பை ஏனைய சாதங்களுடன் பகிர்ந்துகொள்வது எப்படி?
பல்வேறு காரணங்களால் எமது ஸ்மார்ட் போனில் உள்ள இணைய இணைப்பை மற்றுமொரு ஸ்மார்ட் சாதனத்திற்கோ அல்லது கணினிகளுக்கோ பகிர வேண்டிய தேவை ஏற்படலாம்.
இதற்கான வசதி இன்றைய ஸ்மார்ட் போன்களில் தரப்பட்டுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பொதுவாக Mobile Hotspot என அழைக்கப்படுகிறது.
Mobile Hotspot மூலமாக வை-பை வலையமைப்பை உருவாக்குவது எப்படி?
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர் எனின் Settings ==> Connection எனும் பகுதி மூலம் இந்த வசதியை பெறலாம். இது செட்டிங்ஸ் பகுதியில் Tethering and Mobile hotspot என தரப்பட்டிருக்கும். நீங்கள் இதனை சுட்டுவதன் மூலம் Mobile Hotspot எனும் சாளரத்தை பெறலாம்.
இனி இந்த சாளரத்தின் வலது மேல் மூலையில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் பட்டனை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து வெளிப்படுத்தப்படும் வை-பை வலையமைப்புக்கான பெயரையும் அதன் கடவுச்சொல்லையும் பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வளவுதான்.
இவ்வாறு நீங்கள் உருவாக்கும் வை-பை வலையமைப்பை கணினி ஸ்மார்ட் போன் போன்ற 10 சாதனங்களுக்கு ஒரு நேரத்தில் பகிர முடியும்.
உருவாக்கிய வலையமைப்பை ஏனைய ஸ்மார்ட் போன்களில் பெறுவது எப்படி?
இனி ஏனைய ஸ்மார்ட் போன்களில் வை-பை வசதியை செயற்படுத்தியவுடன் அவற்றில் நீங்கள் உருவாக்கிய வை-பை வலையமைப்புக்கான பெயரும் தோன்றும்.
பின்னர் குறிப்பிட்ட வை-பை வலையமைப்பை தெரிவு செய்து அதற்காக ஏற்கனவே நீங்கள் பெற்றுக்கொண்ட கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம் முன்னைய ஸ்மார்ட் போனில் உள்ள இணைய இணைப்பை இதிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு:
ஏனைய சாதனங்களில் இணையத்தை பயன்படுத்த வேண்டும் எனின் நீங்கள் வை-பை வலையமைப்பை உருவாக்கிய ஸ்மார்ட் போனில் Mobile data வசதி செயற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
ஸ்மார்ட் போனில் உருவாக்கிய வை-பை வலையமைப்பை விண்டோஸ் கணினிகளில் பெறுவது எப்படி?
நீங்கள் ஸ்மார்ட் போனில் உருவாக்கிய வை-பை வலையமைப்பை விண்டோஸ் கணினியில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
இதற்கு உங்கள் கணினியில் வை-பை வலையமைப்பை பகிர்வதற்கு பொருத்தமான வன்பொருள் இருக்க வேண்டும். (பெரும்பாலான மடிக் கணினிகளில் வை-பை வசதி தரப்பட்டிருக்கும்)
வன்பொருள் - Hardware
1. வை-பை வசதி இயைபுபடுத்தப்பட்ட கணினியை நீங்கள் பயன்படுத்துபவர் எனின் அதில் இருக்கும் வை-பை பட்டனை செயற்படுத்திக் கொள்க.
2. பின்னர் உங்கள் கணினியின் Control Panel பகுதிக்கு செல்க.
3. இனி அதில் இருக்கும் Network and sharing center என்பதை சுட்டுக.
4. பெறப்படும் சாளரத்தில் Setup new connection or network என்பதை சுட்டுக.
5. இதன் போது தோன்றும் சாளரத்தில் Manually connect to a wireless network என்பதை தெரிவு செய்து Next அழுத்துக.
6. இனி நீங்கள் ஸ்மார்ட் போன் மூலம் உருவாக்கிய வை-பை வலையமைப்பிற்கான பெயரையும் கடவுச்சொல்லையும் பெருத்தமான இடங்களில் உள்ளிட்டுக் கொள்க. Security Type என்பதில் WPA2-Personal என்பதை தெரிவு செய்க
7. இறுதியாக Next என்பதை அழுத்த கணினிக்கும் ஸ்மார்ட் போனுக்கும் இடையிலான வை-பை வலையமைப்பு உருவாக்கப்பட்டுவிடும்.
இனி இணையத்தை வலம்வர வேண்டியது தான்
- ஆண்ட்ராய்டு போனில் உள்ளn wI.FIIயை் அடுத்த போனில் பயன்படுத்துவது எப்படி ?
- ஆண்ட்ராய்டு போனில் அழகாக படம் எடுக்க அசத்தல் டிப்ஸ்!
- உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?
- ஆன்டிராய்டு போனில் ஆட்டோமேடிக் அப்டேட் தடுப்பது எப்படி?
- இணைய இணைப்பு அற்ற நிலையில் பார்வையிடுவது எப்படி?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum