சொல்ல வெட்கமாக இருக்கிறது
Thu Jan 14, 2016 8:32 pm
நான் அரசு அலுவலகத்திலே மேலாளராக இருகிறேன், நான் கட்டட கலையிலே கை தேர்ந்த நிபுணராக இருகிறேன், நான் கணினி துறையிலே மேதையாக இருகிறேன் என்றும், நான் ஒவ்வொரு மாதமும் லட்சகணக்கில் சம்பாதிக்கிறேன், கார் வாங்கினேன், வீடு வாங்கினேன், வெளி தேசங்களுக்கு சுற்றுலா செல்கிறேன் என்று என்னென்னமோ சொல்ல வரும் வார்த்தைகளில் இருக்கும் பெருமைகளும், சந்தோஷங்களும் பெரிய கௌரவத்தை வாங்கிகொடுகிறது!!!
ஆனால்? இயேசு கிறிஸ்து தன ஸ்தானத்தை இழந்து மகிமையை விட்டு இந்த உலகத்தில் ஏழையாய் பிறந்து நம் பாவங்களுக்காக சிலுவை பாடுகளை ஏற்றுக்கொண்டு இறுதில் அவர் பரிசுத்த ரத்தத்தை நம் பாவங்களுக்காக சிந்தின அந்த அன்பை மட்டும் ஏனோ? சொல்ல மனம் வருவதில்லை!!!
இயேசுவை பற்றி சொல்ல வெட்கமாக இருக்கிறது, உடன் இருக்கும் நண்பர்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்கள் என்ற தயக்கம் வந்துவிடுகிறது, பிறகு மனம் ஆறுதல் அடைந்துவிடுகிறது.....
தெரிந்துகொள்ளுங்கள்:- "நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு" (II தீமோத்தேயு 2:15)
Voice of Penta-A Musical Approach
Permissions in this forum:
You cannot reply to topics in this forum