நீங்களும் ஜெயிக்கலாம் – 2
Tue Mar 12, 2013 12:13 pm
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றி பெறவேண்டும்
என்பது பலரது கனவாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இம்மாதிரி கனவுகளுடன்
துவங்கி இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கும் சாதனையாளர்களைப் பற்றிப்
படிக்கும்போதெல்லாம் அவர்களுடைய ஆர்வம்
இன்னும் அதிகமாகிறது. ஆனால் கூடவே தவறாமல் எழும் எண்ணம், என்னால் இது
முடியுமா என்ற கேள்வி. வெற்றி பெற்றவர்களுக்கு தெரிந்திருக்கும் அந்த
மந்திரத்தை யாராவது நமக்கு சொல்லுவார்களா? அப்படியே அதைத்
தெரிந்துகொண்டாலும் அது எனக்கு பலனளிக்குமா போன்ற தொடர்கேள்விகளினால் எழும்
அச்சம், ஆர்வத்தை அணை போட்டுவிடுகிறது.
என்னால் இது முடியுமா
என்ற சந்தேகத்திற்கும் என்னால் இது முடியும் என்ற நம்பிக்கைக்கும் இடையில்
உள்ள மெல்லிய இடைவெளிதான் வியாபாரத்தில், தொழிலில் வெற்றியை
தீர்மானிக்கும் சக்தி. இந்த இடைவெளியின் கனத்தை சொந்தத் தொழில் செய்யும்
தகுதி இருப்பவர்கள் தான் நன்கு அறிந்துகொள்ள முடியும். உங்களுக்கு அந்தத்
‘தகுதி’ இருக்கிறதா?
இந்தக் கேள்விக்கு பளிச்சென்று பதில்
சொல்லும் சிலரும் இருக்கிறார்கள். பலர் தகுதி என்று எதைசொல்லுகிறீர்கள்
என்று புரியவில்லை என்கிறார்கள். ஆர்வமும் முதலீடும் மட்டும் ஒரு தொழிலை
துவக்கத் தேவையான தகுதிகள் இல்லை. சொந்தத் தொழிலில் வெற்றிக் கதைகளை
அலசினால் பலர் மிகச் சிறுவயதிலிருந்தே அந்தக் கனவுடன்
வளர்ந்திருக்கிறார்கள். ஆழ்மனதில் ஒரு அழியா பிம்பமாக அவர்கள் நிறுவனம்
இருந்திருக்கிறது. பல நாட்கள் பல மணிநேரங்கள் அதைப் பற்றியே
சிந்தித்திருக்கிறார்கள். இவை பேராசைக் கனவுகள் இல்லை.
விழித்திருக்கும்போது எண்ணங்களை காட்சிகளாக கண்முன்னே உருவகப்படுத்திப்
பார்க்கும் அப்துல் கலாம் சொல்லும் கனவுகள்.
நீங்கள் தொழில்
செய்ய விரும்பினால் முதல் கட்டமாக இது இருக்க வேண்டும். சிறு வயதில்
எனக்கு அப்படியெல்லாம் இல்லை. இப்போது வயது ஆகிவிட்டது. என்னால் முடியாதா
என்று கேட்கிறீர்களா? முடியும். இன்று முதல் இதைப்
படித்துக்கொண்டிருக்கும் வினாடியிலிருந்தே அதை செய்யத் துவங்குங்கள்.
குறைந்த பட்சம் ஓராண்டாவது உங்கள் சொந்தத் தொழில் சிந்தனை உங்கள்
ஆழ்மனதில் பதிந்த ஒரு விஷயமாகயிருக்க வேண்டும். இந்த எண்ணங்கள் தெளிவாக
இருக்க வேண்டும். தோன்றும் எண்ணங்களை மாற்றிக்கொள்வதில் தவறில்லை. ஆனால்
தினமும் ஒரு புதிய பிஸினஸை கனவு கண்டிருக்கக் கூடாது. உறுதியாக, தெளிவாக
சிந்திக்க பழகிக்கொள்ள வேண்டும். மனதில் உறுதியுடன் சிந்தித்தவர்கள்தான்
ஜெயித்திருக்கிறார்கள். இதை லட்சியம், குறிக்கோள், டார்கெட், கோல் என
உங்களுக்குப் பிடித்த பெயரில் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் அதிக
நேரம் செலவிடும் அறையில் அல்லது இடத்தில் உங்களுக்கு மட்டும் புரியும்
வகையில் ஒரு போஸ்டராகக்கூட அமைத்துக்கொள்ளலாம். ஒரு பள்ளிச் சிறுவன் தன்
அறையில் ஒரு விலையுயர்ந்த காரின் போஸ்டரை வைத்திருந்தான். இதை கல்லூரி,
முடித்து வேலைக்குப் போன பின்னரும் வைத்திருந்தான். கேட்பவர்களுக்கு
புன்னகைதான் பதில். வேலைகள் மாறி, நிர்வாகயியல் படிப்பு முடித்து
அமெரிக்காவில் பணியாற்றும் வாய்ப்பு அந்த இளைஞனுக்கு கிடைத்தது. அங்கு
அவனை காணச்சென்ற பெற்றோர் அவன் அந்தக் காரையே வாங்கியிருந்தது கண்டு
வியந்துபோனார்கள். சிறுவனாக இருந்தபோது அவன் கண்ட கனவு இளைஞனானபின்
கனிந்திருக்கிறது. அதுவரை அது அவன் ஆழ்மனதில் விதையாக விழுந்த விஷயம்
விருட்சமாக வளர்ந்திருக்கிறது. இதைப்போலத்தான் உங்கள் தொழில் துவக்கும்
கனவும் வளர வேண்டும். ஏதாவது ஒரு பிஸினஸ் செய்யலாமென இருக்கிறேன் என்று
சொல்லுகிறவர், விரைவில் ஒரு நல்ல பிஸினை ஆரம்பிக்க இருக்கிறேன் என்று
சொல்லுகிறவர் இவர்களில் நீங்கள் எந்தவகையில் சேரப்போகிறீர்கள்?
லட்சியத்தை அடைய உறுதிக்கு அடுத்தபடியான விஷயம், அதை அடைவதற்கான அறிவு.
இதைத் தேடிப் பெற வேண்டும். அறிவு என்பது இங்கு கல்வித் தகுதியைப் பற்றியது
இல்லை. கல்வித் தகுதி அவசியம். இன்றைய சூழலில் நிச்சயம் மிக அவசியம்.
நீங்கள் மெடல் மாணவராக, முதல்வகுப்பு தேறியவராக இருக்க வேண்டிய
அவசியமில்லை. ஆனால் கல்வித் தகுதி அவசியம். அடைவதற்கான அறிவு என்று
சொல்லப்படுவது நீங்கள் செய்யப்போகும் தொழில் பற்றியது. அதில் உங்களுக்கு
மற்றவர்களை விட உங்களுக்கு என்ன அதிகமாகத் தெரியும். அதை செய்து
கொண்டிருப்பவர்கள் வெற்றி பெற்றவர்கள், தோற்றவர்கள் பற்றிய தகவல்களில்
அப்டேட் ஆக இருக்க வேண்டும், இது எளிதல்ல. ஆனாலும் அவசியம்.
தினசரி செய்யவேண்டிய சின்னச் சின்ன பணிகளைக் கூட திட்டமிட்டு, கச்சிதமாக
செயலாற்றுவதை ஒரு கலையாகவே பயின்று தனிநபர்களாகவும், தொழில்களிலும்
ஜெயித்திருக்கிறார்கள். இந்தப் பயிற்சிகளை தொழிலைத் துவக்கும் முன்னரே
பழகிக்கொள்ளவேண்டும். திட்டமிடல் என்பது அதைச் செயலாற்றுவதைவிட எளிது.
அதனால் திட்டங்களைச் செயலாக்கும்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்
நீங்கள் அடுத்தமுறை சரியாக திட்டமிடவேண்டும். இப்போதே நீங்கள்
மேற்கொள்ளும் பயிற்சி உங்கள் தொழில் வாழ்க்கையில் சிறப்பாகப் பயன்படும்.
சொந்தத் தொழில் துவக்கி வெற்றிபெறத் துடிப்பவர்களுக்கு அவசியமான மற்றொரு
பண்பு, மனிதர்களை கையாளும் திறன். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன
நினைக்கிறார்கள் என்பதில் எனக்கு அக்கறையில்லை என்று சொல்லுபவரா நீங்கள்?
எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் என்பது முழுக்க முழுக்க
மற்றவர்களின் ஆதரவிலும் அவர்களால் உண்டாக்கப்படும் வாய்ப்புகளினாலும்
ஏற்பட்ட ஒரு விஷயம். எவருடனும் எளிதில் பழகும் திறன் சிலருக்கு இயல்பாக
வருவது. ஆனால் இதைக் கற்றுக்கொள்வதோ பயிற்சிகள் செய்து வளர்த்துக்கொள்வதோ
ஒன்றும் கடினமான காரியம் இல்லை. இன்றிலிருந்து துவக்குங்கள். நீங்கள்
வசிக்கும் பகுதியில் உங்களை எத்தனை பேருக்குத் தெரியும்? அடுத்த மாதத்தின்
இறுதிக்குள் 50 பேரை அறிமுகம் செய்துகொள்வேன் என முடிவு செய்து கொண்டு
இன்று ஒரு புதியவருக்கு ஹலோவுடன் துவக்குங்கள். தொழிலில் நீங்கள்
வாடிக்கையாளர்கள், தொழிலாளிகள், அதிகாரிகள், போட்டியாளர்கள் என்று பலரை பல
கட்டங்களில் சந்திக்கப்போகிறீர்கள். அப்போது அதை தயக்கமில்லாமல் நீங்கள்
செய்ய இந்தப் பயிற்சிகள் மிகவும் உதவும். உங்களுக்காக உதவி செய்பவர்கள் கூட
நீங்கள் தயக்கமில்லாமல் கேட்டால் தான் செய்வார்கள் என்பதை
மறந்துவிடாதீர்கள்.
நாம் தொழில் துவக்குவது வெற்றி
பெறத்தான். ஆனால் எந்தத் தொழிலிலும் எவரும் நான் ஜெயித்துக்கொண்டே
இருந்தேன், தோற்றது கிடையாது என்று சொன்னதில்லை. வியாபாரம் என்பது
தனிநபரின் திறன் கண்டறியும் நிர்ணயித்த நேரத்திற்குள் நடக்கும் ஒரு
ஓட்டப்பந்தயம் இல்லை. பலரை, பலவிஷயங்களை, நமது கட்டுப்பாட்டில் இல்லாத
பல்வேறு விஷயங்களைப் பொறுத்தது. பின் எப்படி வெற்றியாளார்கள்
உருவாகிறார்கள்? தோல்விகளை எதிர்கொள்ளும் சக்தியும் அவைகளைப் பாடங்களாக
கற்று, தொடர்ந்து பயணிக்கும் துணிவு கொண்டவர்களாக அவர்கள்
இருந்திருக்கிறார்கள். இதிலிருந்து தொழிலில் வெற்றி பெற துணை நிற்கும்
மற்றொரு சக்தி, தோல்விகளை சந்திக்கவும் தயாராகயிருக்க வேண்டிய மனநிலை
என்பது தெரிகிறது. தனிமனித குணாதிசயங்களில் ஒன்றான இதுவும் சிலருக்கு
குழந்தைப் பருவத்திலிருந்தே இருப்பதைப் பார்க்கிறோம். இந்த ஆற்றலைப்
பெறுவதற்கு முன்னால் அதைப் பற்றிய தெளிவான புரிதல் அவசியம். எனவே, இது
தொடர்பாக படிக்க ஆரம்பியுங்கள். பல மனவளப் பயிற்சிமுறைகள்
கற்பிக்கப்படுகின்றன. அவசியமானால் அவைகளில் ஒன்றில் சேர்ந்து உங்களை
தயார்செய்துக் கொள்ளலாம்.
நீங்கள் இப்போது துவக்கும் தொழில்
அல்லது வியாபாரம் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் வளரப்போகும் ஒரு
விஷயம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு பயணத்தை துவக்குங்கள்.
அடுத்த ஆண்டு எங்கே இருப்போம், அடுத்த 3 ஆண்டுகளில் எங்கே போகப்போகிறோம்
என்பதையும் சிந்தித்துக்கொண்டே இருங்கள். இப்போதே அதெல்லாம் ஏன். முதலில்
வளர்வோம், பின் யோசிப்போமே என்பவர்கள் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு
நிறுவனத்தின் வளர்ச்சி என்பது வாய்ப்புகள் இருக்கும்போதே செய்யப்பட
வேண்டியது. வாய்ப்புகளைக் கண்டுபிடித்து வளரவேண்டிய சூழலில் இன்றைய உலகம்
இயங்குகிறது. இன்றைய வர்த்தக உலகை, ‘ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும்
இடத்தை இழந்து விடாமல் இருப்பதற்காகவே தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்’
என்று வர்ணிக்கிறார்கள். நீங்கள் களத்தில் இறங்கியபின்னர் பாதி வழியில்
நின்று யோசிக்க முடியாது.
எல்லாம் புரிகிறது நண்பரே, ஆனால் இந்தப்
பண்புகளும் தன்மைகளும் எனக்குள் இருப்பதை அல்லது குறைவாக இருப்பதை எப்படி
என்னால் தெரிந்துகொள்ள முடியும் என்கிறீர்களா? எதிர்ப்பக்கத்திலுள்ள
கேள்வித்தாளில் இருக்கும் வினாக்களுக்கு நேர்மையாக விடையளித்தால்
தெரிந்துகொள்ளலாம். முயற்சித்துப் பாருங்களேன்.
இன்று நண்பனில் எழுதவேண்டியது!
சொந்த தொழில் துவக்க எனக்கு தகுதிகள் இருப்பதை ஒரு டெஸ்ட் மூலம் அறிந்தேன். அடுத்த வேலைகளை நாளை முதல் ஆரம்பிக்க வேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum