500 நாட்களில் நீங்களும் பிரபலம் ஆகலாம்!
Wed May 25, 2016 3:38 pm
செல்ஃப் பிராண்டிங் சீக்ரெட்ஸ்
முடியும். ஆனால், சினிமாக்களில் வருவது போல திடீரென ஒரு நபர் ஒரே பாடலில் பிரபலமாகிவிட முடியாது. அதற்கு மிகப் பெரிய செயல்முறை இருக்கிறது. அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு 15 மாதங்களுக்கு முன்பே ஹோப், சேஞ்ச், எஸ் வி கேன் என்ற பிரசார வாசகங்களை அவருடைய மேடை பேச்சுகளில், பேட்டிகளில் கட்டாயம் இடம்பெறுகிற மாதிரி பார்த்துக் கொண்டதுதான் ஒபாமாவை பார்த்ததும், இவர் மாற்றத்துக்கான நபர் என்கிற எண்ணத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்ததாக சொல்கிறார்கள் அமெரிக்க மேலாண்மை நிபுணர்கள்.
2012-ம் ஆண்டு இறுதியில் மோடி பி.ஜே.பி-யின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். அப்போது அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், குஜராத்தில் அவர் ஏற்கெனவே செய்திருந்த சாதனை வளர்ச்சியைப் போல இந்தியா முழுக்க வளர்ச்சி, டிஜிட்டல் புரட்சி என பல புதிய கருத்துக் களை முன்வைத்ததன் விளைவு, மற்ற அரசியல் தலைவர் களிடமிருந்து மோடியை தனித்து வித்தியாசப்படுத்திக் காட்டியது. பிற்பாடு அவரை பிரதமராக மக்கள் தேர்வு செய்யக் காரணம் இந்த விஷயங்கள்தான்.
கிட்டத்தட்ட 15 மாதங்களில், அதாவது சுமார் 500 நாட்களில், சொல்லி வைத்த மாதிரி நீங்களும் உங்கள் குழுவின் தலைவனாக மாற முடியும். உங்களையே நீங்கள் ஒரு பிராண்டாக மாற்றிக் காட்ட முடியும். அதற்கு பின்வரும் ஏழு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுவது அவசியம். அந்த வழிமுறைகள் இதோ:
360 டிகிரி மாற்றம்!
முதலில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் வைத்திருக்கும் டெம்ப்ளேட் விஷயங்களை 360 டிகிரிக்கு மாற்றுங்கள். நீங்கள் எதையும் தாமதமாக செய்பவர் என்று உங்கள் அலுவலகம் நினைத்தால், அதனை உடைத்து வேகமாக செய்யப் பழகுங்கள். நீங்கள் எப்போதும் சாதாரண உடையில் வருபவர் என்றால் கொஞ்சம் ஃபார்மலாக மாறுங்கள். நீங்கள் சில விஷயங்களுக்கு சரிப்பட மாட்டீர்கள் என்று சொல்லி வைத்திருந்தால், அதனை தனியாக செய்தாவது உங்களை அந்த வேலைக்கு நீங்கள் சரியானவர் என நிரூபியுங்கள்.
இப்படி எல்லாம் மாறியபின் உங்கள் அலுவலகம் உங்களை உற்றுநோக்கத் துவங்கும். மாற்றம்தான் இந்த செயல்முறையின் முதல் படி. அதுவும் மொத்தமாக மிகப் பெரிய மாற்றமாக இருக்க வேண்டும். இது உங்களை ஒரு தலைவனாகவும், ஒரு பிரபலமாகவும் மாற அடிப்படையாக அமையும்.
இதற்கு சிறந்த உதாரணம், விராட் கோலி. இவர் நட்சத்திர வீரர்தான். ஆனால், முன்கோபக்காரர்; கேப்டன் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால், தன் முதல் தொடரிலேயே தன்னைப் பற்றிய இமேஜை உடைத்தார். உலகமே வியக்கும் வண்ணம் வெற்றிகளைக் குவித்து இந்திய அணியை நம்பர் 1 இடத்துக்கு அழைத்து வந்தார். இந்த மாற்றம் அவரை ஒரு தலைவனாக ஏற்றுக்கொள்ள வைத்தது.
இலக்கு!
நீங்கள் பார்க்கும் வேலையில் உங்களுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதனை செய்ய உங்களுக்கு சாதாரணமாக ஆகும் நேரத்தை 10 சதவிகிதமாவது குறைத்து, வேகமாக இலக்கை எட்டுங்கள். உதாரணமாக, உங்கள் நிறுவனம் உங்களிடம் 30 நாட்களில் தரும் இலக்கை 25 நாட்களில் முடித்தால், மீதமுள்ள 5 நாட்களில் உங்கள் உழைப்பு அனைத்துமே உங்களை பிராண்டிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனை முதல் மாதத்தில் செய்ய முடியாது. குறைந்தபட்சம் மூன்று மாத புரிதல் உங்களுக்கு இந்த வேகத்தை தரும். அதன்பின் ஒவ்வொரு மாதமும் உங்கள் போட்டியாளர் நீங்களாக இருந்தால் உங்கள் வளர்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.
தாக்கத்தை ஏற்படுத்துங்கள்!
உங்களைப் பற்றிய விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் அப்படியே இருந்தாலோ அல்லது உங்களது துறையை நிர்வகிப்பவருக்கு மட்டும் தெரிந்தாலோ அது உங்களை நீங்கள் ஒரு பிராண்டாக மாற்ற உதவாது. உங்களைச் சுற்றியுள்ள இடங்களில் ஏற்கெனவே பிரபலமாகவோ அல்லது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்ற நிலையிலோ இருப்பவர் உங்களைப் பற்றிய ஒரு நல்ல விஷயத்தை பிரபலப்படுத்துமாறு சில வேலைகளை செய்யுங்கள்.
அது உங்கள் திறமையைத் தாண்டிய பாராட்டுப் பெற தகுதியான வேலையாக இருக்க வேண்டியது அவசியம். இவர்களால் உங்கள் பிராண்ட் வேல்யூ உயரும் வகையில் அந்த வேலைகள் அமைந்தால் தானாகவே உங்கள் மீது ஒரு பிரபலம் என்ற இமேஜ் உருவாகும்.
அரவிந்த் கெஜ்ரிவால், சகாயம் போன்றவர்கள் அரசு அதிகாரிகள்தான். ஆனால், அவர்களை ஒரு முதலமைச்ச ராகவும், முதலமைச்சருக்கு தகுதியானவர் எனவும் பேச வைத்தது இன்ஃப்ளுயன்சர்கள் எனப்படும் தாக்கத்தை ஏற்படுத் தும் மனிதர்கள்தான். இந்த தாக்கம் இவர்களை மக்கள் மத்தி யில் ஒரு பிரபலமாக மாற்றியது.
சமூக வலைதளங்களில் நீங்கள் எப்படிப்பட்டவராக வேண்டு மானாலும் இருக்கலாம். ஆனால், ஒரு பிரபலமாகவோ அல்லது தனி பிராண்டாக நீங்கள் இருக்க விரும்பினால் அவசரப்பட்டு ஒரு ஃபேஸ்புக் பக்கத்தைத் துவங்கிவிடாதீர்கள். அது உங்கள் பிராண்டை உடைக்கும் உத்தி. இதற்கு எளிய உத்தி உங்கள் நட்பு வட்டாரத்தை விரிவுப் படுத்துங்கள்.
உங்களால் ஒரு வருடத்தில் 5,000 நண்பர்களை எளிதாக இணைக்க முடியும். அப்போது உங்கள் கணக்கை பக்கமாக மாற்றுங்கள். உங்கள் நண்பர்கள் அனைவரும் உங்கள் ஃபாலோயர் கள் ஆவார்கள். அதில் நடுநிலை யாகவும் அதே சமயம் தவறான பதிவுகளை தவிர்த்தால் இன்றைய டிஜிட்டல் உலகில் எளிதில் நீங்கள் புரமோட் ஆக முடியும். இதே போன்றதொரு உத்தியை தான் பிரதமர் மோடியும் கையில் எடுத்து இளைஞர்களை கவர்ந்தார்.
நான் என்ற வார்த்தையை மறந்துவிடுங்கள்!
இந்த மாற்றத்துக்கான செயல் முறையில் நான் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட மறந்துவிடுங்கள். நாம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்துங்கள். உங்கள் வேலை வெற்றி அடைந்தால் அதனை செய்த அனைவருக்கும் இடமளி யுங்கள். அதில் பணிபுரிந்த அனைவரையும் தனித்தனியே பாராட்டுங்கள்.
இதுதான் உங்களிடம் உள்ள தலைமைப் பண்பை வெளிக்காட் டும். அதேசமயம், உங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதற்கு பொறுப்பேற்கப் பழகுங்கள். உங்களை அது அடுத்தகட்டத் துக்கு எடுத்துச் செல்லும். தோனியின் வெற்றி உரைகளில் நான் என்ற வார்த்தையே இருக்காது. இதுதான் உங்களை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும். எப்போது நீங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறீர்களோ, அப்போதே நீங்கள் ஒரு பிராண்ட் இமேஜை உருவாக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
செல்ஃப் புரோமோஷன்!
சுய விளம்பரம் கூடாதுதான். அது 100% உண்மை. ஆனால், அதனை நமது சாதனைகளை வெளிப்படுத்துவதாக இருந்தால் தான் தவறு. உங்கள் திறமையையும், உங்கள் அறிவையும் வெளிப் படுத்தும் விஷயங்களாக இருந் தால், அது செல்ஃப் புரமோஷனாக உங்களை மேம்படுத்தும்.
உதாரணமாக, நீங்கள் ஒரு நல்ல புகைப்படக்காரர் எனில், உங்கள் புகைப்படப் பதிவுகள் உங்களை பிரபலமாக்கும். நீங்கள் ஒரு சொற்பொழிவாளர்; ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் பேசிய பேச்சு வீடியோவாக பதிவாகி இருந்தால், அதனை ஷேர் செய்யுங்கள். இதெல்லாம் சுய விளம்பரமாக சிலர் பார்த்தாலும் உங்களை ஒரு பிராண்டாக இவை மாற்றும்.
தொடர்ச்சி அவசியம்!
செல்ஃப் பிராண்டிங் என்பது ஒரு தொடர்ச்சியான செயல் முறை. இதனை ஒரு மாதம் செய்வோம் என்று செய்துவிட்டு, விட்டுவிடக் கூடாது. சில தகுதிகளை ஒருவர் வளர்த்து கொள்ள அவர் அதனை தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால்தான் நீங்கள் ‘இன்ஃப்ளுயெஸ்’ செய்யும் மனிதனாக மாற முடியும்.
ஒரு விருந்தில் பிராண்டு களுக்கான ஒரு சோதனை நடத்தப்பட்டது. அந்த விருந்தில் குளிர்பானமும் இருந்தது, பாலும் இருந்தது. ஆனால், பாலின் நன்மைகள் பற்றி பல வாசகங்களை விருந்து நடக்கும் அரங்கில் எழுதி வைத்திருந்தனர். இந்த வாசகங்களை படித்தபடியே சென்றவர்கள் பலரும் பாலையே எடுத்துப் பருகினார்கள். இதைத்தான் இன்ஃப்ளுயெஸிங் என்கிறோம்.
இப்படித்தான் உலகின் முன்னணி பிராண்டுகள் உருவாகி இருக்கின்றன. சில தனி மனிதர்களும் நாம் பிரபலங்கள் என்பவர்களும் இப்படித்தான் உருவாகி இருக்கிறார்கள்.
மோடி, தோனியால் முடியும் என்றால் உங்களாலும் முடியும். ஒரு மனிதன் 500 நாட்கள் தொடர்ந்து இதை எல்லாம் செய்ய முடியும் எனில், அவர் நிச்சயம் பிரபலமாக மாற முடியும்.
ச.ஸ்ரீராம்
கோக், பெப்சி, கே.எஃப்.சி போன்ற பிராண்டுகள் கடந்த பல ஆண்டுகளில் மக்கள் மனதில் இடம்பிடித்தவை. ஆனால், வெறும் 500 நாட்களில் ஒரு பிராண்டை உருவாக்கி, மக்கள் மனதில் இடம்பிடிக்க வைக்க முடியுமா?

இணையம் முக்கியம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum