+ சைபோர்க் மனிதர்கள் (Cyborg People) +
Thu Dec 17, 2015 12:42 pm
+ சைபோர்க் மனிதர்கள் (Cyborg People) +
இந்த செய்தியை படிக்கத்துவங்குவதற்கு முன் ஒரு நிமிடம், கற்காலத்து மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று நினைத்துப்பார்த்துக்கொள்ளுங்கள். குகையே வீடு, வேட்டையாடுதலே தொழில், இலைகளே ஆடை என அலைந்து திரிந்த நம் முன்னோர்களில் இருந்து நாம் மிகவும் முன்னேறி வந்தோம்.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்களைக் காட்டிலும், இந்த நூற்றாண்டின் மனிதர்கள், கையில் ஸ்மார்ட் போன், காதுகளில் ப்ளுடூத் என பல்வேறு விஞ்ஞான வளர்சியைக் கண்டுள்ளார்கள்.
இப்போது நாளைய மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்! தொழில்நுட்பமும், மனித உடலும் இன்னும் நெருக்கமாக பின்னிப் பிணைந்திருக்க கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளது அல்லவா?!
ஆம். நாளைய மனிதர்கள் தொழில்நுட்பத்தை உடலுக்கு உள்ளே (Implant) பொருத்திக்கொள்வார்கள்.
உடலுக்குள் சிலிக்கான் சிப்பை (பயோ சிப்) பொருத்திக்கொள்ளும் மனிதர்களுக்கு சைபோர்க் (Cyborg) என்று பெயர்.
இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த கெவின் வார்விக் (Kevin Warwick), 1988 ம் வருடம் தனது கையில் பயோ சிப்பை பொருத்திக்கொண்டு உலகின் முதல் சைபோர்க் மனிதனாக மாறினார்.
அதாவது அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியில் நடக்கப்போகின்ற மாபெரும் காரியத்தை முதாவது உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் எனலாம். மேற்கு லண்டன் அருகே உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தின் (University of Reading) சைபர்னட்டிக்ஸ் (Cybernetics) துறையில் பேராசிரியராக பணியாற்றுபவர் கெவின் வார்விக். “எந்தவித செயலையும் விஞ்ஞானத்தின் மூலம் கட்டுபடுத்தும்” (control of any system using technology) துறைக்கு சைபர்னட்டிக்ஸ் என்று பெயர்.
விஞ்ஞானத்தின் மூலம் மனிதனை கட்டுப்படுத்தும் ஆசை கெவின் வார்விக்-கிற்கு வரவே, அவர் தனது வலது கையில் பயோ சிப்-ஐ பொருத்திக் கொண்டார். ரேடியோ அலைகள் (Radio Frequency) மூலம் செயல்பட்ட அந்த சிப் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தது. இது அவருடைய அனைத்து அசைவுகளையும் கணினியில் கண்காணிக்க வழி செய்தது. ரேடியோ அலைகள் (Radio Frequency) மூலம் பயோசிப்பானது துறை முழுவதும் உள்ள ஆண்டனாக்களுடன் தொடர்பு கொண்டன.
பிரதான வாயிலில் கம்ப்யூட்டரால் இயக்கப்பட்ட குரல் பெட்டி கெவின் நுழைந்ததும் ஹலோ என்று வரவேற்பு சொல்லும். கெவினின் அசைவுகளை உணர்ந்து கொண்ட கம்ப்யூட்டர் ஆய்வுக்கூடத்தை நெருங்கியதும், கதவுகள் தானாக திறக்கப்பட்டு விளக்குகளை ஒளிரும். இப்படியாக மனித உடலில் பயோசிப் பொருத்துகின்ற முறையானது வெற்றி பெற்றது.
சிலிக்கான் சிப் போன்ற சாதனங்களை உடலில் பொருத்திக்கொண்டு, மூளையில் இருந்து புறப்படும் சிந்தனை அலைகளை புற உலகுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்துவதற்கான முயற்சியாக உள்ளது. வார்விக் முதல் முறையாக சிப்பை பொருத்திக்கொண்டு சைபோர்க் ஆன பிறகு அடுத்த சில ஆண்டுகளில் மேலும் மேம்பட்ட சிப்பை பொருத்திக்கொண்டு தனது எண்ண அலைகள் மூலம் இயந்திட கையை இயக்கி காட்டினார்.
அவரது துணைவியும் அவரைப்போலவே சிப் பொருத்திக்கொண்டார். இதன் பயனாக மனைவியின் அசைவுகளையும் அவரால் சிப் மூலமே உணர முடிந்தது. இது போன்ற முயற்சிகள் மூலம், அடுத்த நூற்றாண்டியில் எண்ணங்களால் பரஸ்பரம் தொடர்பு கொள்வது சாத்தியமாகலாம் என்றும் அவர் சொல்கிறார்.
“அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கு..” (வெளி 13:16) என்ற தீர்க்கதரிசன வசனம் வெகுவிரைவில் நிறைவேறப்போகின்றது.
அதற்குமுன் இரகசிய வருக்கையில் இயேசுவை சந்திக்க ஆயத்தமாயிருங்கள்.
Re: + சைபோர்க் மனிதர்கள் (Cyborg People) +
Thu Dec 17, 2015 12:45 pm
மிருகத்தின் முத்திரை
அந்தி கிறிஸ்துவின் ஆட்சிக்கு உலகம் விரைவாக ஆயத்தாமாகி வருவதைப் பற்றி பார்த்தோம்.
பிறப்புச் சான்றிதழ், பிளஸ் டூ மதிப்பெண் விவரம், பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு சர்ட்டிபிகேட், வேலையில் இருந்தால் அதற்கான நியமன உத்தரவு, உங்களோட வங்கிக் கணக்கு, கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், டிரைவிங் லைசன்ஸ், இன்கம் டாக்ஸ் பான் கார்ட், ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, எக்ஸ்ரே, ஸ்கேன் அறிக்கை, ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட் என பல பாதுகாத்து வைத்திருப்போம்.
எந்த சைட்-க்கு போனாலும் பாஸ்வர்டு-யை நினைவில் வைத்து டைப் செய்யணும். ரொம்பவே கஷ்டம் இல்லையா. இதுக்கு விடிவு காலம் வராதா என்று யோசிகின்றீர்களா?
பயோசிப் என்கின்ற ஆர் எப் ஐ டி (RFID - Radio-frequency identification) முறை தான் இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி. இப்படிப்பட்ட நல்லதொரு அறிவியல் காண்டுபிடிப்பை யாராவது எதிர்த்து போராடுவார்களா? நிச்சயமாக உண்மைக் கிறிஸ்தவர்கள் போராடுவார்கள்.
பயோ சிப் எனப்படுவது சின்னஞ்சிறு மைக்ரோ கம்ப்யூட்டர் சில்லு. அரிசி மணி அளவு தான் நீளம், அகலம், உயரம். அறிவியல் பரிபாஷையில் சொன்னால் பாசிவ் டிரான்ஸ்பாண்டர் (passive transponder). அதாவது சாதுவான தகவல் பரப்பி.
பயோசிப்பில் லேசர் கதிரைக் கொண்டு ஏதாவது தகவலைப் பொறித்து வைக்க வேண்டியது. இந்த சில்லுகளை மோப்பம் பிடிக்கும் கருவியான ஸ்கேனர் முன்னால் பயோசிப் வரும்போது, பொறித்து வைத்த தகவல் ஸ்கேனருக்கும் அங்கே இருந்து அதோடு இணைத்த கம்ப்யூட்டருக்கும் பரிமாறப்படும்.
உலகில் ஒரு மூலையில் இருக்கிற கம்ப்யூட்டரை இன்னொரு கோடியில் இருக்கிற மற்றொரு கம்ப்யூட்டரோடு இணைக்கிறது சாத்தியமான தொழில்நுட்ப யுகம் இது என்பதால், சில்லுத் தகவல் ஒரு வினாடிக்குள் கண்டம் தாண்டி, கடல் கடந்து போய்ச் சேர வாய்ப்பு உண்டு.
அமெரிக்காவில் வளர்ப்பு மிருகங்கள் தொலைந்து போனால் தேட வசதியாக பயோ சிப்பில் அந்த நாய், பூனை, கிளி, போன்ற அப்பிராணிகளைப் பற்றிய தகவல் பதிந்து வைப்பது அறிமுகமானது.
பதினாறு இலக்க எண். ஒவ்வொரு இலக்கமும் ஒரு வரலாற்றையே சொல்லும். நாய்க்குட்டி என்ன இனம், எஜமானர் விவரம், விலாசம், இரண்டு ஜன்மங்களின் பிறந்த நாள், வயது இப்படியான தகவல்கள் அதெல்லாம். பயோசிப்பை நாய்க்குட்டியின் காதில் அல்லது கழுத்தில் சிரிஞ்ச் மூலம் ஊசி குத்தி விட்டால் அது பாட்டுக்கு சமர்த்தாக அங்கேயே இருக்கும்.
தொலைந்து போன பிராணி வேறு யார் கையிலாவது கிட்டினால், பக்கத்து வெட்டினரி டாக்டரிடம் கொண்டு போனால் போதும். அவர் ஸ்கேனரை அதன் கழுத்தில் காட்டி செல்லப் பிராணியுன் உரிமையாளர்களிடம் சேர்த்து வருகின்றார்கள்.
இந்தியாவில் TVASTA ID INDIA PRIVATE LIMITED, Vitaran Electronics (P) Ltd போன்ற நிறுவனங்கள் ஆர் எப் ஐ டி-களை தயாரித்து வருகின்றார்கள். ANIMAL TRACKING TAG, CYLINDER TAG, CYCLE TAG, WRIST BAND என பல்வேறு வகைகளில் பயோசிப்கள் தயாரிக்கப்படுகின்றன.
அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியின் முதல் சில மாதங்களில், உலகத்திலுள்ள யாவரும் தன்னுடைய முத்திரையை பெறும்படிக்கு வலுக்கட்டாயம் பண்ணுவான். நிச்சயமாக எல்லா மனிதர்களுக்கும் பயோசிப் பொருத்தி அவர்களை கண்காணிக்கும் யுக்தியை அவன் கையாளுவான்.
வெளி 13:16-17. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum