கிறிஸ்தவ பெற்றோர்களின் கவனத்திற்கு ...
Thu Dec 17, 2015 9:00 am
பத்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்வோமானால்!!!
ஒவ்வொரு பரிசுத்த ஒய்வு நாள் (ஞாயிற்றுக் கிழமை) தேவாலயங்கள் நிரம்பி வழியும்,
அதிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஞாயிறு பள்ளி (சண்டே ஸ்கூல்) விட்டு செல்வர், ஆலயம் முடியவும், ஞாயிறு பள்ளி முடியவும் நேரம் சரியாக இருக்கும், சிறு பிள்ளைகள்,வாலிப பிள்ளைகளை பெற்றார்கள் அழைத்து செல்வர் இவற்றை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்!!!
இன்று நாம் பார்க்கும் காரியம் ஞாயிறு பள்ளி வெறிச்சோடி காணப்படுவது தான்,
காரணம் இது தான் "போட்டியும்,பொறாமையும் நிறைந்த இந்த உலகம் இப்பொழுது விஞ்ஞான வளர்ச்சியில் வேகமாக சென்று கொண்டிருகிறது,
தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறப்பாய் வாழவேண்டுமென்றால்? அதிகமாகவும்,நன்றாகவும் படிக்கச் வேண்டும், ஆகையால் தினமும் டியூஷன் அனுப்பி விடுகின்றனர் ஆலயம் வர கூட நேரம் கிடைபதில்லை அந்த சிறு பிள்ளைகளுக்கு....
ஒரு முறை இளம் விஞ்ஞானி ஒருவர் ரயில் பிரயானமாக இருந்தார், அவர் முன்னால் ஒரு வயதானவர் புஸ்தகம் படித்தபடி இருந்தார், இளம் விஞ்ஞானிக்கு பிரயாண சலிப்பு வர, தன் எதிரில் இருபவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்
"என்னப்பா அடிக்கடி உன்னை இந்த ரயிலில் நான் பார்த்திருக்கிறேன் எப்பவும் இதே புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறாய்!! என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றார் கர்வம் மிக்க குரலில்!
அந்த வயதானவர் சிறு புன்னகையோடு நீங்கள் யார் என்றார் தாழ்மையாக,
நான் ஒரு விஞ்ஞானி என்றார் பெருமையோடு, நான் சில ஆராய்ச்சி செய்து கொண்டிருகிறேன் என்றார்
அந்த வயதானவர், அப்படியா உனக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் என்னை வந்து பார் என்று சொல்லி தன் முகவரியை கொடுத்தார்,
அந்த வயதானவரிடம் உன் முகவரியை கொடு என்றார் அவரும் கொடுத்தார் அதை வாங்கி பார்த்த அந்த இளம் விஞ்ஞானிக்கு பெரிய அதிர்ச்சி
தன் எதிரில் இருப்பவர் "தாமஸ் ஆல்வா எடிசன்" என்று தெரிந்தவுடன்!!! அய்யா நான் உங்களை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்றார் வெட்கத்தோடு,
அவரும் தன்னுடைய ஆராய்ச்சி கூடத்திற்கு இளம் விஞ்ஞானியை கூட்டி செல்கிறார், தூசியும்,குப்பையுமாக காணபட்ட எடிசனின் ஆராய்ச்சி கூடம் இவரை முகம் சுளிக்க வைத்தது,
அய்யா உங்களின் அறிய கண்டுபிடிப்புகளின் துவக்கம் எங்கே? எதை வைத்து உங்கள் ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறீர்கள்? புதிய சிந்தனைகள் உங்களுக்கு எப்படி மட்டும் வருகிறது? என்றார்,
எடிசன் தன் பையில் இருந்த "வேதபுத்தகத்தை"(பைபிள்) எடுத்து காண்பித்தார், "என்னுடைய எல்லா கண்டுபிடிப்புகளின் துவக்கம் இங்கு இருந்து தான் வந்தது" என்றார் அமைதியாக....
உங்கள் பிள்ளைகள் படிக்கும் பாட புத்தகத்தில் இருக்கும் இந்த "தாமஸ் ஆல்வா எடிசன்" மூளை கோளாறு உள்ளவன் என்றும், கல்வி பயில தகுதி இல்லாதவன் என்றும் உலகத்தால் முத்திரை குத்தபட்டவர்" வேதம் ஒன்றே உலக அளவில் இவரை உயர்த்தியது மறுக்கமுடியாத உண்மை.... சிந்தியுங்கள்..........
-உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.யாக்கோபு 1:5

Permissions in this forum:
You cannot reply to topics in this forum