அந்த விசுவாசம் உங்களிடம் உண்டா????
Thu Dec 17, 2015 8:39 am
எதிர்பாராத ஒரு நாள்!! திடிரென்று ஒரு மனிதர் உங்கள் முன்னாள் வருகிறார், நீங்கள் அவரை இதற்கு முன் பார்த்ததே கிடையாது, அந்த மனிதர் பல லட்சங்கள், பல ஏக்கர் நிலங்கள், பெரிய பங்களா, என்று உங்களுக்கு கொடுக்கிறார்!!! இதெல்லாம் உங்கள் பெற்றோர் உங்களுக்காக சேர்த்துவைத்தது, அவர்கள் மரித்த பின்னர் உங்களிடம் கொடுக்க சொன்னார்கள் என்று மட்டும் சொல்கிறார் அவர், அவ்வளவுதான் மறு கணம் அடையும் மகிழ்சிக்கு அளவே இருக்காது, இவ்வளவு மதிப்பு மிக்க சொத்துக்களை எப்படி விட முடியும்? விட்டு கொடுக்க முடியும்???
சில நேரங்களில் நாம் பல முடிவுகள், முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான முடிவை எதிர்நோக்கி கொண்டிருப்போம், தோல்வியடையும்போது மனம் வேதனையால் நிரம்பும், வெற்றி பெர்ற்றவர்களை பார்த்து நாம் சிந்திப்பது "இறைவன் அவரை ஆசிர்வதித்தார்" போல, என்னை மறந்துவிட்டார் அதுதான் இந்த தோல்வி எனக்கு என்று,
நீங்கள் மேற்கொள்ளும் பிரயாசங்கள் தோல்வியில் முடியும்போது தான் தேவன் உங்களை இந்த உலகத்தில் இருந்து பிரித்து எடுக்கிறார் என்பது தெரியுமா? உங்களுக்கு? அதற்குள் இயேசு கிறிஸ்துவை ஆயிரம் கேள்விகள் கேட்டு அவரிடம் கோபம்கொண்டு அனேக வார்த்தைகளினால் அவரை காயப்படுத்தி அவரை மீண்டும் மீண்டும் சிலுவையில் அறைகிறவர்கள் நாம் தான்...
எதிர்பார்க்காத ஆஸ்தி, அந்தஸ்து நம்மை தேடிவரும்போது அதை வேண்டாம், இவைகள் என்னுடைய உழைப்பு இல்லை, இதற்கு நான் தகுதியானவன் இல்லை என்று சொல்ல வராத மனம்!!! ஒரு தோல்வி (அது உலகப்பிரகாரமாக) (இயேசு கிறிஸ்துவினிமித்தம் அது வெற்றியே) வந்தவுடன் படைத்தவரையே கேள்வி கேட்க மட்டும் மனம் வருவதேனோ???
அன்று பரிசேயர்கள் கேட்டார்கள் நீ மேசியாவா என்று? அனேக மக்கள் நகைத்தார்கள் நீ இறைவன் என்றால் எனக்கு நிருபித்து காட்டு என்று, உடன் இருந்த தூய பேதுரு இயேசுவை அறியேன் என்று ஓடினார்,
யூதாஸ் காரியோத்து பணத்திற்காக காட்டி கொடுத்தான் "இவைகளெல்லாம் அவர்களுடைய அவிசுவாசத்தை காட்டுகிறது" ஆனால்? இயேசுவை ஒருமுறை கூட பார்த்திராத, ஒரு முறை கூட பேசிராத அந்த பார்வை இல்லாத "குருடன்" வந்தான் இயேசு தான் மேசியா என்று!!! அந்த விசுவாசம் உங்களிடம் உண்டா????
-அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்-I பேதுரு:1:8,9..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum