ஒரு முறை உங்கள் வாழ்க்கையில் ... அனுமதித்து பாருங்கள்
Thu Dec 17, 2015 8:35 am
ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படித்த இரண்டு நண்பர்கள் பழுது போன தங்கள் போர்ட் (Ford) காரை சரி செய்துகொண்டிருந்தனர், பல மணி நேரம் போராடியும் அந்த காரை சரி செய்ய முடியவில்லை, என்னவாக இருக்கும் என்று பயங்கரமாக சிந்தித்து கொண்டிருந்தனர்
அப்பொழுது ஒரு வயதானவர் இவர்களிடம் வந்து என்ன பிரச்சனை என்று பொறுமையோடு கேட்டார், கோபம் கொண்ட அந்த வாலிபர்கள் எங்கள் கார் பழுதாகிவிட்டது எப்படி என்று யோசித்து கொண்டிருக்கிறோம் என்றனர், மெல்லிய சிரிப்போடு, நான் என்ன பிரச்சனை என்று பார்க்கட்டுமா? என்றார்!!!
இன்னும் அதிக கோபம் கொண்ட அந்த வாலிபர்கள் "ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்" படித்த எங்கனாலயே கண்டுபிடிக்க முடியவில்லை நீ கண்டுபிடிக்கபோகறாய? என்று ஆணவத்தோடும்,கிண்டலோடும் பேசுகிறார்கள், வயதானவர் மீண்டும் ஒரு வாய்ப்பை கேட்க சரி என்கின்றனர், அவர் சில நிமிடங்களில் அந்த காரை சரி செய்து கொடுக்கிறார்!!! இந்த இரண்டு வாலிபர்களுக்கும் பயங்கர ஆச்சர்யம் படித்த எங்களால் சரி செய்ய முடியவில்லை! நீங்கள் எப்படி சரி செய்திர்கள் என்றனர் அதற்கு அவர் "எனது பெயர் போர்ட் (Ford) இந்த காரை உருவாக்கியவரே நான் தான் என்றார் அமைதியாக!!!!
அனேக நேரங்களில் நாமும் இப்படியாகத்தான் இருக்கிறோம், நமக்கு நேரிடும் போராட்டங்களில் இருந்து விடுபட நம்முடைய சுய பலத்தையும், சுய சிந்தையையும் நம்பி இருக்கிறோம், நம்மிடம் இருக்கும் செல்வம், செல்வாக்கு, பட்டம், பதவி, புகழ் போன்றவற்றை வைத்து அணைத்து பிரச்சனைகளையும் ஜெயித்துவிடலாம் என்ற தவறான நம்பிக்கையால் இறுதியில் என்ன செய்வது எப்படி செய்வது என்று தெரியாமல் தவித்து கலங்கி நிற்கிறோம்,
நம்மை படைத்த "இயேசு கிறிஸ்து" விற்கு மட்டுமே தெரியும் நம்முடைய பிரச்சனைகளையும், போராட்டங்களில் இருந்து நம்மை தப்புவிப்பதற்கு!!! ஒரு முறை உங்கள் வாழ்க்கையில் இயேசுவை அனுமதித்து பாருங்கள், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை...
-இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.வெளி 3:20.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum