கைதியின் வாக்குமூலம்
Thu Dec 17, 2015 8:31 am
ஆண்டுகள் 7 பின்னோக்கி செல்வோம்
மும்பை மாநகரத்திலே புகழ் பெற்ற 5 நட்சத்திர விடுதி ஒன்றில் சில தீவரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்!
அதில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி ஒருவன் விசாரணை கைதியாக சிறையில் இருந்ததும் நாம் அறிந்ததே!!!
அந்த கைதியின் வாக்குமூலம் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை...
என் கையில் துப்பாகியுடன் ஒவ்வொரு அறையாக நுழைந்தேன். அங்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்திருந்த மூன்று ஆண்களை பிணை கைதிகளாக பிடிதேன், நீங்கள் யாரென்று அதட்டினேன், அவர்களோ நாங்கள் "கிறிஸ்தவர்கள்" என்று கம்பீரமாக சொன்னார்கள்!
எனக்கு பயங்கரமான கோபம் வந்தது, உள்ளே வேறு யாரேனும் இருகிறார்களா என்று பார்க்கும்போது மேலும் ஒரு அறை காவலர் என்னிடம் பிணை கைதியாக சிக்கினார், இவர்களை கொடூரமாக கொலை செய்யவேண்டும் என்று முடிவு செய்யும் நேரம் தேசிய பாதுக்காப்பு படை வீரர்கள் உள்ளே வந்து விட்டார்கள் நான் இவர்கள் நான்கு பேரையும் கழிவறையில் அடைத்தேன்
மீண்டும் தேசிய பாதுக்காப்பு படை வீரர்களுடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது ஆனாலும் நான் அவர்களிடம் வகையாக சிக்கிக்கொண்டேன், என்னை விசாரித்தார்கள் நான் அந்த நான்கு பேரையும் கழிவறையில் அடைத்ததை கூறினேன், என் கண் முன்னால் கழிவறை கதவு திறக்கப்பட்டது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது!!!
உள்ளே ஐந்து பேர் இருகிறார்கள், எனக்கு ஒரே குழப்பம் யார் இந்த ஐந்தாவது நபர் எப்படி உள்ளே வந்தார் என்று அந்த கைதிகளிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் "நாங்கள் கிறிஸ்தவர்கள்" என்று மட்டும் சொன்னார்கள்!!! இயேசு உன்னை நேசிக்கிறார் என்றும் சொன்னார்கள்....
யார் அந்த ஐந்தாவது நபர்???
என்னை மீறி எப்படி அவர் உள்ளே வந்தார்??
நான் ஏன் இந்த முறை இவர்களை கண்டதும் சுட்டு கொல்லவில்லை?
இந்த கேள்விகளுக்கு இன்னும் எனக்கு விடை கிடைக்கவில்லை என்று சொல்லியிருகிறார்....
அந்த ஐந்தாவது நபர் யாராக இருக்கும் என்று சிந்திக்க முடிகிறதா???
-உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.-
ஏசாயா 41:13...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum