காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் வாக்குமூலம் செல்லத்தக்கதா?
Thu Aug 08, 2013 9:20 pm
எந்த ஓர் வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் போலீசாரிடம் ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அது சட்டப்படி செல்லத்தக்கதல்ல. காவல் துறையினர் கைதியை அடித்து மிரட்டி, ஆசை வார்த்தை கூறி வாங்கப்படும் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது (சாட்சியச் சட்டம் பிரிவு 25)
சாட்சியச் சட்டம் பிரிவு 27 இன்படி ஏதேனும் பொருட்கள் ஒப்புதல் வாக்கு மூலத்தில் சொல்லியுள்ளவாறு கைப்பற்றப்பட்டால் அதுமட்டுமே சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
ஓர் வழக்கில் புகார் கொடுத்த காவல் அதிகாரியே அந்தப்புகாரை விசாரிக்கும் அதிகாரியாகவும் இருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானது. பகவத் சிங் எதிர் இராஜஸ்தான் அரசு (AIR 1976 SC 985)
கீழ்க் கண்ட காரணத்தால் ஓர் வழக்கை காவல் அதிகாரி விசாரிக்க மறுக்கலாம்.
அ. முக்கியமில்லா (அற்பமான) வழக்குகள்
ஆ. உரிமையியல் வழக்குகள்
இ. சிறு திருட்டு வழக்குகள்
ஈ. காயம்பட்டவர் வழக்கு விசாரிக்க வேண்டாம் எனக் கூறும்
வழக்குகள்.
உ. கண்டறிய முடியா சிறு வழக்குகள்
ஊ. மிகைப்படுத்திக் கூறப்படும் தாக்குதல் வழக்குகள்
எ. பிடியாணை வேண்டும் என கூறப்படும் குற்றங்கள்.
ஏ. உண்மையற்ற வழக்குகள், காலங் கடந்த வழக்குகள்
நன்றி: கீற்று
Permissions in this forum:
You cannot reply to topics in this forum