நீங்கள் வாழும் கிறிஸ்தவர்களா? பெயர் கிறிஸ்தவர்களா???
Thu Dec 17, 2015 7:53 am
இந்த புகைப்பட பதிவை படிக்கும்போது சற்று வேடிக்கையாக இருந்தது!!! மெல்லிய சிரிப்போடு மீண்டும் மீண்டும் படிக்கும்போது ஒன்று ஊர்ஜிதமாகிறது, நிச்சயம் இது யாரோ ஒருவரால் எழுதப்பட்ட ஒரு கற்பனை எழுத்துக்களாக இருக்காது என்பது தான் அது!!!
என்னதான் தேவாலயத்திற்கு தவறாது சென்றாலும், ஆவிக்குரிய எழுப்புதல், போதனைகளை கேட்டாலும், வேதம் வாசித்தாலும், ஜெபம் செய்தாலும் கூட இக்கட்டான சூழ்நிலை வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது இயேசு கிறிஸ்துவிற்குள் நமக்கு இருக்கும் நம்பிக்கை, விசுவாசம் எப்படிப்பட்டது என்று!!!
இயேசு கிறிஸ்துவை முழு இருதயத்தோடு இறுதி மூச்சு வரை விசுவாசிபவர்களே வாழ்கையில் கிறிஸ்தவர்கள்!! விசுவாசம் இல்லாதவர்கள் பெயரில் மட்டுமே கிறிஸ்தவர்கள்!!! உங்களிடம் நீங்களே கேளுங்கள்- நீங்கள் வாழும் கிறிஸ்தவர்களா? பெயர் கிறிஸ்தவர்களா???
-சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?-ரோமர் 3:3
Re: நீங்கள் வாழும் கிறிஸ்தவர்களா? பெயர் கிறிஸ்தவர்களா???
Thu Dec 17, 2015 7:55 am
சில விசித்திரமான மனிதர்களையும் (தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிறார்கள்) அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், அந்த நம்பிகையை மற்றவர்களிடமும் சொல்லி ஒரு புரட்சியையே செய்கின்றனர் இன்றைய காலகட்டத்தில் (அதாவது கடைசி காலம்)... சரி எப்படிப்பட்டதான "நம்பிக்கை" அது?
வாழும் காலத்தில் நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, ஆனால்? வயதாகி மறிக்கும் நேரம் பார்த்து ரத்த சாட்சியாக மறித்து விட்டால்? அப்பொழுதே பரலோகம் சென்றுவிடுவோம் என்பது தான் இவர்களின் புனிதமான நம்பிக்கை..
வேதம் சொல்கிறதா? வயதாகி பெலனற்று போகும் வேலையில் என்னை (இயேசு) குறித்து பிரசங்கம் பண்ணி மரிபீர்களாகில் ? பரலோக ராஜியத்தை சுதந்திரித்து கொள்விர்கள் என்று???.... வேதம் சொல்கிறது, என்னை விசுவாசியாமல், தன் போக்கில் வாழ்ந்து என் வருகையில் என்னை பார்த்து என்னை எற்றுகொள்பவனை/ளை நான் அறியேன் அவர்களுக்கு ஐயோ!!! என்று திட்டவட்டமான எச்சரிக்கையை கொடுகிறது!!!
-"நமக்கு பிடிக்காதவரை பார்த்து அவர்களை பற்றி குறை கூறும் வார்த்தைகள், கேலி செய்யும் வார்த்தைகள், திட்டும் வார்த்தைகள்,கெட்ட வார்த்தைகள், சபிக்கும் வார்த்தைகள், பரியாசம் செய்யும் வார்த்தைகள், குழுவாக அமர்ந்து விமர்சிக்கும் வார்த்தைகள், அவர்கள் பின்னே இழிவாக பேசும் வார்த்தைகள், அருவெறுப்பாக வீண் பழி சுமத்தும் வார்த்தைகள், போன்றவற்றை நாம் என்று வெறுத்து அந்த தீய பழக்கத்தை விட்டு வெளியே வருகிறோமோ? அன்று தான் நம் வாழ்க்கை பரலோக ராஜியத்தை சுதந்திரித்து கொள்ளும்!!!
இந்த பழக்கத்தை இப்படி நாம் வெறுக்க முடியும்? அல்லது தப்பித்துகொள்ள முடியும் என்றால்? வேத புத்தகத்தை தினமும் தியானியுங்கள்! "எழுதப்பட்ட" வார்த்தைகளை நேசித்து அவற்றை நாம் தேடி போகும்போது, "ஜீவனுள்ள" வார்த்தை (இயேசு) உங்களை தேடிவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!!
இயேசு கிறிஸ்துவிற்காக மரிப்பது கஷ்டம் என்றால்??? அவர் சொன்ன வார்த்தைகளின் படி நாம் வாழ்ந்து காட்டுவது மரிப்பதை காட்டிலும் அதிக கஷ்டமே, வாழ்கையில் இயேசுவை பிரதிபலித்து காட்டுவோம், சாவில் அல்ல, தவறான போதனை என்றும் உங்களுக்கு வேதனை!!!!
-உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.-லூக்கா 11:52.....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum