ஈவென்ட் மானேஜ்மென்ட் தொழில் தொடங்குவது எப்படி?
Wed Dec 16, 2015 8:16 am
இன்று நகர்ப் புறங்களில் மிகவும் தேவைப்படும் வெற்றிகரமான தொழில்(Business) இது.
முன்பெல்லாம் இல்லங்களில் கல்யாணம்(Marriage), காதுகுத்து, சடங்கு என்று நடக்கும். அதற்கு அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என்று ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்து விடுவார்கள். பிறகு கல்யாணங்களுக்கு காண்ட்ராக்ட்(Contract) முறை வந்து விட்டது. சமையல் பணியை எடுத்து நடத்துபவர்களே A-Z கல்யாணம் சம்பந்தப் பட்ட வேலைகளை செய்து தருகிறார்கள். கல்யாணம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு(Events) இது பொருந்தும். இதைத் தவிர மற்ற விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும் என்றால்?
இன்றைய வாழ்க்கை முறையில் “பார்ட்டி” இல்லாத வீடுகள்(Houses) உண்டா? திருமண நாள் கொண்டாட்டம், புதுமனை புகு விழா, குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், நியூ இயர் பார்ட்டி இது தவிர, அபார்ட்மெண்ட்களில்(Apartments) – பண்டிகைகள், கெட்-டு-கெதர்,
இப்படி எத்தனையோ!
சிறிய, நடுத்தர அளவிலான நிறுவனங்கள் கூட – தங்களுடைய ஊழியர்களை (Employees)உற்சாகப் படுத்துவதற்காக வருடாந்திரக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
இந்த மாதிரி விழாக்களை நல்ல முறையில் நடத்திக் கொடுப்பதுதான் ஈவண்ட் மானேஜ்மெண்ட்(Event management).
இப்படி எத்தனையோ!
சிறிய, நடுத்தர அளவிலான நிறுவனங்கள் கூட – தங்களுடைய ஊழியர்களை (Employees)உற்சாகப் படுத்துவதற்காக வருடாந்திரக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
இந்த மாதிரி விழாக்களை நல்ல முறையில் நடத்திக் கொடுப்பதுதான் ஈவண்ட் மானேஜ்மெண்ட்(Event management).
முதலில் நான் செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் ஒரு ஈவண்ட் மானேஜ்மெண்ட் கோ ஆர்டினேட்டராக(Co Ordinator) வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா! நல்லது. முதலில் இந்தத் தொழிலுக்குத் தேவையான தகவல்களை(Informations) சேகரித்து, ஒரு டேட்டா பேஸை(Database) உருவாக்குங்கள்.
டேட்டா பேஸ்? என்ன மாதிரியான தகவல்கள்?
வாடிக்கையாளர்கள் – யார் – விழாக்கள், பார்ட்டிகள் நடத்துபவர்கள்.
அவர்களின் தேவை என்ன? விழாக்களுக்கான சிறப்பான ஏற்பாடுகள், விருந்து, பரிசுகள் முதலியன.
தேவையான பொருட்கள்(Products) கிடைக்கும் இடம், அவற்றை வழங்குபவர்கள், விலை, தரத்தின் ஒப்பு நோக்கு போன்ற விபரங்கள்.
தனியாக அலுவலகம்(Separate Office) தேவைப்படுமா?
ஆரம்பத்தில் தேவையில்லை. உங்கள் வீட்டு விலாசம்(Address), கைபேசி எண்ணை(Mobile no) உபயோகிக்கலாம்.
வாடிக்கையாளர்கள்(Customers) என்னை எப்படி அணுக முடியும்?
உங்கள் அபார்ட்மெண்ட் தகவல் பலகையில் உங்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கலாம்.
நண்பர்கள், உறவினர்களுக்கு ஈ மெயில்(E Mail), எஸ்.எம்.எஸ்(SMS) மூலம் தெரிவித்து, விளம்பரம் தேடலாம்.
உங்கள் பகுதியில் வரும் பத்திரிக்கைகளில் பேப்பர் இன்ஸர்ட் வைத்து, விளம்பரம்(Advertisement) செய்யலாம்.
நேரடியாக நிறுவனங்களை அணுகி, உங்களைப் பற்றிய தகவல் அடங்கிய கையேடைக் கொடுக்கலாம்.
எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவான ஐடியா(Idea) தேவை:
ஒரு உதாரணத்துடன் பேசினால் நன்றாகப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
உங்கள் அடுத்த வீட்டில் வசிக்கும் லல்லிக்குப் பிறந்த நாள். அவளது பெற்றோர்கள் உங்களை ஈவண்ட் மானேஜ்மெண்ட்டுக்காக அணுகுகிறார்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த விழாவை எப்படி சிறப்பாக நடத்திக் கொடுப்பீர்கள்?
இந்த இடத்தில் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள். அறுசுவையின் மற்ற பகுதிகளைக் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு, பின் ஒரு பேப்பரை(Paper) எடுத்து, என்னவெல்லாம் செய்வீர்கள் என்று எழுதுங்கள்.
என்ன இது பரீட்சையா என்று தோன்றுகிறதா, நமக்கு நாமேதானே மார்க் போட்டுக் கொள்ளப் போகிறோம், சரிதானே.
என்ன, யோசித்து விட்டீர்களா? சரி, பார்க்கலாம்.
முதலில் லல்லியின் பெற்றோர்களிடம் நிறையப் பேசி, டிஸ்கஸ் செய்ய வேண்டும்.
என்றைக்கு பிறந்த நாள், விழா நடக்கும் நேர அளவு, எத்தனை பேர் வருவார்கள், பெரியவர்கள், குழந்தைகள்(Kids) எத்தனை பேர், நடக்கும் இடம், முக்கியமாக அவர்களின் பட்ஜெட்…
விழா நடக்கும் நேரம் தெரிந்ததும் விருந்து எப்படி இருக்க வேண்டும், மெனு(Menu) இதெல்லாம் முடிவு செய்து விடலாம்.
வரும் விருந்தினர்களுக்கான கேம் ஷோ, குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள்(Kids Games), ரிடர்ன் கிஃப்ட், அதற்கான பட்ஜெட்…
பார்ட்டி ஹாலின் அலங்காரம், விருந்தினர்களுக்கான இருக்கைகள், புகைப் படம்(Photos), வீடியோ(Video) எடுக்க ஏற்பாடுகள், முக்கியமாக கேக்கின் அளவு, சுவை(Taste), அதில் எழுத வேண்டிய வாசகம்.. இப்படி எந்த சின்ன தகவலையும் விட்டு விடாமல், கவனமாகக் கேட்டு, குறித்துக் கொள்ளுங்கள்.
அப்பாடி, இத்தனை வேலையையும் நானே செய்ய வேண்டுமா? என்று மலைப்பாக இருக்கிறதா? வெயிட்..வெயிட்!
நீங்கள் இந்த வேலைகளை சரியான ஆட்களிடம்(Man Power) ஒப்படைத்து, அவை சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்து, தட்டிக் கொடுத்து, (திட்டி) வேலை(Work) வாங்கி, எதேனும் பிரச்னைகள் வந்தால் அழகாக சமாளித்து(பாத்தீங்களா, பாத்தீங்களா, இதெல்லாம் என்னால் எப்படி முடியும்) லல்லியின் பெற்றோர்கள் உங்களிடம் நன்றி சொல்லும் போது, அழகாகப் புன்னகைத்து …
இரண்டொரு நாளில் பில்(Bill) அனுப்புகிறேன் என்று சொல்லி.. இவ்வளவுதான், இவ்வளவேதான் ஈவண்ட் மானேஜ்மெண்ட்.
வேலையில் இறங்கி விட்டால் நீங்கள் எவ்வளவோ கற்றுக் கொள்ளலாம்(Learn), சாதிக்கலாம், சம்பாதிக்கலாம்.
பேக்கரி, காட்டரர், கேம்ஸ் ஷோ(Game Show) நடத்துபவர், வீடியோகிராஃபர் மற்றும் அலங்காரப் பொருட்கள் கிடைக்கும் கடைகள்(Shops) எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு விலாசங்கள் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். மாற்று ஏற்பாடுகள் செய்ய, விலை(Price), தரம் ஒப்பிட்டு நோக்க உதவியாக இருக்கும்.
வேலைகளுக்கான செக் லிஸ்ட் வைத்துக் கொண்டு, அவ்வப்போது சரி பாருங்கள்.
ரிடர்ன் கிஃப்ட்(Gift), விருந்து இவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டால், செய்யக்கூடிய/செய்ய வேண்டிய ஆல்டர்னேடிவ் பற்றி முதலிலேயே யோசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
எல்லாம் சரி, வருமானம் என்ன கிடைக்கும்?
நீங்கள் வாங்கிய பொருட்கள், பேக்கரி, காட்டரர் போன்றோருக்குக் கொடுத்த சம்பளம், இப்படி எல்லா செலவினங்களுக்கும் பில், வவுச்சர், பத்திரமாக வைத்துக் கொண்டு, ஒரு ஸ்டேட்மெண்ட் தயாரியுங்கள். (தொலைபேசி, போக்குவரத்து(Transport) செலவு உட்பட)
இதன் மொத்தக் கூட்டுத் தொகைதான் அசல் செலவு. (Actual Expenses). இந்தத் தொகையுடன் குறைந்த பட்சம் 15 சதவிகிதம் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த 15% சதவிகிதம்தான் உங்களுடைய் லாபம்(Profit).
சில டிப்ஸ்:
ஆரம்பத்தில் சிறிய பார்ட்டிகளை(Party) நடத்திக் கொடுத்து, கொஞ்சம் அனுபவம் வந்த பின், உதவியாளர்களை சேர்த்துக் கொண்டு, பெரிய விழாக்களை நடத்திக் கொடுக்கலாம்.
விழாக்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். இல்லங்களில் நடைபெறுவதும், அலுவகங்களுக்கான கொண்டாட்டங்களும் வேறுபட்டிருக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களின் தேவையை சரியாகப் புரிந்து கொள்வது முக்கியம்.
என்னதான் சொன்னாலும் ஆண்கள் இந்த மாதிரி மொத்த காண்ட்ராக்ட்(Contract) எடுத்து நடத்துவது போன்ற வேலையை செய்வார்கள், பெண்கள் செய்வது முடிகிற காரியமா என்ன?
சென்னையில் இரு பெண்கள் – ஷோபா, வித்யா என்று பெயர், அவர்கள் இருவரும் விபா என்ற பெயரில் மிகவும் சிறிதாக ஈவண்ட் மானேஜ்மெண்ட் தொடங்கினார்கள். இன்று சென்னையின் முக்கிய வருடாந்திர நிகழ்வுகள் எல்லாமே அவர்கள் பொறுப்பேற்று நடத்துவதுதான். மிஸ் சென்னை, திருமதி சென்னை, மிஸ்டர் சென்னை, மாம் & ஐ என்று பல நிகழ்ச்சிகள். தவிர மிகப் பெரிய கார்ப்பரேட்(Corporate) நிறுவனங்களின் விழாக் கொண்டாட்டங்களின் பொறுப்பும் இவர்களிடம்தான்.
நடிகை திரிஷா இவர்கள் நடத்திய அழகிப் போட்டியில் வென்றுதான் பின்னர் மாடலாகவும், இப்போது நடிகையாகவும் மின்னுகிறார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum