தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது? Empty தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது?

Wed Dec 16, 2015 12:11 am
சிஷர்கள் எழுதிக்கொடுத்த புதியஏற்பாடு தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது?

அன்றைக்கு சீஷர்கள் மக்களிடம் சென்று போதிக்கும் போது இவர்களை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டனர்?

27 புஸ்தகங்கள் தான் வேதம் என்பதை எப்படி அறிவது? 

இது மாதிரியான் கேள்விகளுக்கு இந்த ஒருபதிவு பதில் முழுமையாக தரமுடியாதுதான், ஆனாலும் முடிந்த அளவிற்கு சுருக்கமாக இவைகளை கற்போம்.

பழைய பதிவுகளிலிருந்து கிறிஸ்து மரித்து பரமேறிப்போனபின்னும் தேவனுடைய வெளிப்பாடு இன்னும் தொடரவெண்டியிருக்கிறது என்பதை பார்த்தோம். அந்த வெளிப்பாடுகளை வெளிப்படுத்தப்போவது அப்போஸ்தலர்கள் மற்றும் அவருடைய சீஷர்கள் என்பதையும் ஆதாரதோடு கற்றுக்கொண்டோம். (பழைய பதிவுகளில் இதை கற்றுக்கொள்ளவும்)

சபையை நடத்துவதற்கு தேவையான அனைத்து கோட்பாடுகளையும் கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த போது முழுமையாக போதிக்கவில்லை, அதை அப்போஸ்தலர்களே நமக்கு நிரூபங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அப்போஸ்தலர்கள் இதற்கான அதிகாரத்தையும் பெற்றிருந்தார்கள்

ஆதாரம்…..

. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். (யோவான் 17:18) 

இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்
(யோவான் 20:21)

இங்கே இயேசுகிறிஸ்து, அப்போஸ்தலர்களுக்கு கொடுத்த தனித்துவமான அதிகாரத்தை பார்க்கிறோம்.
மேலும், 
பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத் 18:18)

இதுவும் அப்போஸ்தலருக்கென்று தேவன் கொடுத்த தனித்துவமான அதிகாரம் என்பதை நாம் மறக்கக் கூடாது. 

அன்றைக்கு வேதம் கரங்களில் இல்லை, அப்போஸ்தலர்கள் வாயிலாக தேவன் வேதத்தை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். வேதம்முழுமையாக கொடுக்கப்படும் வரை அப்போஸ்தலர்களின் அதிகாரத்திலேயே சபை இயங்க்கிக் கொண்டுவந்தது. 

இங்கு ஒரு கேள்வி எழும்புகிறதும, இவர்கள் தான் தேவனுடைய அப்போஸ்தலர்கள் என்பதை எப்படி அறிவது, யார் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாதே!

அதனால் தான் தேவன் அப்போஸ்தலர்களை முதலில் இஸ்ரவேல் ஜனத்தண்டை அனுப்பும் போதும் அற்புதங்கள், அடையாளங்கள் செய்யும் அதிகாரத்தை கொடுத்தனுப்பினார்.

"அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து", (லூக் 9:1) 
என்று வாசிக்கிறோம்.

அவர்களை இந்த உலகம் முழுவதற்கும் அனுப்பும்போதும் இதைக் காட்டிலும் பெரிய அடையாளங்களைச் செய்யும் படி அதிகாரம் கொடுத்திருந்தார். 

ஆதாரம்….

"அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே". (2கொரி 12:12)

இதைக் குறித்து பரிசுத்த ஆவியானவரும் சாட்சிகொடுக்கிறார்,

"அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும்அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்". (அப் 14:3)

ஆக இந்த தனித்துவமான அற்புதங்கள்,அடையாளங்கள் எல்லாம் மக்கள் இவர்களை நம்புவதற்காக, தேவன் இவர்கள் மூலம் பேசுகிறார் என்று ஜனங்கள் நம்ப தேவன் ஏற்படுத்தினது. அல்லாவிட்டால் “தண்டெடுத்தவன் எல்லாம் தடியக்காரன் கதை” ஆகியிருக்கும். அப்போஸ்தலர்கள் தேவையில்லாத கள்ள ஊழியர்கள், புஸ்தகங்கள், சட்டங்கள், எதையும் சபைக்குள் வரவிடாமல் பார்த்துக்கொண்டனர். 

அப்போஸ்தலர் அல்லாத லூக்கா, யாக்கோபு, யூதா போன்றோரும் வேதத்தை எழுதியுள்ளனரே! என்று சிலர் கேட்பதுண்டு, ஆனால் இவர்கள் எழுதினதை அப்போஸ்தலர்கள் அங்கீகரித்தனர் என்பதே உண்மை. 

லூக்கா பவுலோடு இருந்தவர், யாக்கோபு மற்றும் யூதா பேதுருவோடு இருந்தவர்கள். 

பேதுரு, பவுலின் நிரூபங்கள் எல்லாவற்றையும் முழுமையாக படித்து அதை சபைகளுக்கு அனுமத்தித்தார் என்பதை பேதுருவின் வசனத்தாலே அறியலாம் (2பேது 3:15).

இந்த ஒருவசனமே நமக்கு ஒரு உண்மையை போதிக்கிறது, அதாவது பேதுரு போன்ற அப்போஸ்தலர்கள் அன்றைக்கு சபைக்கு எழுதப்பட்ட எல்லா வார்த்தைகளையும் சீர்தூக்கி பார்த்தபின்பே அனுமதித்துள்ளனர், அதனால் தான் சபையால் அங்கீகரிக்கப்பட்ட எபிரேயர் நிரூபம் பின்னாளில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. 

அப்போஸ்தலர்கள் அனுமதித்தது மாத்திரமே வேதமாக அல்லது சபைக்கு சட்டங்களாக சபை மூப்பர்களால் ஏற்படுத்தப்பட்டது, 

அப்போஸ்தலர்கள் காலம் முடிவடைவதற்குள்ளாகவே தேவன் தன்னுடைய வெளிப்பாட்டை எல்லாம் சபைக்கு கொடுத்துவிட்டார். 

கடைசி அப். யோவான் தான் மரிக்கும் தருவாயில் எழுதின வெளி. புத்தகத்தில் இனி இந்த வார்த்தையோடு ஒன்றையும் கூட்ட வேண்டாம் என்று சொல்லி வேதத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார், மரித்தும் போனார். இனி யாராவது ஏதாவது ஒரு புத்தகம் எழுதினாலும் அது வேதமல்ல, அப்படியே அதை எழுதினவர் இது வேதம் தான் என்று சாதித்தாலும், அது அதிகார்வப் பூர்வமான வேதமா என்பதை அங்கீகரிக்க ஒரு அப்போஸ்தலன் கூட கிடையாது, வேதவெளிப்பாடு முடிந்து விட்டது என்பதற்கு இதுவே சாட்சி.

இன்றைக்கு சபை வேதத்தின் அதிகாரத்தின் கீழ் நடந்து வருகிறது. யாருக்கு எது தேவையானாலும் வேதமே அடிப்படை, யாரும் வந்து எனக்கு தேவன் தரிசனமானார், சில புதிய சத்தியங்கள் எனக்கு மாத்திரம் வெளிப்படுத்தப் பட்டது என்று கூறமுடியாது...ஏனென்றால் நிறைவான வேதம் வந்து விட்டது. இப்பொழுது தேவன் வேதத்தின் மூலம் நம்மோடு இடைபடுகிறார். 

அதனால் தான் வேதம் சொல்லுகிறது,
நாம் அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களின் அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறோம் அதற்கு இயேசு மூலைக்கல்..........

மேற்கண்ட எல்லாவற்றிற்கும் சாட்சியாக புதியஏற்பாட்டில் உள்ள ஒருவசனம் நம்மை உற்சாகப்படுத்துகிறது

எபிரேயர் 2:3-4)

3. முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
4. அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

ஆமென் கர்த்தர் அவருடைய வசனத்தின் மூலம் நம்மோடிருப்பாராக….
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது? Empty Re: தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது?

Wed Dec 16, 2015 12:12 am
இந்த பதிவில் கிறிஸ்துவின் வார்த்தைக்கு நிகராக சிஷர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா? 
என்ற கேள்விக்கு பதிலை பார்க்கப்போகிறோம். 

சிலர் இயேசுவின் வார்த்தைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நிரூபங்களில் உள்ள அப்போஸ்தலர்களின் வார்த்தைக்கு கொடுப்பதில்லை, இதற்கு அவர்கள் கூறும் காரணம் இயேசுவை எப்படி அவருடை சீஷரோடு ஒப்பிட முடியும் என்பதே. 

இது சரியா? சீஷர்களின் வார்த்தை கிறிஸ்துவின் வார்த்தையை விட முக்கியத்துவம் குறைந்ததா?

சீஷர்கள் தாங்கள் எழுதின வார்த்தைகளை எங்கிருந்து எடுத்தனர்? அதே போல இயேசு கிறிஸ்து தான் பேசின வார்த்தைகளை எங்கிருந்து எடுத்துப்பேசினார் எனபதை கண்டுபிடித்தால் இதற்கு தீர்வு காணலாம். (The source of Jesus’ teaching & The source of Apostles’ teaching)

முதலில் இயேசு கிறிஸ்து பேசின வார்த்தைகளை குறித்து அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்..

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்". (யோவான் 12:49)

"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது".(யோவான் 7:16)

"ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்". (யோவான் 8:28)

மேற்கண்ட வசனங்கள் ஒன்றை தெளிவுபடுத்துகின்றன, கிறிஸ்து பேசின வார்த்தைகள் எல்லாம் பிதாவின் வார்த்தைகள், அவர் பேசினவைகளில் ஒன்று கூட அவருடைய சொந்த வார்த்தைகள் அல்ல.

இதைக் குறித்து எபிரேய ஆசிரியர் கூறும்போது

"1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,
2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; (எபி 1:1-3) 

அதாவது பழையஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் மூலமாய் பேசின தேவன் இப்போது இந்த கடைசி காலத்தில் தன் குமாரன் இயேசுகிறிஸ்துவின் “மூலம்” பேசுகிறார். 

ஆனால் கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு இதைகுறித்து சொல்லும்போது

12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

13. சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
(யோவா 16:12-14) 

அதாவது சீஷர்களுக்கு இயேசு எல்லா சத்தியத்தையும் வெளிப்படுத்தவில்லை, வெளிப்படுத்தாத சத்தியங்களை பரிசுத்த ஆவியானவர் பின்னாளில் வெளிப்படுத்துவார், 

அதுமாத்திரமல்ல 14 ஆம் வசனத்தில், பரிசுத்த ஆவியானவர் "கிறிஸ்துவினிடத்தில் இருந்து எடுத்து, சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார்"என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அர்த்தம், சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தப்போகும் வார்த்தைகள் கிறிஸ்துவின் வார்த்தைகளே அல்லாமல் பரிசுத்த ஆவியானவரின சொந்த வார்த்தைகள் இல்லை. 

இயேசுவானவர் எதை வெளிப்படுத்த வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவருக்கு சொல்லுகிறாரோ அதை மாத்திரமே பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுக்கு வெளிப்படுத்துவார். அதானால் தான் வசனம் "13" சொல்லுகிறது பரிசுத்த ஆவியானவர் “தம்முடைய சுயமாய்ப் பேசமாட்டார்” என்று

ஆக சீஷர்களின் வார்த்தை அவர்களுடைய சொந்த வார்த்தையாக இருந்தால் நாம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை, ஆனால் சீஷர்கள் எழுதின எல்லா வார்த்தைகளும் அவர்களுடையது அல்ல கிறிஸ்துவினுடையது, கிறிஸ்துவின் வசனங்கள் தேவனுடையது. 

வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் கூட (1:1) ல் இதை நாம் பார்க்க முடியும். 

நாம் இயேசுகிறிஸ்து பேசினவைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அதே முக்கியத்துவத்தை சீஷர்களின் வார்த்தைக்கு அதாவது நிரூபங்களுக்கும் கொடுக்க வேண்டும்.

“ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம் அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது. (1தெச 2:13)

இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சீஷர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு பேசவில்லை என்று மறைமுகமாக போதிக்கிறார்கள், ஒன்றை நாம் ஞாபகத்தில் வைக்கவேண்டும், சீஷர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்படவில்லை என்றால் அவர்கள் ஏழுதிக்கொடுத்த சுவிசேஷத்தை மட்டும் எப்படி தேவனுடைய வார்த்தை என்று நம்புவது. 

இயேசுகிறிஸ்து எந்த வேதாகமத்தையும் எழுதவில்லை, சீஷர்களே எல்லாவற்றையும் எழுதியுள்ளனர். 

இயேசுவின் போதனைகள் நிறைந்த, சுவிசேஷத்தை எழுதினதும் அவர்களே, நிரூபங்களை எழுதினதும் அவர்களே, இவர்களை எழுதும் படி ஏவினது பரிசுத்த ஆவியானவரே! இவையெல்லாமே தேவனுடைய வார்த்தைகளே.............. 

கிறிஸ்திவின் மலைபிரசங்கத்திற்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை பவுலின் வார்த்தைகளுக்கும் கொடுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் கிறிஸ்துவின் வார்த்தைகளே......
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது? Empty Re: தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது?

Wed Dec 16, 2015 12:12 am
நிரூபங்களை கிறிஸ்து எழுதச்சொன்னாரா?

இயேசு கிறிஸ்திவின் வார்த்தைகளைத்தான் சீஷர்கள் எழுதியிருக்க வேண்டும், ஆனால் அவர்களாகவே தங்கள் இஷ்டத்திற்கு அதிகமான வார்த்தைகளை எழுதிக்கொண்டார்கள் என்று சிலர் சொல்லுவதுண்டு, ஆனால் இது சரியா என்பதை கிறிஸ்திவின் வார்த்தையை வைத்தே ஒரு முடிவுக்கு வருவோம்.

கிறிஸ்து சீஷர்களிடம் சொன்னது.....

"12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

13. சத்தியஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்"
(யோவா 16:12-13) 

அதாவது கிறிஸ்து 12 ஆம் வசனத்தில், இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும், ஆனால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை பரிசுத்த ஆவியானவர் ஏற்ற சமயத்தில் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என்றார். 

இதிலிருந்து ஒன்றை நாம் அறியலாம், 

கிறிஸ்து எல்லா வெளிப்பாட்டையும் சீஷர்களுக்கு வெளிப்படுத்தவில்லை, அதே சமயம் இன்னும் வெளிப்பாடுகள் அதிகம் உண்டு என்பதையும் தெளிவுபட அறிவித்துவிட்டார். 

ஏன் எல்லா வெளிபாட்டையும் கிறிஸ்துவே கொடுக்கவில்லை, அவரே சொல்லுகிறார், அந்த சமயத்தில், அவர்கள் இன்னும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தில் இல்லை என்று.

ஆக இயேசு கிறிஸ்து சொல்லாத வார்த்தைகளை பின்னாளில் பரிசுத்த ஆவியானவர் சீஷர்கள் மூலமாக சபைகளுக்கு வெளிப்படுத்திக்காண்பித்துள்ளார். சீஷர்கள் எழுதிக்கொடுத்த எல்லா வார்த்தைகளும் கிறிஸ்துவின் அனுமதியின் பேரிலே நடந்துள்ளது.

வசனம் 13ல் “வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” என்றும் இயேசு சொன்னார், அதாவது சீஷர்கள் இனி வரப்போகிற சம்பவங்களை, முக்கியமாய், இயேசு தெளிவுபட அறிவிக்காத பல திர்க்கதரிசனங்களைகூட பரிசுத்த ஆவியின் ஏவுதலால் வெளிப்படுத்தினார் என்பதை நாம் அறியவேண்டும்….

ஆக புதியஏற்பாட்டின் பக்கங்களை சீர்தூக்கி பார்க்கும் போது இந்த உண்மை தெளிவுபடும்….

சீஷர்கள் கிறிஸ்து சொல்லாத வேறு பல வெளிப்பாடுகளை நிரூபங்களில் எழுதிக்கொடுத்திருப்பதால் அதை நிராகரிக்கக் கூடாது, 

அது பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்பட்டது என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். அதற்கு கிறிஸ்துவின் வசனங்களே சாட்சி. (யோவா 16:12-14)

இதிலும் ஒரு சிலர், கிறிஸ்து பேசின வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சீஷர்கள் எழுதிக்கொடுத்த வார்த்தைக்கு குறைந்த முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. இயேசுவே இப்படிச் சொல்லிவிட்டார், அது சீஷர்கள் சொன்னது தானே என்றெல்லா கூறுவர்…..அதை நாம் ஏற்க வேண்டியது இல்லை என்றும் போதிப்பார்கள்.

இயேசு சுவிசேஷங்களில் சொன்ன வார்த்தைகளை அதிமுக்கியமாகவும், நிரூபங்களில் சொல்லப்பட்டதை குறைத்தும் மதிப்பிடுவர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது? Empty Re: தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது?

Wed Dec 16, 2015 12:13 am
இந்த புதியஏற்பாடு யோவன்ஸ்நானகனின் பிரசங்கத்தோடு ஆரம்பமாகிறது. அவருடைய பிரசங்கத்தின் முக்கிய சாரம்சம் ஏசாயா புஸ்தகத்தில் முன்கூட்டியே எழுதப்பட்டுள்ளது. 

அதாவது 

"3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4. பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும் என்றும்,
5. கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று". (ஏசா 40:3-5)

அதாவது கிறிஸ்துவை இஸ்ரவேல் தேசத்திற்கு அறிமுகப் படுத்த தேவன் எலியாவின் ஆவியும் பெலனும் கொண்ட (லூக்கா 1:17) யோவானை தெரிந்து கொண்டார். 

அவரை ஊழியத்திற்கு ஞானஸ்நானம் கொடுத்து அனுப்பி வைத்ததும் இந்த யோவான் தான். அந்த சமயத்தில் தான் வானத்திலிருந்து வந்த சத்தம் இயேசு, தேவகுமாரன் தான் என்பதை நிரூபித்தது. அதற்கு பின் இயேசுவின் ஊழியம் ஆரம்பிக்கிறதை பார்க்கமுடியும். 

அந்த ஊழியத்தில் இயேசு 12 சீஷர்களை தெரிந்தெடுத்து தன்னுடன் வைத்திருந்தார் அது ஏன் தெரியுமா?

எப்படி பழையஏற்பாட்டில் தேவன் 12 கோத்திரங்கள் மூலமாக உலகிற்கு தன்னை வெளிப்படுத்திக்காண்பித்தாரோ, அதேபோல இயேசுவும் 12 சீஷர்கள் மூலமாக தன்னை முதலாவது, இஸ்ரவேல் தேசத்திற்கும், பின்பு உலகத்திற்கும் வெளிப்படுத்திக் காண்பிக்க முடிவு செய்தார்.

இஸ்ரவேலர்களே மேசியாவுக்குக் காத்திருந்தவர்கள் உலகமக்கள் இல்லை, இந்த இஸ்ரவேலர் மூலமாகத்தான் மேசியா உலகத்திற்கு அறிமுகமாக வேண்டும். அதானால் தான் சீஷர்களுக்கு, முதலாவது இஸ்ரவேல் தேசத்திற்கு சென்று பிரசங்கியுங்கள் வேறு எந்த இடத்திற்கும் செல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். 

மேலும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நடந்த எல்லா சம்பவங்களையும் கண்ணாரக் கண்ட சாட்சியாகவும் தேவன் இவர்களை ஏற்படுத்தியிருந்தார். (அப் 1:21,22)

அது மாத்திரமல்ல தான் அனுப்பும் நபர்களுக்குத்தான் தன்னைக் குறித்து பிரசங்கிக்க எல்லா அதிகாரமும் உண்டு என்பதையும் இயேசு தெளிவுபட அறிவித்தார். 

"சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான் உங்களை அசட்டை பண்ணுகிறவன் என்னை அசட்டை பண்ணுகிறான் என்னை அசட்டை பண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டை பண்ணுகிறான் என்றார்." (லூக் 10:16) 

உலகம் முழுவதும் சென்று தன்னைக் குறித்து பிரசங்கம் செய்யச் சொல்லி சீஷர்களை அனுப்பினது மாத்திரமல்ல இவர்களது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவன் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அதிகாரத்தை அவர்கள் கையில் தேவன் கொடுத்தார். 

(யாரெல்லாம் இயேசுவால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை எப்படி அறிவது, யார்வேண்டுமானாலும் சென்று நான் இயேசுவால் அனுப்பப்பட்டவன் என்று சொன்னால் நம்பமுடியுமா? இதற்கான ஆதாரத்தை பின்வரும் பதிவுகளில் தெளிவாகக் காண்போம்)

இயேசு போதித்த மற்றும் அவருடை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சீஷர்களால் எப்படி மறந்து விடாமல் போதிக்க முடியும், எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும் மறந்துவிட வாய்ப்புண்டு, ஆகவே தேவன் உதவி செய்யாமல் இவர்களால் ஒன்றையும் செய்ய முடியாது.

ஆக கிறிஸ்து சீஷர்களிடம் இதற்கான விளக்கத்தை கொடுத்தார்... அதாவது, 

"என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்". என்றார் (யோவா 14:26) 

இந்த வசனம் நமக்கு ஒரு உறுதியை தருகிறது. கிறிஸ்துவோடு அவர்கள் சஞ்சரித்த காலத்தில் நடந்த எல்லா சம்பவங்களையும் பிரசங்கிக்கவும், எழுதவும் இப்போது பரிசுத்த ஆவியானவர் உதவப்போகிறார் என்பதே அந்த உறுதி. 

ஆக சிஷர்கள் கிறிஸ்துவைப் பற்றி எழுதின எல்லா வார்த்தைகளும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குக் கீழ் எழுதப்பட்டது எனபது தெளிவாகிறது. 

இங்கு தான் இன்னொரு கேள்வி நமக்கு எழும்புகிறது, கிறிஸ்து போதித்த வசனங்களைக் காட்டிலும், மேலும் அதிகமான வெளிப்பாடுகள் சீஷர்களால் நமக்கு எழுதித்தரப்பட்டிருக்கிறதே!, இதை எப்படி நம்புவது? 

கிறிஸ்து சொன்னது "நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்" என்பதே,

கிறிஸ்து சொல்லாத பல வசனங்கள் சீஷர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு கிறிஸ்து ஏதாவது விளக்கம் கொடுத்திருக்கிறாரா? அவர் தானே இவர்களை அனுப்பினது... அவர்தானே இதற்கும் விளக்கம் தரவேண்டும்...... 

இதற்கு வேதத்தில் ஆதாரம் உண்டா எனக் கேட்பவர்கள் அடுத்த பதிவுக்குக் காத்திருக்கவும். 

அதாவது இயேசு. "தான் கற்பிக்காத காரியத்தை கூட பிரசங்கிக்க, எழுதச்சொல்லி கட்டளையிட்டாரா?"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது? Empty Re: தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது?

Wed Dec 16, 2015 12:13 am
புதியஏற்பாட்டைக் குறித்துக் கற்றுக்கொள்ள சில அடிப்படை காரியங்களை கற்றுக்கொள்ள வேண்டும். 

ஒரு சிலர் புதியஏற்பாடு தேவையில்லை என்பர், ஆனால் உண்மையில் பழையஏற்பாடு முற்றுப்பெறாமல் உள்ளது. ,இதற்கு பழையஏற்பாட்டின் கடைசி புத்தகமே சாட்சி. 

இந்த புதியஏற்பாடு என்பது ஏதோ திடீரென புதிதாக உதித்த ஒன்று அல்ல. இது பழையஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசனபுஸ்தகத்தின் (மல்கியா) தொடர்ச்சி..... என்பதை பழையஏற்பாடே ஒத்துக்கொள்கிறது.... 

வேதாகமத்தை திறக்கும் போது அதில் புதியஏற்பாடு, பழையஏற்பாடு என இரு பிரிவுகள் இருப்பதைப் பார்க்க முடியும். ஆனால் இந்த பிரிவுகள், அதிகாரங்கள், வசன எண்கள், எல்லாம் புரிந்து கொள்வதற்காக, படிப்பதற்கு எளிதாக இருக்கும் படியாக பின்னாளில் கொடுக்கப்பட்டது. இதில் தவறேதும் இல்லை.

உண்மையில் தேவன் இப்படி பிரித்து எந்த வெளிப்பாட்டையும் தரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பழையஏற்பாட்டின் தொடர்ச்சியே, புதியஏற்பாடு. அதாவது பழையஏற்பாட்டில் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்த தேவன், மல்கியா தீர்க்கதரிசியோடு தன் வார்த்தையை நிறுத்திக்கொண்டார். 

ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்களின் பாவத்தால், கடைசியாக எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட்துமன்றி யூத நாடும் பாபிலோனுக்கு சிறைபிடித்துச்செல்லப்பட்டது(கி.மு 586). 

பின்னர் 70 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேவன் அவர்களை விடுதலை செய்து இடிந்த ஆலயத்தைக் கட்டிமுடிக்க அனுக்கிரம் செய்தார். இதற்காக செருபாபேல். எஸ்ரா, நெகேமியா போன்ற தேவ தாசர்களை எழுப்பினார். 

கொஞ்சகாலம் சரியாக வாழ்ந்த ஜனங்கள் கூடியசீக்கிரத்திலே மீண்டும் பாவத்தில் விழ தேவன் கடைசியாக மல்கியா திர்க்கதரிசியை கொண்டு ஜனங்களை எச்சரித்தார், மல்கியா முழுவதும் தேவாலய சம்பந்தமான வார்த்தைகள் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது (கி.மு432-420). 

எச்சரித்த்தோடு விடாமல், எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்தில் அனுப்புவேன் என்று சொல்லி அதோடு தன்னுடைய வெளிப்பாட்டை நிறுத்திக்கொண்டார் (மல் 3:1). 

மல்கியா முழுவதையும் வாசிக்கவும், தேவன் கொடுக்கும் கடைசி எச்சரிப்பை சரியாக உணரமுடியும்.
எல்லா எச்சரிப்புவசங்களையும் சொன்ன பின் கடைசியாக தேவன் சொன்னது...

"5. இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
6. நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும் பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்." (மல்கியா 4:5.6) இதோடு பழையஏற்பாடு முடிகிறது.

ஆக பழையஏற்பாடு எப்படி முடிகிறது என்றால் “எலியா தீர்கதரிசி வருவார், அவர் பிதாக்களுடைய இருதயத்தை பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடை இருதயத்தை அவரகள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்” என்று முடிகிறது. 

ஆக இப்போது இஸ்ரவேல் ஜனங்கள் எலியா தீர்க்கதரிசிக்காக காத்துக்கொண்டிருந்தனர். அதனால் தான் மக்கள், இயேசுவிடம் “எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.” (மாற் 9:11)

ஒரு விஷயம் நமக்குத் தெரியும் இந்த ஏலியாதான் யோவான் ஸ்நானகன் என்று, அதை கிறிஸ்துவே மக்களிடம் சொன்னார்.

ஆக மல்கியாவோடு நின்று போன தேவனுடைய வெளிப்பாடு யோவான்ஸ்நானகன் மூலமாய் மீண்டும் வெளிப்பட ஆரம்பித்தது.

அதனால் தான் மல்கியா காலத்திலிருந்து யோவான்ஸ்நானகன் காலம் வரைக்கும்(400வருடங்கள்) தேவனுடைய வெளிப்பாடு இல்லாத காலம் (இருண்ட காலம்) என்று நாம் சொல்லுகிறோம். 

இந்த இடைப்பட்ட காலத்தில் தேவன் யாருடனும் இடைபடவில்லை, உதவிசெய்யவில்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது, அதேசமயம் தேவனின் அதிகாரப்பூர்வமான வெளிப்பாடு(வேதம்) நிறுத்தப்பட்டிருந்தது, அது யோவான்ஸ்நானகனோடு மீண்டும் ஆரம்பமாகிறது....... 

இந்த இருண்டகாலப் பகுதியில் அநேக புஸ்தகங்கள் எழுதப்பட்டன, உதாரணத்திற்கு மக்கபேயர், யூதித்து போன்ற பல புஸ்தகங்கள், வரலாற்றில் நடந்த சம்பவங்களை தன்னகத்தே கொண்டிருந்தன, 

இந்த புஸ்தகங்கள் மூலம் பல வரலாற்று சம்பவங்களை அறிந்து கொள்ளலாம், ஆனாலும் இவை வேதம் கிடையாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

ஏனெனில் மல்கியாவோடு தேவன் வெளிப்பாட்டை நிறுத்தி, பின்னர் யோவான்ஸ்நானகன் மூலமாகத்தான் நான் பேசுவேன் என்று திட்டமும் தெளிவுமாக விளக்கியிருக்கிறார். (ரோமன் கத்தோலிக்க சபையினர் பயன்படுத்தும் இணைத்திருமறையை நாம் தேவவார்த்தையாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்)

இந்த யோவான்ஸ்நானகனின் வார்த்தையோடு மீண்டும் தேவன் தன்னுடைய வெளிப்பாட்டை தொடர ஆரம்பிக்கிறார்....

யோவான்ஸ்நானகனின் வார்த்தைகளோடு பு.ஏற் தொடர்ந்து பயணிக்கிறது. இந்த சம்பவங்களும், இதற்குப் பின் நடந்த சம்பவங்கள் தான் புதியஏற்பாடு என்ற பெயரில் நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது, ... இது அதிகாரப்பூர்வமாக தேவனுடையதுதான் என்பதை வரக்கூடிய பதிவுகளில் காண்போம்.......

புதியஏற்பாடு என்பது பழையஏற்பாட்டின் தொடர்ச்சியே என்பது இந்தப் பதிவில் நிரூபிக்கப்பட்டாயிற்று.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது? Empty Re: தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது?

Wed Dec 16, 2015 12:14 am
புதிய ஏற்பாடு உண்மையிலேயே தேவனுடைய வெளிப்பாடா என்பதைக் குறித்து இந்த பதிவில் கற்றுக்கொள்ளலாம்...

வேதத்திற்கு விரோதமானவர்கள் பொதுவாக புதிய ஏற்பாட்டைக் குறித்து கேள்வி எழுப்புவது என்ன வெனில்,

1) தேவன் புதிய ஏற்பாட்டை எழுதச் சொன்னார் என்பதற்கு ஆதாரம் கொடுங்கள்?

2) புதிய ஏற்பாட்டை எழுதினவர்களை, தேவன் தான் பயன்படுத்தினார் என்பதற்கு ஆதாரம் என்ன?

3) கிறிஸ்து சொல்லாத பல கருத்துக்களை அவருடை சீஷர்கள் கூறியுள்ளார்கள் இதை எப்படி நம்புவது..?

4) இவை எல்லாவற்றிற்கும் மேல் இது தேவனுடைய வார்த்தைதான் என்பதை புதியஏற்பாட்டை கொண்டு நிரூபிக்க முடியுமா?

5) இவர்கள் எழுதின ஏற்பாட்டை சரிபார்க்க கிறிஸ்துவும் அப்போது உயிருடன் இல்லையே? எப்படி நம்புவது?

ஆக புதிய ஏற்பாடு என்பது மனிதர்களின் கற்பனை, அவ்ர்கள் இஷ்டத்திற்கு எழுதிக்கொண்டார்கள் என்பதே இவர்களின் குற்றச்சாட்டு.

இவர்களின் கூற்று உண்மையா?

இப்படிப்பட்ட குற்றச்சாட்டிற்கு தேவன் பதில் வைத்திருக்கிறாரா?

வரக்கூடிய பதிவுகளில் இதைக் கற்றுக் கொள்ளப்போகிறோம், நம் வேதத்தின் தனித்தன்மையை உணர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்துவோம், ..........
Sponsored content

தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது? Empty Re: தேவனுடைய வார்த்தைதான் என்பதை எப்படி நம்புவது?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum