சென்னையை காக்கும் மீனவர்கள்..!!
Mon Dec 07, 2015 7:48 pm
மீனவர்களைப் பற்றியதான நமது பார்வை என்ன, அடாவடி மனிதர்கள் , குடிகாரர்கள், வீண் வம்பு இழுப்பவர்கள், எப்போதும் தகராறு செய்து கொண்டிருப்பவர்கள் இதுவே இதுநாள் வரை தமிழ் சினிமா வரையறுத்திருக்கும் பிம்பம் .
அவர்கள் மீது வீசும் வாசனைக்கு அருவறுப்படைந்து பேருந்தில் அருகே சீட்டில் கூட அமர மாட்டோம் இல்லையா
நம்மைப்பொறுத்தவரை மீனவர்கள் மாயம் மீனவர்கள் சுட்டுக்கொலை என்று படிக்கையில் கூட அதை ஒரு செய்தியாகவே எந்திர மனப்பான்மையோடே கடந்து
சென்றவர்கள் நாம்
அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்ற போது சாதாரணமாக கூட நாம் உதவியதில்லை இத்தனைக்கும் நம்மை விட அடிக்கடி இது போன்ற நிகழ்வுகளால் பாதிப்படைகின்றவர்கள் அவர்கள்
ஆனால் இந்த சென்னை வெள்ளத்தில் படகுகளில் சீறிப் பாய்ந்து இண்டு இடுக்கு விடாமல் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாராமல் ஜாதி வித்தியாசம் இன்றி அவர்களால் காப்பாற்ற பட்டோர் எத்தனை எத்தனை
சென்னையின் பூர்வகுடிகள் அவர்கள் .நகரத்திற்குள்ளும் நம் பகட்டு வாழ்க்கைக்குள்ளும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் ,என்னாயிற்று இன்று
உயிர் மதிப்பு நம்மை விட அவர்களுக்கு நன்றாகத் தெரியும் தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் அல்லவா!
இந்த இக்கட்டான தருணத்தில் அவர்கள் புரிந்த உதவி ஞாலத்தினும் பெரிது. காலத்தினும் மறந்திட இயலாத பேரு .போற்றுவோம் மீனவக்குடிகளை
நாம் அனைவருமே அவர்களுக்கு நன்றி கூறுவோம்

Re: சென்னையை காக்கும் மீனவர்கள்..!!
Mon Dec 07, 2015 8:33 pm
உயிரை கையில் பிடித்துக் கொண்டு, இரவு முழுக்க அபயக்குரல் எழுப்பிய, கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளை, எந்த எதிர்பார்ப்பும் இன்றி, படகுகளுடன் களம் இறங்கி, மீனவர்கள் மீட்டு உள்ளனர். துணிச்சலாக உள்ளே சென்றது; குழந்தைகள், முதியோர் என பலரையும் மீட்டது; வர மறுத்தவர்களுக்கு கவுன்சிலிங் தந்து அழைத்து வந்தது; கர்ப்பிணிகளை காப்பாற்றியது என, இவர்கள் செய்த பணியை, எந்த அரசு நிவாரணமும் ஈடு செய்ய முடியாது.
டிச., 2 இரவு, 5,000 வீடுகள் உள்ள கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், இரண்டாவது தளம் வரை, மழைநீர் புகுந்ததால், உயிரை காப்பாற்றி கொள்வதற்காக அபயக்குரல் எழுப்பி சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அருகே இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும் நிலைமை மோசமாக மாறியது. இருட்டில், எதிர்பாராமல் மழைநீர் வந்ததால், உயிரை காப்பாற்றிக் கொள்ள அனைவரும் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவம் வருவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பொழுது விடிந்தும் யாரும் வரவில்லை. துரிதமாக யோசித்து முதலில் களத்தில் இறங்கியவர்கள், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த, 22 மீனவர்கள். கூடவே, பெசன்ட் நகர் கடற்கரை, திருவொற்றியூர், சுங்கசாவடி மீனவர்கள் என மொத்தம், 50 பேர் கொண்ட குழு, நேற்று முன்தினம் காலை, 6;00 மணிக்கு, எட்டு படகுகளுடன் பணியில் இறங்கினர்.
பலரும் பசியுடன்...:
மக்களை மீட்ட அனுபவம் குறித்து, மீனவர்கள் கூறியதாவது: காலை, 8:00 மணிக்கு பைபர் படகுகளுடன் உள்ளே சென்றோம். இன்ஜினை பிடித்துக் கொள்ள ஒருவர், துணைக்கு, மூவர் என, ஒரு படகுக்கு, நான்கு பேர் என சென்றோம். அங்கு பலரும் பசியுடன் வாடிக் கிடந்தனர். கட்டடம் முழுவதும் வெள்ளத்தில் சூழ்ந்த நிலையிலும், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்ததை பார்க்க முடிந்தது. பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் இவர்களை முதலில் மீட்டு வர வேண்டும் என யோசித்து, முதற்கட்டமாக அவர்களை மீட்டோம். படகுகள் போக முடியாத இடத்தில், நீச்சல் அடித்து சென்று, கயிறு கட்டி சிலரை மீட்டோம். ஒரு முறை உள்ளே சென்று விட்டு, வெளியேற, 20 முதல், 30 நிமிடங்கள் ஆகிவிட்டது.மொட்டை மாடியில் தவித்தவர்களை மீட்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
பைபர் படகு என்பதால், ஒரு வீட்டில் இடிபட்டதில், ஒரு படகில் ஓட்டை விழுந்தது. மற்றொரு படகில், மீட்டவர்களை மாற்றி விட்டு, ஓட்டை விழுந்த படகை கயிறு கட்டி வெளியேறி வந்தோம். சில பெண்கள், முதியோர் படகில் வரவே பயந்து மறுத்தனர்; சிலர் உடைமைகளை விட்டு வருவது எப்படி என தவித்தனர். 'அடுத்தடுத்து ஏரிகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படும்; முதலில் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்' என, அவர்கள் மனதை மாற்றி அழைத்து வர வேண்டியிருந்தது.
மதியம், 1:00 மணிக்கு மேல், எங்களுக்கு பக்கபலமாக மீட்பு பணியில் இறங்கிய, மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், அனைத்து போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட, மீட்பு பணி அவசியம் என்பதை உணர்ந்ததால் என்னவோ, மீட்பதில் எங்களை விட அவர் வேகமாக இருந்தார்.
பசிக்கவே இல்லை:
உண்மையாக சொல்கிறோம். மீட்பு பணிக்காக சத்தியமாக, ஒரு பைசா கூட வாங்கவில்லை. மாலை, 5:00 மணி வரை மீட்பு பணியை தொடர்ந்தோம். ஒவ்வொருத்தரும் தவித்ததை பார்த்த போது, அவர்களை கொண்டு வந்து பத்திரமாக சேர்த்த எங்களுக்கு பசிக்கவே இல்லை. தாகத்திற்கு தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டே இருந்தோம். எங்களுடன் பயணித்த துணை கமிஷனரும் எதுவும் சாப்பிடவில்லை. நாங்கள், 1,800 பேரை மீட்டோம். இருப்பினும், மேலும், சில ஆயிரம் பேர் அங்கு தவித்து வருகின்றனர், என்றனர்.
சென்னையில் 10 நாட்களுக்கும் மேலாக தங்கள் வீடு மூழ்கினாலும் பிள்ளைகளை கூட பார்க்காமல் சொந்த படகுகள் மூலம் மீட்பு பணியில் பட்டுக்கொண்டிருக்கும் மீனவ சமுதய மக்கள் பணியை போற்றி வணங்குகிறது pnp tamilnadu
Reference
http://www.dinamalar.com/news_detail.asp?id=1402782

Permissions in this forum:
You cannot reply to topics in this forum