வரும்முன் காக்கும் வழி
Thu Mar 12, 2015 12:49 pm
அறிகுறிகளை அறிந்துகொண்டால், வரும்முன் காக்கும் வழிகளைக் கடைப் பிடிக்கலாம்.
நோயின் அறிகுறிகள்:
கண் இமையில் வீக்கம்.
உயர் ரத்த அழுத்தம்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் / அடர்நிறத்தில் சிறுநீர், அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டிய உணர்வு.
சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது அசௌகரியம்.
சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
காலில் வீக்கம்.
செயல் இழப்பின் அறிகுறிகள்:
[size]பசியின்மை, குமட்டல், வாந்தி, சோர்வு,
ரத்தசோகை, மூச்சுவிடுவதில் சிரமம், மயக்கம், கோமாநிலை, சில சமயம் எந்த ஓர் அறிகுறி இன்றியும் ஏற்படலாம்.
சிறுநீரக நோய்!பாதிப்பைத் தவிர்க்க:
நாள் ஒன்றுக்கு, எட்டு டம்ளர் நீர் அருந்துவது.
தனிநபர் சுத்தம்.
சுகாதாரம் காப்பது.
பெண்கள் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது.
சரிவிகித சத்தான உணவு.
அதிக அளவில் உப்பு மற்றும் இறைச்சி உணவைத் தவிர்த்தல்.
சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள் கால்சியம் அதிக அளவில் உள்ள உணவைத் தவிர்த்தல்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாமல் கவனத்துடன் இருப்பது.
மீறி வந்துவிட்டாலும் அதைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
சிறுநீரகக் கல் பிரச்னையை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைபெற வேண்டும்.
ஆன்டிபயாடிக், வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வதில் மிகுந்த கவனம் தேவை.
சிறுநீரகப் பாதிப்பை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால், தொடர் சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனையின் மூலம் குணப்படுத்திவிடலாம்.[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum