தொழில் முனைவோர்களுக்கு இருக்க வேண்டிய பத்து மைண்ட்செட்!
Thu Nov 26, 2015 6:05 pm
தில்லைராஜன்-பேராசிரியர், ஐஐடி சென்னை
சோதனை முயற்சிக்கு பயப்படக் கூடாது!
தொழிலில் சில நேரங்களில் சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். அதுபோன்ற நேரங்களில் சோதனை முயற்சிகளை செய்யத் தயங்க கூடாது. இதனைச் செய்தால் நஷ்டம் ஏற்படுமா, ஏற்படாதா என்கிற கேள்விகளுக்கு இடம் தராமல் சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டும். தயங்காமல் சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது தொழில்முனைவோருக்கு முடிவெடுக்கும் திறனையும், தொழில் மீது அவருக்குத் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.
தொடங்குவதில் தாமதம் வேண்டாம்!
ஒரு தொழிலை தொடங்க நினைத்தாலோ அல்லது விரிவாக்க நினைத்தாலோ தொழில்முனைவோரது மனதுக்குச் சரியென்று தோன்றினால் உடனே அதனைச் செய்துவிட வேண்டும். தாமதப்படுத்தி இதனை இன்னமும் கொஞ்ச நாள் கழித்துச் செய்யலாமே அல்லது இன்னும் இதற்கான நேரம் வரவில்லை என்று சொல்லி கொண்டிருக்காமல், சரியென்று நினைத்த செயலை உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும். அதனைத் துவங்குவதில் தாமதம் காட்டினால், நிச்சயம் அதன் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.
அதிகமான மதிப்பீடு தேவையில்லை!
வங்கியில் தொழில் கடன் பெறுவதற்காக தனது நிறுவனத்தின் மதிப்பை அதிகமாகக் கூறுவதும், தன் நிறுவனத்தின் மதிப்பீட்டை மிகைப்படுத்திக் கூறுவதும் தேவையில்லை. ஏனெனில், உங்கள் அதிக மதிப்பீட்டுக்கு கடன் கிடைத்தால், உங்களால் அதனைச் சரியான முறையில் திருப்பித் தரமுடியுமா என்பது கேள்விக்குறியாகிவிடும். தன் தொழில் பற்றி உள்ளதை உள்ளபடி சொல்லும் தொழில்முனைவோரே என்றும் நிலைத்து நிற்பார்.
போட்டிகளை அணுகுங்கள்!
தொழிலில் போட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. உங்களுக்குப் போட்டியாக ஒரு சிறிய அல்லது பெரிய நிறுவனம் வந்தால், அதனைக் கண்டு ஒதுங்காதீர்கள். அவற்றால் உங்கள் தொழிலில் தொய்வு ஏற்படுமோ என்ற பயத்தைப் போக்கி அவற்றை வித்தியாசமான முறையில் அணுகும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங் கள். போட்டி நிறுவனம் வளரும்போது வணிக வாய்ப்புகளும் அதிகரிக்கும். அப்போது அந்த வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்ற நிலையைத் தெரிந்து, அதற்கு ஏற்றவாறு உங்கள் உத்திகளை வகுத்துக்கொள்ளுங்கள், அது உங்களைப் போட்டியில் முன்னிருத்தும்.
ரிஸ்க் எடுங்கள்!
தொழிலில் முடிவெடுக் கும்போது நீங்கள் ஒரு சில முடிவுகளுக்குப் புள்ளி விவரங்களையும், மற்றவர் களது கருத்தையும் கேட்க நேரிடும். அப்போது வெவ்வேறு தகவல்கள் உங்களுக்குப் பதிலாகக் கிடைக்கும். அதில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை உருவாகலாம். அதுபோன்ற நேரங்களில் நீங்கள் எடுத்த முடிவை கைவிடக்கூட நினைப்பீர் கள். ஆனால், உங்களுக் குள் ஒரு குழப்பம் இருந்தே வரும். அதுபோன்ற நேரங் களில் உங்களால் சமாளிக்க முடிந்த ரிஸ்க்கை எடுங்கள். அதனைப் பொறுத்து உங்கள் தொழிலை அமையுங்கள். ஏனெனில், அனைத்து நேரங்களிலும் புள்ளிவிவரங்கள் சரியானதாக அமைவதில்லை. அதனால் தொழில்முனை வோர்கள் ரிஸ்க் எடுக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்வது அவசியம்.
ஃபர்ஸ்ட் மூவர் வாய்ப்பைப் பயன்படுத்த தயங்காதீர்!
ஒரு பொருள் அல்லது சேவையை ஃபர்ஸ்ட் மூவர் எனும், முதலில் அறிமுகம் செய்பவராக நீங்கள் இருந்தால், அதனை உடனடியாகத் துவங்க தயங்காதீர்கள். யாராவது ஒருவர் இதனைத் தொடங்கட்டும். அதில் அவருக்கு உண்டாகும் அனுபவத்தைப் பார்த்து அதன்பின் நான் தொடங் குகிறேன் என்று நினைக்காதீர்கள். எப்போதும் முதலில் ஒரு விஷயத்தை ஆரம்பிப்பவர்தான் நீண்ட நாட்கள் வாடிக்கையாளர்கள் மனதில் இடம் பெறுவார். நீங்கள் முதலில் அறிமுகப்படுத்தும் பொருளுக்குப் பின்னர் போட்டி நிறுவனங்கள் வந்தாலும் அது உங்கள் பொருளை போன்ற பொருள் என்றே மக்கள் நினைக்கக்கூடும் என்பதால், கூடுதல் பிராண்டிங் கிடைக்கும். அதனால் ஃபர்ஸ்ட் மூவராக இருந்தால் அந்த வாய்ப்பைத் தள்ளிப்போடாதீர்கள்.
உங்களை நம்புங்கள்!
தொழில்முனைவோருக்கு அவசியம் இருக்க வேண்டியது, அவர் அவரை நம்ப வேண்டும். என்னதான் உத்திகள், அதனைச் செயல்படுத்தும் குழு, சிறப்பான தயாரிப்பு, விற்பனை ஆகியவை இருந்தாலும் ஒரு தொழில்முனைவோர் அவரால் இந்தத் தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற மனநிலையை பெற்றிருத்தல் அவசியம்.
அப்படி இருக்கும்போது அவரது செயல்முறையில் எந்த இடத்தில் தொய்வு ஏற்பட்டாலும் அவர் முடங்கிவிடாமல், அந்தத் தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர்மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கை உதவும்.
ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்!
உங்கள் தொழிலில் ஓர் இலக்கை நிர்ணயித்துச் செயல்படுகிறீர்கள் என்றால், குறுகிய கால மதிப்பீட்டில் அதன் ரிசல்ட் குறைவாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அடைய நினைத்தது நீண்ட நாள் இலக்கு.
அதனை அடைய இந்தக் குறுகிய கால இலக்கில் ஏற்பட்ட சரிவை மீதமுள்ள நாட்களில் எப்படி சரி செய்வது என்பதை யோசிக்க வேண்டும். இந்த மாதம் நாம் இலக்கை அடையவில்லையே என்று சோர்ந்துவிடக் கூடாது. குறுகிய காலச் செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து அடுத்த இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்.
தொழிலில் ஈடுபாடு அவசியம்!
உங்கள் தொழிலை வேலையாகப் பார்க்கும் மனநிலையில் நீங்கள் இருந்தால், அந்தத் தொழில் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் லாபத்தைத் தருவதாக இருக்காது. நீங்கள் துவங்கும் அல்லது நீங்கள் அறிமுகம் செய்யும் தொழில் உங்களின் கனவுத் தொழிலாக இருந்தால், அது எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தைத் தரும். உங்கள் ஈடுபாடு அதுதான் எனில், அதில் நீங்கள் சாதாரணமாகச் செயல்படுவதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செயல்படுவீர்கள். அந்த மனநிலை உங்கள் தொழிலையும், அதனால் உங்களுக்கு அதிக லாபத்தையும் தருவதாக இருக்கும்.
எமோஷனலாக இருக்காதீர்கள்!
நீங்கள் செய்யும் தொழிலில் சில விஷயங்களில் எமோஷனாலாக இருப்பதைத் தவிருங்கள். ஒருவேளை நீங்கள் செய்யும் தொழிலில் ஒரு புதிய தொழில்நுட்ப மாறுதல் வந்திருக்கலாம். ஆனால், அதனைத் தவிர்த்து எனக்கு இதுதான் சரியாகத் தோன்றுகிறது. மேலும், இதனை நான் 20 வருடங் களாகப் பயன்படுத்தி வருகிறேன். இந்த முறையி லிருந்து மாறமாட்டேன் என்று இருக்காதீர்கள். அதனால் உங்களைவிட மற்றவர்கள் முன்னேற வாய்ப்பை ஏற்படுத்திவிடும். அதேபோல், எனக்கு வயதாகிவிட்டது, இளம் போட்டியாளர்களை எப்படிச் சமாளிப்பது என்றோ அல்லது நான் இளம் நபர் இதில் அனுபவம் உள்ளவரை எப்படி எதிர்கொள்வது என்ற எமோஷனலான விஷயங்களை உங்கள் தொழிலில் அனுமதிக்காதீர்கள்.''

Permissions in this forum:
You cannot reply to topics in this forum