அம்மாக்கள் அலர்ட்டா இருக்க வேண்டிய விஷயங்கள்
Fri Aug 26, 2016 8:23 pm
குழந்தைகளின் அழகே அவர்களின் ரகளையான குறும்புகள்தான். ஆனால் விளையாட்டு சிலசமயங்களின் விபரீதமாக ஆகிவிடுவதுண்டும். எனவே வீட்டில் அம்மாக்கள் எப்போதும் அலார்ட்டா இருக்க வேண்டியது அவசியம். அதுபற்றி சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரேம் குமார் அளிக்கும் தகவல்கள்:
எலெக்ட்ரிக் பொருட்கள்:
எந்த எலெக்ட்ரிக் பொருள்களைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்திய பிறகு அதனை ஃஆப் செய்து விடுங்கள். முடிந்த வீடுகளைன் சுவிட்ச் போர்டை உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எலெக்ட்ரிக் பொருட்கள் வைக்கும் ஸ்டாண்டுகள் கொஞ்சம் ஸ்டாரங்காக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அந்த ஸ்டாண்டுகளை குழந்தைகள் விளையாட்டாகப் பிடித்து இழுத்தால் எலெக்ட்ரிக் பொருள்கள் அவர்களின் மீது விழுந்து அதிக அளவிளான பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
மருந்தினை மறக்காதீர்கள் :
உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் மருந்தினை குழந்தைகளின் கண்ணில் படும்படி கண்டிப்பாக வைக்க கூடாது,நிறைய குழந்தைகள் மருந்து இனிப்பாக உள்ளது என்று யாரும் கவனிக்காத நேரம் அளவுக்கு அதிகமாக குடித்து விடுகின்றனர். தலைவலி தைலங்களைக் குடித்து வயிற்றைப் புண்ணாக்கி கொள்கின்றனர்.
கெமிக்கல் பொருள்கள் :
க்ரேயான்ஸ், பல்பம், சாக்பீஸ் போன்றவற்றைப் பெற்றோர்கள் அருகில் இருக்கும் போது மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள். இவற்றை பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டு இருக்கின்றனர் இதனைச் சாப்பிடுவதால் வயிற்று வலி, சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
விளையாட்டு பொருட்கள்:
விளையாடும் பொருள்களை குழந்தைகள் வாயில் எடுத்து வைப்பார்கள் எனவே முடிந்தவரை விளையாட்டு பொருள்களை வாரம் ஒருமுறை சோப்புப்போட்டு கழுவி வைக்கவும். அழுக்கு உள்ள பொருள்களை வாயில் வைப்பதால் வாந்தி, பேதி ஏற்படும். ஃபர் (Fur) பொம்மைகளில் உள்ள நுண்ணிய நூல் குழந்தையின் மூக்கு மற்றும் வாயில் செல்லும்போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ய்பு உள்ளது. குழந்தைகளின் கையிற்கு நாணயம், பலூன், சிறிய மூடிகள், பேட்டரி, கூர்மையானப் பொருட்கள் கிடைக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.
[img(95.55556000000001px,122.55556000000001px)]http://img.vikatan.com/news/2016/08/26/images/prem%20kumar%20new.jpg[/img]எட்டாத தூரத்தில் ஆசிட், ஃபினாயிலை பாட்டில்கள்:
நிறைய வீடுகளில் ஜூஸ் பாட்டிலில், கெரசின், பினாயிலை ஊற்றி வைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அதனை ஜீஸ் என்று நினைத்து குடிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி குடிக்கும்பட்சத்தில் அவர்களின் குடல் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகூட ஏற்படலாம். அதே போன்று ஆசிட் பாட்டில்களை அவர்களுக்கு எட்டும் தூரத்தில் வைப்பதால், அதனை எடுத்து உடைக்க வாய்ப்பு உள்ளது, பாட்டில் உடைபடும்போது ஆசிட் கண், உடலில் தெரித்து தீராத காயம், கொப்புளங்கள், கண்பார்வை இழப்பு போன்றவை ஏற்படலாம். எனவே முடிந்தவரை ஆசிட் போன்ற பொருள்களை, குழந்தைகளுக்கு உயரத்தில் வைத்து தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்துங்கள்.
கதவைத் திறந்து வைக்காதீர்கள்;
நீங்கள் மாடி வீட்டில் இருக்கிறீர்கள் என்றால் மாடிப்படியின் கதவுகளை எப்போதும் மூடியே வைக்கவும். அதே போன்று பாத்ரூம் கதவுகள் திறந்து இருக்கும்போது குழந்தைகள் உள்ளே சென்று வழுக்கி விழ வாய்ப்பு உள்ளது.மேலும் அங்கு இருக்கும் சுத்தமில்லாத தண்னிரை குடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் டையரியா, டைபாய்டு போன்றவை ஏற்படும்.

- சு.சூர்யா கோமதி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum