மல்டி கிரெய்ன் ரொட்டி
Wed Nov 18, 2015 6:17 pm
தினம் தினம் ஒரே மாதிரியான உணவைச் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? ஃப்ரெஷ்ஷாக, அதே சமயம் டேஸ்ட்டாக வெஜிடபிள் சாலட், ரொட்டி, ஃப்ரூட் சாலட் இந்த மூன்று ரெசிபிகளும் உங்களை மேலும் எனர்ஜியாக வைத்திருக்கும்.
பீன்ஸ் ஸ்ப்ரவுட் சாலட்
தேவையானவை: மெல்லியதாக நறுக்கப்பட்ட பீன்ஸ், தக்காளி, வெங்காயம், குடமிளகாய், உப்பு, மிளகுத்தூள், வினிகர்.
பலன்கள்: 100 கிராம் பீன்ஸ், உடலுக்கு 31 கலோரி ஆற்றலை அள்ளித் தரும். பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புகள் இருப்பதால், எளிதில் உடலில் கலக்கும். நார்ச் சத்து உள்ளதால், பெருங்குடல் நோய் எதிர்ப்புத்தன்மையுடன் இருக்கவும், குடல் புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படும். கொலஸ்ட்ராலையும் குறைக்கும்.
மல்டி கிரெய்ன் ரொட்டி
தேவையானவை: கோதுமை, கார்ன் ஃப்ளவர், கேழ்வரகு, கருப்பு கொண்டைக்கடலை, உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர்- சிறிதளவு.
பலன்கள்: தானிய ரொட்டி, பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர உதவும். சோளத்தில் வைட்டமின்கள், ராகியில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துகள், பருப்பு வகைகளில் புரதம் என அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுவதால், எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ரிச் ஃப்ரூட் சாலட்
தேவையானவை: மாம்பழம், கிர்ணிப் பழம், திராட்சை, வாழைப்பழம், சப்போட்டா, ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை, தர்பூசணி, அத்திப்பழம், ஸ்ட்ராபெரி, கிவி, ராஸ்பெரி, ப்ளூபெரி.
பலன்கள்: பழங்கள் அதிக உயிர்ச்சத்து நிறைந்தவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசியத் தேவை. எலும்புகளுக்குப் பலத்தையும் உறுதியையும் அளிக்கின்றது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமத்தைப் பாதுகாக்கும். .
- உமா ஷக்தி, படங்கள்: பா. கார்த்திக்
நன்றி - கிருஷ்ணவிலாசம் உணவகம், சென்னை - 34

நறுக்கியக் காய்கறிகளை அடுக்கிவைத்து, அதில் வினிகர் கொஞ்சம் ஊற்றிய பின், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
பலன்கள்: 100 கிராம் பீன்ஸ், உடலுக்கு 31 கலோரி ஆற்றலை அள்ளித் தரும். பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புகள் இருப்பதால், எளிதில் உடலில் கலக்கும். நார்ச் சத்து உள்ளதால், பெருங்குடல் நோய் எதிர்ப்புத்தன்மையுடன் இருக்கவும், குடல் புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படும். கொலஸ்ட்ராலையும் குறைக்கும்.
மல்டி கிரெய்ன் ரொட்டி
தேவையானவை: கோதுமை, கார்ன் ஃப்ளவர், கேழ்வரகு, கருப்பு கொண்டைக்கடலை, உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர்- சிறிதளவு.
மேற்சொன்ன தானியங்களை நைஸாக அரைத்து மாவாக்கி, நன்றாக சலித்தபின் சப்பாத்தி மாவு போல தேய்க்கவும். தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். சுவையும் சத்தும் நிறைந்த இந்த மல்டி கிரெய்ன் ரொட்டியை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதற்கு இணை உணவாக, காய்கறிக் கூழை தயாரித்துப் பரிமாறலாம்.
பலன்கள்: தானிய ரொட்டி, பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர உதவும். சோளத்தில் வைட்டமின்கள், ராகியில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துகள், பருப்பு வகைகளில் புரதம் என அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுவதால், எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ரிச் ஃப்ரூட் சாலட்
தேவையானவை: மாம்பழம், கிர்ணிப் பழம், திராட்சை, வாழைப்பழம், சப்போட்டா, ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை, தர்பூசணி, அத்திப்பழம், ஸ்ட்ராபெரி, கிவி, ராஸ்பெரி, ப்ளூபெரி.
எல்லாப் பழங்களையும் துண்டுதுண்டாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போட்டுச் சாப்பிடலாம். நல்ல ருசியாக இருக்கும்.
பலன்கள்: பழங்கள் அதிக உயிர்ச்சத்து நிறைந்தவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசியத் தேவை. எலும்புகளுக்குப் பலத்தையும் உறுதியையும் அளிக்கின்றது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமத்தைப் பாதுகாக்கும். .
- உமா ஷக்தி, படங்கள்: பா. கார்த்திக்
நன்றி - கிருஷ்ணவிலாசம் உணவகம், சென்னை - 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum