பிரான்ஸ் என்ற சாது மிரள போகிறது
Sun Nov 15, 2015 9:08 am
பிரான்ஸ் மீதான தாக்குதல் மூலமாக, lSlS அமைப்பு தனக்கு தானே சுய கொள்ளியை வைத்துக் கொண்டது. இது போன்ற முட்டாள் தனமான தாக்குதல் முறைகளால் என்ன நடந்துவிட போகிறது? உலக அரங்கில் ஏற்கனவே முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு வரும் வேளையில், சர்வதேசத்தில் இஸ்லாம் தனிமைப் படுத்தப்படும். இனி ஐரோப்பாவில் உள்நுழையும் ஒவ்வொரு முஸ்லீமும் உள்ளாடை வரை கழற்றி பரிசோதனைக்கு தயாராக வேண்டும்.
தாய் மதத்திலே வெறுக்கப்பட்ட ஒரு அமைப்பு, அனைவராலும் கைவிடப்பட்ட இயக்கம், இஸ்லாம் என்ற பெயரை சொல்லி வெறியாட்டத்தை ஆடினால், அம் மதத்தில் உள்ள ஒவ்வொரும் உலக சமுதாயத்திற்கு பதிலை சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
சிரியாவில் உள்ள ISIS நிலைகள் மீது ஐநா கூட்டு படைகள் தாக்கியதற்கு பாரீஸை பதம் பார்த்து இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் பிரான்ஸ் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற நாடு. உலகெங்கிலும் இருந்து வருகின்ற அகதிகளுக்கு அடைகலம் தருகின்ற நாடு. ஐரோப்பாவில் முஸ்லீம்களுக்கு ஏக சலுகைகளை தந்திருக்கின்ற தேசம். அப்படிப்பட்ட நிலத்திலே இரத்த வேட்டை நிகழ்த்தி இருப்பின், ISIS எவ்வளவு கேடுகெட்ட சமுதாய தீங்கிற்கான இயக்கம் என்பது தெளிவாகிறது.
ஆப்கனில் அல்குவைதா யு.எஸ் ஆல் சுத்தம் செய்யப் பட்டதை போல இப்போது ISIS துடைத்தெறிய பிரான்ஸ் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜிகாதிகளுக்கு சவகுழிகள் போதுமா என்றுதான் தெரியவில்லை.
பிரான்ஸ் என்ற சாது மிரள போகிறது.
#படிச்சதில_யோசிக்கவச்சது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum