அக்மார்க் சான்றிதழ் பெறுவது எப்படி?
Fri Nov 13, 2015 8:38 am
சந்தைப்படுத்துதல் மற்றும் ஆய்வு இயக்ககம், இந்திய அரசு | |
இந்தியா | |
1986 | |
வேளாண் பொருட்கள் | |
ஆலோசனை | |
agmarknet.nic.in/agm_std1.htm | |
அக்மார்க் என்பது இந்திய அரசின் வேளாண் பொருட்களுக்கான சான்றளிப்பு குறியாகும். சந்தைப்படுத்துதல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் வேளாண் பொருட்களை ஆராய்ந்து தர நிலையை உறுதி செய்கிறது. இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் முகமையாகும். வேளாண் பொருட்களுக்கு (தரம் மற்றும் குறியீடு) சட்டம் 1937 மற்றும் (திருத்தப்பட்ட சட்டம் 1986) மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது அக்மார்க் தர நிலைகள் 205 பல்வேறு விளைப் பொருட்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றுள் தானியங்கள், பயறு வகைகள், அத்தியாவசிய எண்ணெய்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் சேமியா போன்ற அரை பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கும்.
அக்மார்க் என்பது வேளாண்மை (Agriculture) மற்றும் குறியீடு (Mark) ஆகியவை சேர்ந்த சொல்லாகும். வேளாண் பொருட்கள் (தரம் மற்றும் குறியீடு) சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அக்மார்க் ஆய்வகங்கள்
அக்மார்க் சான்றளிப்பு நாடு முழுவதும் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கு சொந்தமான அக்மார்க் ஆய்வகங்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இவைகளுடன் மத்திய அக்மார்க் ஆய்வகம் (CAL) நாக்பூர், 11 ஒருங்கிணைந்த நகரங்களில் அக்மார்க் ஆய்வகங்கள் (மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, கான்பூர், கொச்சி, குண்டூர், அமிர்தசர், ஜெய்பூர், ராஜ்கோட், போபால்) உள்ளன. ஒவ்வொரு வட்டார ஆய்வகங்களும் அந்தந்த வட்டாரத்தில் சிறப்பு வாய்ந்த பொருட்களுக்காக சோதனை செய்ய அமைக்கப்பட்டுள்ளன.
பொருட்கள் மற்றும் சோதனைகள்
இந்த ஆய்வகங்களில் இரசாயன பகுப்பாய்வு, நுண்ணுயிரி வழிப் பகுப்பாய்வு, பூச்சிக்கொல்லி மீதம் மற்றும் கரும்பூசண நச்சு வகை பகுப்பாய்வு, வாசனை பொருட்கள், நெய், வெண்ணெய், தாவர எண்ணெய், கடுகு எண்ணெய், தேன், உணவு தானியங்கள் (கோதுமை), கோதுமை பொருட்கள் (ஆட்டா, சுஜா மற்றும் மைதா), பயறு மாவு, சோயா மொச்சை, கொண்டைக் கடலை, இஞ்சி, பிண்ணாக்கு, அத்தியாவசிய எண்ணெய், எண்ணெய் மற்றும் கொழுப்பு, விலங்கு பொதியுறை, இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களில் மேற்கொள்ளப்படுகிறது.
அக்மார்க் பதிவு பின்வரும் பொருட்களுக்கு கிடைக்கும்
விலங்கின் தோல், ஆட்டு முடி, முட்கள், கம்பளி, புலால் (குளிர்ந்த மற்றும் உறைந்த) கைளால் பொறுக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வேர்கடலை, முந்திரி பருப்பு, அம்பாடி விதைகள், கடுகு விதைகள், நிலக்கடலை, அக்ரூட் பருப்பு, தாவர எண்ணெய் புண்ணாக்கு, நெய், வனஸ்பதி பாலாடைக்கட்டி வெண்ணெய், அத்தியாவசிய எண்ணெய், தாவர எண்ணெய், புகையிலை, கரும்பு, வெல்லம் (பனை வெல்லம்), பால், பாக்கு, நெல்லி, பீடி சுற்றும் இலைகள், சென்னா இலைகள் மற்றும் காய்கள், மரவள்ளி கிழங்கு பொருட்கள் (கால்நடை தீவணம்), முட்டை, தேன், விதையில்லா புளி, உலர்ந்த சாப்பிடக்கூடிய காளான், குங்குமப்பூ, சீகக்காய் தூள், காங்க்ரா தேயிலை, அகார் அகார், பப்பேயின், அரிசி, கோதுமை ஆட்டா, பயறு வகைகள், தானியங்கள், கடலை மாவு, பாசுமதி அரிசி (ஏற்றுமதி), சுஜி மற்றும் மைதா, திராட்சை, ஆப்பிள், அல்போன்சா மாம்பழம் – ஏற்றுமதி, தாவரங்கள், அல்போன்சா மாம்பழம் – வீட்டு உபயோகத்திற்கு, பெட்டியில் அடைக்கப்பட்ட, பாட்டிலில் அடைக்கப்பட்ட பழங்கள், பழ பொருட்கள் சிட்ரஸ், உருளைக்கிழங்கு (ஏற்றுமதி), நீர் கஷ்கொட்டை, வில்லியம் பேரிக்காய், மாம்பழம், விதை உருளைக்கிழங்கு, தேங்காய், குழம்பு பொடி, மிளகாய், ஏலக்காய், கொத்துமல்லி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாய் தூள், பாப்பி விதைகள், மஞ்சள், பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் சீவரிக்கீரை விதைகள், சீரகம், மிளகு, சோம்பு, சணப்பை, பனை நார், பருத்தி, கற்றாழை இழை, சணல் மற்றும் இதர பொருட்கள்.
அக்மார்க் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கைகள்
- அங்கீகரிக்கப்பட்ட அக்மார்க் ஆய்வகத்திலிருந்து முறையாக வாங்கிய சோதனை அறிக்கை
- நிறுவனத்தின் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் ஆவணம்
- விண்ணப்பதாரர் வரையறுக்கப்பட்ட நிறுமமாக இருந்தால் மாநில அதிகாரம் அல்லது குறிப்பாணை
- கூட்டாண்மையாக இருந்தால் கூட்டாண்மை ஒப்பந்தம்
- பொருட்களின் பெயர்
- விண்ணப்பதாரரின் பெயர்
- நிறுவனம்/ குழுமத்தின் பெயர்
- நிறுவனம்/ குழுமத்தின் முகவரி
- பொருளின் மாதிரி (500கிகி.1கிகி பை)
- தயாரிப்பு துவங்கியது (சரியான தேதி/மாதம்/வருடம்)
- மொத்த உற்பத்தி கிலோ கிராமில் (சென்ற வருடம்)
- கடந்த ஆண்டின் உற்பத்தி மதிப்பு
தலைமைச் செயல் அலுவலர்,
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை,
திரு வி.க. தொழிற் பேட்டை,
கிண்டி, சென்னை – 600 032,
தமிழ்நாடு,
இந்தியா.
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை,
திரு வி.க. தொழிற் பேட்டை,
கிண்டி, சென்னை – 600 032,
தமிழ்நாடு,
இந்தியா.
தொலைபேசி | 0091-44-22253156 |
தொலை நகலனுப்பி | 0091-44-22253156 |
மின் அஞ்சல் |
ஆணையர்/இயக்குனர்,
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை,
திரு வி.க. தொழிற் பேட்டை,
கிண்டி, சென்னை – 600 032,
தமிழ்நாடு,
இந்தியா.
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை,
திரு வி.க. தொழிற் பேட்டை,
கிண்டி, சென்னை – 600 032,
தமிழ்நாடு,
இந்தியா.
தொலைபேசி | 0091-44-22253884 |
மின் அஞ்சல் |
ஆதாரம் http://www.tnsamb.gov.in/
Permissions in this forum:
You cannot reply to topics in this forum