ஜேர்மன் நாட்டு குடியுரிமை பெறுவது அல்லது அந்நாட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமையை பெறுவது எப்படி
Mon Jun 27, 2016 5:58 am
ஜேர்மன் நாட்டு குடியுரிமை பெறுவது அல்லது அந்நாட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமையை பெறுவது எப்படி என்பதற்கான விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜேர்மன் குடியுரிமை அல்லது நிரந்தர குடியிருப்பு உரிமையை பெறுவது என்பது சாதாரணமான விடயம் இல்லை என அந்நாட்டு வெளியுறவு துறை இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், ஜேர்மன் குடியுரிமையை பெறுவதாக இருந்தால் தற்போதையை குடியுரிமையை இழக்கவும் நேரிடும் என்ற சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது.
ஆனால், ஜேர்மன் குடியுரிமை பெறுவதற்கும் மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி என்பதற்கான தகவல்களை பார்ப்போம்.
நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி?
நிரந்தர குடியிருப்பு அனுமதி என்பது ஜேர்மன் குடியுரிமை பெறாமல் அந்நாட்டிலேயே நிரந்தரமாக அல்லது நீண்ட வருடங்களாக குடியிருக்கும் உரிமையாகும்.
இந்த அனுமதியை பெறுவதற்கு ஒரு நபர் குறைந்தது 5 வருடங்கள் ஜேர்மனியில் தங்கியிருக்க வேண்டும்.
ஒரு ஜேர்மன் குடிமகனுக்கு இருக்க வேண்டிய அத்தனை திறமைகளும் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் பலப்படுத்திக்கொண்டு. சுகாதார காப்பீடு பெற்றுருப்பதுடன் எவ்வித குற்ற வரலாறுகளும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
இதற்கு அடுத்ததாக EC Residence எனப்படும் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன் வரையறுக்கப்பட்ட குடியிருப்பு அனுமதியும்(Limited residence permit) கிடைக்கும்.
அதாவது, பணி செய்ய அனுமதிக்கும் அங்கீகாரம் ஆகும். இந்த அனுமதி கிடைத்தால், இதனை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம்.
அதே சமயம், குடியமர்வு அனுமதியும்(settlement permit) பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இதனை பயன்படுத்தி அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வசிக்க முடியாது.
இந்த அனுமதியை 5 வருடங்களுக்கு குறைவாக வசித்திருந்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவன் 2 வருடங்கள் தங்கியிருந்தாலும் கூட, அவர் குடியமர்வு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல், EU Blue Card பெற்றுள்ளவர்கள் (அதாவது 49,600 யூரோ அல்லது 38,688 யூரோக்கு மேல் மொத்த வருவாய் பெறுபவர்கள்) 33 மாதங்கள் அல்லது 21 மாதங்கள் வசித்திருந்தாலும் அவர்களிடம் B1 மொழி அங்கீகாரம் இருந்தால் அவர்கள் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
மேலும், வெற்றிகரமாக சுயதொழில் செய்து வரும் நபர்கள் 3 வருடங்களில் கூட நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதுமட்டுமில்லாமல், பெரும் தகுதிப்படைத்த அறிஞர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் ஜேர்மனியில் தஞ்சம் அடைந்தால் அவர்களுக்கு விரைவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஜேர்மன் குடியுரிமையை பெறுவது எப்படி?
ஜேர்மனில் limited residence permit-ன் கீழ் குடியுரிமையை பெற வேண்டும் என்றால், அவர் அந்நாட்டில் குறைந்தது 8 வருடங்கள் வசித்திருக்க வேண்டும்.
எனினும், அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ள ஜேர்மன் மொழி கற்பிக்கும் வகுப்புகளில் பங்கேற்று இருந்தால், 7 வருடங்களில் கூட குடியுரிமையை பெற்று விடலாம்.
இவை அனைத்தையும் விட முக்கியமானதாக, ஜேர்மன் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஜேர்மன் மொழியில் பேசுவது மட்டுமில்லாமல், அம்மொழியில் எழுதவும், அதிகாரிகள் அளிக்கும் பயிற்சியினை ஜேர்மன் மொழியில் செய்து முடிக்கவும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இது தான் மிக அவசியமான தகுதியாகும்.
அதே போல், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நபர் அவருடைய தாய்நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டும். ஒரு வேளை அவரது தாய்நாடு இதை அனுமதிக்காவிட்டால், அவருக்கு சில விதிவிலக்கு அளிக்கப்படும்.
மேலும், அரசு நிதியுதவியை எதிர்ப்பார்க்காமல் சொந்தக்காலில் நின்று தனது செலவுகளை பார்த்துக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். ஏற்கனவே கூறியது போல், எவ்வித குற்றப்பின்னணியும் இருக்க கூடாது.
இறுதியாக, ஜேர்மன் குடியுரிமையை பெறுவதற்கு B1 வரிசையில் ஜேர்மன் மொழியில் 33 கேள்விகள் கேட்கப்படும்.
ஜேர்மன் நாட்டின் வரலாறு, சட்டங்கள், குடிமக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கேள்விகள் அமைந்திருக்கும்.இந்த 33 கேள்விகளில் குறைந்தது 17 கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு மேற்கூறிய அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றினால், உங்களுக்கு ஜேர்மன் குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Re: ஜேர்மன் நாட்டு குடியுரிமை பெறுவது அல்லது அந்நாட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமையை பெறுவது எப்படி
Mon Jun 27, 2016 6:01 am
ஜேர்மனியில் பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நகரமாக Dresden தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Focus என்ற நாளிதழ் ஜேர்மனியில் உள்ள 77 நகரங்களில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு, வருவாய், கல்வித்திறமை, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், சம உரிமை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இதில் எந்த நகரம் அவர்கள் நட்புறவுடன் வாழ்வதற்கு சிறப்பாக உள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.
இதில் Dresden நகரம் முதலிடத்தில் உள்ளது, இந்நகரில் 92 சதவீத பெண்கள் சம்பாதிக்கின்றனர். மேலும் இங்கு வசிக்கும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாகவும், இவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மிக குறைந்த அளவிலேயே உள்ளன.
மேலும் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் இவர்களுக்கும் கிடைக்கின்றன. இரண்டாவது இடத்தில் Heidelberg நகரம் உள்ளது, முனிச் 6வது இடத்திலும், பெர்லின் 10வது இடத்திலும், Hamburg 16வது இடத்திலும், Dusseldorf 23வது இடத்திலும் உள்ளது.
Ludwigshafen நகரில் பணிக்கும் செல்லும் பெண்களின் பணி விகிதம் குறைவு ஆகும், மேலும் பெண்கள் வசிப்பதற்கு மிகவும் மோசமான இடமாக இந்நகரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இங்கு பெண்களுக்கு எதிரான நடக்கும் வன்முறைகள் அதிகம் ஆகும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum