நாடும் - மாடும்
Sat Nov 07, 2015 8:15 am
நீர் நாட்டுக்கு பிரதமரா
இல்லை மாட்டுக்கு பிரதமரா ?
தேசம் கண்டிராத பலவீனமான பிரதமர் என்று
நேசம் வைத்த கட்சியினரே சொல்லுமளவுக்கு
சிங்கை தங்கமாக்கி
சங்பரிவாரை பங்காக்கி
பசுவை ஒரு அங்கமாக்கி
பதவியை பங்கமாக்கி
நிற்கும் [அ] சிங்கமே !
கறுப்புபணத்தை மீட்பேன் என்றீர்!
இருப்பு பணத்தையும் இழந்தோம் நாங்கள் !
விலைவாசியைக் குறைப்பேன் என்றீர்
பருப்பும் வெங்காயமும் எட்டாத விலையில் !
தூய்மை இந்தியா என்றீர் உம்சகாக்களால்
கருமை வீசி கருத்துரிமை அசுத்தமானது !
வளர்ச்சி என்றீர் ! உங்கள் சகாக்களால்
மதக் கலவரங்கள் வளர்ந்ததுதான் மிச்சம் !
மேக் இன் இந்தியா என்றீர் ஆனால்
படேல் சிலை கூட இறக்குமதி என்கிறீர்!
மாட்டுக்காக மனிதர்கள் கொலை !
எழுத்தாளர்கள் படுகொலை !
கருத்து சுதந்திரத்துக்கு கருப்பு மை !
நீர் நாட்டுக்கு பிரதமரா
இல்லை மாட்டுக்கு பிரதமரா ?
ஒட்டுப்போட்ட மக்கள்
வீட்டுக்கு அனுப்பும் வரை
நீர் பாட்டுக்கு உலகம் சுற்றும் !
இப்படி ஒரு ஆட்சி
இந்தியா கண்டதில்லை!
உம்மைப்போல் பொய்யரை
உலகம் கண்டதில்லை!
பதினேழு மாதங்கள் மக்கள்
பட்டதெல்லாம் போதுமய்யா !
Political Stunts
இல்லை மாட்டுக்கு பிரதமரா ?
தேசம் கண்டிராத பலவீனமான பிரதமர் என்று
நேசம் வைத்த கட்சியினரே சொல்லுமளவுக்கு
சிங்கை தங்கமாக்கி
சங்பரிவாரை பங்காக்கி
பசுவை ஒரு அங்கமாக்கி
பதவியை பங்கமாக்கி
நிற்கும் [அ] சிங்கமே !
கறுப்புபணத்தை மீட்பேன் என்றீர்!
இருப்பு பணத்தையும் இழந்தோம் நாங்கள் !
விலைவாசியைக் குறைப்பேன் என்றீர்
பருப்பும் வெங்காயமும் எட்டாத விலையில் !
தூய்மை இந்தியா என்றீர் உம்சகாக்களால்
கருமை வீசி கருத்துரிமை அசுத்தமானது !
வளர்ச்சி என்றீர் ! உங்கள் சகாக்களால்
மதக் கலவரங்கள் வளர்ந்ததுதான் மிச்சம் !
மேக் இன் இந்தியா என்றீர் ஆனால்
படேல் சிலை கூட இறக்குமதி என்கிறீர்!
மாட்டுக்காக மனிதர்கள் கொலை !
எழுத்தாளர்கள் படுகொலை !
கருத்து சுதந்திரத்துக்கு கருப்பு மை !
நீர் நாட்டுக்கு பிரதமரா
இல்லை மாட்டுக்கு பிரதமரா ?
ஒட்டுப்போட்ட மக்கள்
வீட்டுக்கு அனுப்பும் வரை
நீர் பாட்டுக்கு உலகம் சுற்றும் !
இப்படி ஒரு ஆட்சி
இந்தியா கண்டதில்லை!
உம்மைப்போல் பொய்யரை
உலகம் கண்டதில்லை!
பதினேழு மாதங்கள் மக்கள்
பட்டதெல்லாம் போதுமய்யா !
Political Stunts
Permissions in this forum:
You cannot reply to topics in this forum