ஸ்கிரீனைப் புகைப்படமெடுக்க உதவும் ஸ்கிரீன் கிளிப்பிங் டூல்!
Wed Nov 04, 2015 8:46 am
கல்வி சம்பந்தமான பாடங்களை Self Learning Tutorial என்ற கான்செப்ட்டில் புத்தகங்களாக, சி.டிக்களாக வடிவமைத்திருப்பார்கள். குறிப்பாக கம்ப்யூட்டர் லாங்குவேஜ்கள் மற்றும் சாஃப்ட்வேர்களை கற்றுத் தருகின்ற பாடங்கள் படிப்படியாக சொல்லிக்கொடுக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தால்தான் படிப்பவர்கள் அதைப் பார்த்துப் புரிந்துகொண்டு பயன்படுத்த முடியும்.
உதாரணத்துக்கு, கம்ப்யூட்ராலஜி என்ற இந்தப் பகுதியில்கூட ஒவ்வொரு கான்செப்ட்டையும் பயன்படுத்தும் முறையை, ஸ்கிரீன் கேப்ச்சர் செய்த படங்கள் மூலம்தான் விளக்கம் கொடுத்திருப்போம். பயனாளர்கள் அந்தப் படங்களைப் பார்த்து அப்படியே பயிற்சி செய்து பயன் அடையலாம். இவ்வாறு படங்கள் மூலம் விளக்கம் கொடுப்பதற்கு, மானிட்டரில் வெளிப்படும் விவரங்களை அப்படியே படங்களாக மாற்றி வெளிப்படுத்த வேண்டும். இதற்கு பொதுவாக கீபோர்டில் உள்ள ‘பிரின்ட் ஸ்கிரீன்’ (Print Screen) என்ற கீ உதவுகிறது. இந்த கீ மூலம் திரை முழுவதும் காப்பி செய்யப்பட்டு கிளிப்போர்டில் பதிவாகும். பிறகு அதை தேவையான இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.
ஆம். நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள எம்.எஸ்.வேர்ட், எம்.எஸ்.எக்ஸல், எம்.எஸ்.பவர்பாயின்ட் போன்ற சாஃப்ட்வேர்களிலேயே இதற்கான வசதி உள்ளது. அந்த வசதி Screen Shot / Screen Clipping என்ற பெயர்களில் மெனுக்களில் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றைப் பயன்படுத்தி மைக்ரோசாஃப்ட் எக்ஸல் சாஃப்ட்வேரில் திரையைப் புகைப்படம் எடுக்கும் முறையை தெரிந்துகொள்ளலாம்.
ஸ்கிரீன் கிளிப்பிங் மூலம் டெஸ்க்டாப்பில் உள்ள விவரங்களை புகைப்படம் எடுக்கும் முறை
Insert > Screenshot > Screen Clipping என்ற விவரத்தைக் கிளிக் செய்தவுடன், நம் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப்பில் என்ன ஃபைல் திறந்துள்ளதோ அந்த ஃபைலில் இருந்து விருப்பமானப் பகுதியை மவுசால் தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதியாக அந்தத் திரை வெளிப்பட்டு கலர் மங்கலாகி, மவுசின் பாயிண்ட்டரும் + குறியீடாக மாற்றம் பெற்று விடும். மவுசைப் பயன்படுத்தி சதுரம் போடுவதைப் போல விருப்பமான பகுதியை தேர்ந்தெடுத்தால், அப்பகுதி நம் ஸ்பெரெட் ஷீட்டில் தற்போது கர்சர் உள்ள இடத்தில் பேஸ்ட் ஆகி விடும்.
ஸ்கிரீன் கிளிப்பிங் மூலம் வேர்ட் டாக்குமென்ட் திரையை புகைப்படம் எடுக்கும் முறை
பிறகு எம்.எஸ்.எக்ஸலில் Insert > Screenshot > Screen Clipping என்ற விவரத்தைப் பயன்படுத்தினால் டாக்குமென்ட் திரை தன்னைப் புகைப்படமெடுக்கத் தயாராகும். அதாவது திரை மங்கலாகி + குறியீடும் தோன்றும். தேவையான பகுதியை மவுஸால் செலெக்ட் செய்துகொண்டால் அந்தப்பகுதி மட்டும் படமெடுக்கப்பட்டு எம்.எஸ்.எக்ஸலில் தற்போது கர்சர் உள்ள இடத்தில் வெளிப்படும்.
ஸ்கிரீன் கிளிப்பிங் மூலம் பிரவுசர் திரையை புகைப்படம் எடுக்கும் முறை
குறிப்பு
திரையைப் புகைப்படம் எடுக்க (Screen Capture) ஏராளமான சாஃப்ட்வேர்களும், ஆப்களும் இருந்தாலும், நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸில் உள்ள ஸ்கிரீன் கேப்ச்சர் வசதியை பயன்படுத்தும் முறையை விளக்கி உள்ளேன்.
Disclaimer
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
- காம்கேர் கே. புவனேஸ்வரி

ஆனால், ‘பிரின்ட் ஸ்கிரீன்’ கீயைப் பயன்படுத்தி ஸ்கிரீன் உள்ள குறிப்பிட்ட பகுதியை படமாக்க முடியாது. முழு திரையையும் படமாக மாற்றி, பெயின்ட், போட்டோஷாப் போன்ற சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி எடிட் செய்துகொள்ளலாம். இவ்வாறு ஸ்கிரீனை புகைப்படம் எடுப்பதற்கு கேம்டேஷியா போன்ற சாஃப்ட்வேர்கள் உதவுகிறது. விண்டோஸில் ஸ்நிப்பிங் டூலையும் பயன்படுத்தலாம். ஆனால் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு, நெய்க்கு யாராவது அலைவார்களா?
ஆம். நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள எம்.எஸ்.வேர்ட், எம்.எஸ்.எக்ஸல், எம்.எஸ்.பவர்பாயின்ட் போன்ற சாஃப்ட்வேர்களிலேயே இதற்கான வசதி உள்ளது. அந்த வசதி Screen Shot / Screen Clipping என்ற பெயர்களில் மெனுக்களில் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றைப் பயன்படுத்தி மைக்ரோசாஃப்ட் எக்ஸல் சாஃப்ட்வேரில் திரையைப் புகைப்படம் எடுக்கும் முறையை தெரிந்துகொள்ளலாம்.
ஸ்கிரீன் கிளிப்பிங் மூலம் டெஸ்க்டாப்பில் உள்ள விவரங்களை புகைப்படம் எடுக்கும் முறை
நம் மானிட்டர் திரையில் வெளிப்படும் விவரங்களை அப்படியே போட்டோ எடுப்பதைப் போல எடுத்து ஸ்பெரெட் ஷீட்டில் இணைத்துக் கொள்ள உதவும் விவரத்துக்கு ScreenShot என்று பெயர். இதற்கு எம்.எஸ். எக்ஸல் சாஃப்வேரில், ரிப்பன் பகுதியில் Insert என்ற டேபில், illustrations என்ற கட்டளைத் தொகுப்பில், ScreenShot என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பட்டியல் வெளிப்படும். அதில் ஏற்கனவே நாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்த படங்கள் வெளிப்பட்டிருக்கும். மேலும் Screen Clipping என்ற விவரமும் வெளிப்படும். இதைக் கிளிக் செய்துதான் திரையைப் புகைப்படமெடுக்க முடியும்.
Insert > Screenshot > Screen Clipping என்ற விவரத்தைக் கிளிக் செய்தவுடன், நம் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப்பில் என்ன ஃபைல் திறந்துள்ளதோ அந்த ஃபைலில் இருந்து விருப்பமானப் பகுதியை மவுசால் தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதியாக அந்தத் திரை வெளிப்பட்டு கலர் மங்கலாகி, மவுசின் பாயிண்ட்டரும் + குறியீடாக மாற்றம் பெற்று விடும். மவுசைப் பயன்படுத்தி சதுரம் போடுவதைப் போல விருப்பமான பகுதியை தேர்ந்தெடுத்தால், அப்பகுதி நம் ஸ்பெரெட் ஷீட்டில் தற்போது கர்சர் உள்ள இடத்தில் பேஸ்ட் ஆகி விடும்.
உதாரணத்துக்கு, இப்போது டெஸ்க் டாப்பை புகைப்படமெடுக்கக் கற்றுக்கொள்ளலாம். இதற்கு டெஸ்க் டாப்பை திரையில் திறந்துள்ள மற்ற அப்ளிகேஷன்களை மூடிவிட்டு, டெஸ்க் டாப்பை மட்டும் வெளிப்படுத்திக்கொள்ளலாம்.
அடுத்ததாக, Insert > Screenshot > Screen Clipping என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ளலாம்.
திரையில் திறந்து வைத்துள்ள படம் மங்கலாகி, மவுசின் பாயிண்ட்டர் + குறியீடாக மாறி, படம் ஸ்கிரீன் ஷாட்டுக்குத் தயார் என்பதைத் தெரிவிக்கும். நாம் மவுசைப் பயன்படுத்தி சதுரம் போடுவதைப் போல படத்தில் விருப்பமான பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
உடனடியாக நாம் தேர்ந்தெடுத்த படத்தின் பகுதி, நம் ஸ்பெரெட் ஷீட்டில் இணைந்து விடுவதைக் காணலாம்.
ஸ்கிரீன் கிளிப்பிங் மூலம் வேர்ட் டாக்குமென்ட் திரையை புகைப்படம் எடுக்கும் முறை
நாம் இப்போது டைப் செய்துகொண்டிருக்கும் எம்.எஸ்.வேர்ட் டாக்குமென்ட் திரையை அப்படியே படமாக்குவதற்கு திரையில் உள்ள மற்ற அப்ளிகேஷன்கள் அனைத்தையும் மூடிவிட்டு வேர்ட் டாக்குமென்ட்டை மட்டும் திறந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு எம்.எஸ்.எக்ஸலில் Insert > Screenshot > Screen Clipping என்ற விவரத்தைப் பயன்படுத்தினால் டாக்குமென்ட் திரை தன்னைப் புகைப்படமெடுக்கத் தயாராகும். அதாவது திரை மங்கலாகி + குறியீடும் தோன்றும். தேவையான பகுதியை மவுஸால் செலெக்ட் செய்துகொண்டால் அந்தப்பகுதி மட்டும் படமெடுக்கப்பட்டு எம்.எஸ்.எக்ஸலில் தற்போது கர்சர் உள்ள இடத்தில் வெளிப்படும்.
ஸ்கிரீன் கிளிப்பிங் மூலம் பிரவுசர் திரையை புகைப்படம் எடுக்கும் முறை
இன்டர்நெட் பிரவுசர் சாஃப்ட்வேரில் நாம் திறந்துள்ள திரையை அப்படியே படம்மாக்குவதற்கு திரையில் உள்ள மற்ற அப்ளிகேஷன்கள் அனைத்தையும் மூடிவிட்டு வேர்ட் பிரவுசர் சாஃப்ட்வேரை மட்டும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். பிறகு எம்.எஸ்.எக்ஸலில் Insert > Screenshot > Screen Clipping என்ற விவரத்தைப் பயன்படுத்தினால் பிரவுசர் திரை தன்னைப் புகைப்படமெடுக்கத் தயாராகும். அதாவது திரை மங்கலாகி + குறியீடும் தோன்றும். தேவையான பகுதியை மவுஸால் செலக்ட் செய்துகொண்டால் அந்தப்பகுதி மட்டும் படமெடுக்கப்பட்டு எம்.எஸ்.எக்ஸலில் தற்போது கர்சர் உள்ள இடத்தில் வெளிப்படும்.
குறிப்பு
திரையைப் புகைப்படம் எடுக்க (Screen Capture) ஏராளமான சாஃப்ட்வேர்களும், ஆப்களும் இருந்தாலும், நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸில் உள்ள ஸ்கிரீன் கேப்ச்சர் வசதியை பயன்படுத்தும் முறையை விளக்கி உள்ளேன்.
Disclaimer
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
- காம்கேர் கே. புவனேஸ்வரி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum