"ரிக்வேதகால ஆரியர்கள்' என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன்,
Wed Oct 28, 2015 9:06 am
"அவர்களிலே (ஆரியர்களில்) மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரிஷிகள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்'' என்று எழுதியுள்ளார்.
"தன் மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும், நல்ல பேச்சாளனாகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் கலந்த சாதம் சாப்பிட வேண்டும்'' என்கிறது பிரகதாரண்ய (6-4-18) உபநிடதம்.
அன்று வாழ்ந்த ஜீவகாருண்ய சீலர் புத்தர் மட்டுமே. "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என உரைத்தவர் வள்ளுவர் மட்டுமே.
மற்ற அனைவரும் மாட்டுக்கறி தின்ற மகானுபாவர்கள் தாம்!
அவர்கள் தின்ற போதெல்லாம், மாட்டுக்கறி என்பது மாமுனிவர்களின் உணவாய் இருந்தது. அதனையே நாம் தின்னத் தொடங்கிய பின், அது அருவெறுக் கத்தக்க உணவாகிவிட்டது.
கொல்லாமை அறம் கூறி அன்று பெளத்தமும், சமணமும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதை அறிந்த ஆதி சங்கரர், அதனைத் தன் கொள்கையாக வரித்துக் கொள்ள முயன்றார்.
பெளத்தத்தின் பல சிறப்புக் கூறுகளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, தன் மதமே அஹிம்சை போற்றும் அரிய மதம் என ஆரவாரம் செய்தார். அதனால்தான்அவரைப் "பிரசன்ன பெளத்தர்' (பெளத்தத்தின் பின்னால் மறைந்து நிற்பவர்) என்று இன்றும் கூறுகின்றனர்.
இப்படித்தான் பார்ப்பனர்கள் "சைவர்களாக' ஆயினர். அவர்கள் சைவர்கள் ஆனவுடன், அசைவர்கள் ஈனப்பிறவிகள் என்று அறிவிக் கப்பட்டனர்.
-எழுத்தாளர் சுப.வீரபாண்டியன்
- கணியூர் வரதராஜ் தவாக மாசெயலர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum