"கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்" என்னும் சத்திய வார்த்தையின் பொருள்
Thu May 22, 2014 5:57 pm
"கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்" என்னும் சத்திய வார்த்தையின் பொருள் என்ன? மறுபடியும் பிறந்த எல்லாக் கிறிஸ்தவர்களும் இவ்வார்த்தையில் உட்படுகிறார்களா?
அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, பரிசுத்தமாக்கப்பட்டு, பூரணமாக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்களை குறித்து மட்டுமே அப்.பவுல் கூறுகிறார். மறுபடியும் பிறந்த எல்லாக் கிறிஸ்தவர்களும் இக்கூட்டத்தில் உட்பட்டவர்களல்ல. "கிறிஸ்துவுக்குள் இருப்பதே ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலைமை, ஆவிக்குரிய தனிப்பட்ட சிலாக்கியங்கள், ஆவிக்குரிய சுதந்திரங்கள் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது. "கிறிஸ்துவுக்குள் இருப்பது என்பது "அவர் எங்கே இருக்கிறாரோ அங்கே நாமும் இருப்பதும்; (யோவான்.14:3) "அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே நாமும் இருப்பதும்". (1யோவான்.3:2) "அவருக்குள்ளதை நாமும் பகிர்ந்து கொள்வதும்". (வெளி.3:21) ஆகும்.
அன்பின் ஆவியானவர் தன் அப்போஸ்தலராகிய பவுலடியாரைக் கொண்டு கொரிந்து சபையாரை எச்சரிக்கிறார்.
"மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று"
(1கொரி.3:1)
"நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஐனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன். இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை."
(1கொரி.3:2)
"பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?"
(1கொரி.3:3)
"சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று... பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?" (1கொரி.3:1, 3) என்று எச்சரிக்கிறார்.
பூரணமாக்கப்பட்டு மரித்த, உயிரோடிக்கிற பரிசுத்தவான்களுக்காகவேயல்லாமல், ஆவிக்குரிய பிரகாரமாக கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாயிருக்கிற மரித்தவர்களுக்காகவோ அல்லது உயிரோடிருக்கிறவர்களுக்காகவோ, நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசு வரப்போகிறதில்லை. " எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்." (கொலோ1:28) என்று நம் ஆண்டவர் கூறுகிறார்.
பரிசுத்தமாக்கப்பட்டு பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்கள் "முதற்பலன்களானவர்கள்" (யாக்.1:18; வெளி.14:4) என்றழைக்கப்படுகிற இவர்களையே "கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், கிறிஸ்துவுக்குளளானவர்கள்,"என்று ஆவியானவர் கூறுகிறார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum