அமேசானின் தீபாவளி விற்பனை
Sun Oct 25, 2015 9:09 pm
அமேசான் தீபாவளி சேலில் முடிந்த அளவு பணத்தை மிச்சப்படுத்த டிப்ஸ். கொஞ்சம் பெரிய கட்டுரை. பொறுமையாக வாசியுங்கள். பயனுள்ளதாக இருக்கும்.
அமேசானின் தீபாவளி விற்பனை 26 அக்டோபர் முதல் 28 அக்டோபர் வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது. ஆடைகள் முதல் மொபைல், லேப்டாப்கள் வரை நல்ல தள்ளுபடியில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த விற்பனையில் முடிந்தவரை பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி என்பதற்கு சில டிப்ஸ்-கள்.
டாப் அப் கூப்பன், எப்படி வாங்குவது?, இலவச ஷிப்பிங்-குக்கான Beauty பொருட்கள் லிங்க்-குடன் விபரங்களுக்கு இந்த பக்கத்தை பாருங்கள் http://thuttu.com/deal…
1. எல்லா பொருட்களிலும் உபரியாக 5% தள்ளுபடி பெற : இந்த விற்பனையில் தள்ளுபடியில் கிடைக்கும் பொருட்களில் மேலும் 5% தள்ளுபடி பெற ஒரு ஐடியா.
அமேசான் கிப்ட் கார்டுகளுக்கு தற்போது 5% தள்ளுபடி வழங்கி வருகிறார்கள். அதில் சென்று உங்களுக்கு தேவையான தொகைக்கு டாப் அப் செய்து கொள்ளுங்கள். கூப்பன் பயன்படுத்தி அந்த தொகையில் 5% தள்ளுபடி பெறுங்கள்.
உதாரணத்திற்கு ரூ. 1000 க்கு டாப் அப் செய்ய ரூ. 950 செலுத்தினால் போதும். உங்கள் அமேசான் கணக்கில் ரூ. 1000 வரவு வைக்கப்படும். அதை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.
எனவே நீங்கள் வாங்கப் போகும் பொருட்களில் உபரியாக 5% மிச்சம்.
2. அமேசானில் ரூ. 499 க்கு குறைவாக பொருட்கள் வாங்கினால் ஷிப்பிங் கட்டணமாக ரூ. 40 வசூலிப்பார்கள்.
ரூ. 100 க்கு ஒரு உள்ளாடை நீங்கள் வாங்குவதாக இருந்தால் ஷிப்பிங் கட்டணம் ரூ. 40 செலுத்த வேண்டி வரும்.
Beauty, Books போன்றவற்றிக்கு இலவச ஷிப்பிங். மற்ற பொருட்களில் ஷிப்பிங்கில் ஓரளவு எப்படி மிச்சம் பிடிப்பது என்று பார்ப்போம்.
நீங்கள் ஏதாவது ஒரு பொருள் ரூ. 499 க்கு கீழ் வாங்கும் போது Beauty, Books பிரிவில் சென்று எதாவது ரூ. 40 க்கு குறைவான விலை உள்ள ஏதாவது ஒரு பொருளை சேர்த்து வாங்குங்கள். அதானாக இரண்டு பொருட்களுக்கும் இலவச ஷிப்பிங் அமலாகி விடும்.
உதாரணத்திற்கு நீங்கள் ரூ. 100 மதிப்புள்ள ஒரு பனியன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இலவச ஷிப்பிங் பெற beauty பிரிவில் இருந்து ரூ. 20 மதிப்புள்ள Garnier Face Wash 15ml சேர்த்துக் கொள்ளுங்கள். ரூ. 40 மிச்சம்.
3. இந்த விற்பனையில் பெரும்பாலும் பொருட்கள் குறுகிய கால அளவில், குறைந்த அளவு பொருட்கள் மட்டுமே Lightning Deals என்ற பெயரில் விற்கப்படும்.
பல சூப்பர் டீல்கள் சில நிமிடங்களில் காலியாகி விடும். நீங்கள் நினைக்கும் நேரத்தில் சென்று சாகவாசமாக வாங்க முடியாது.
எனவே Lightning Deals பக்கத்தில் ஒரு பொருள் நல்ல விலை குறைப்பில் கிடைப்பதாக கண்டால் உடனே Cash on Delivery அல்லது கிப்ட் கார்டு மூலம் டாப் அப் செய்த பணத்தில் வாங்கி விடுங்கள்.
பின்பு வேண்டாம் என்று நினைத்தால் உடனடியாக ஆர்டர் கேன்சல் செய்து கொள்ளலாம். செலுத்திய பணம் உடனே உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.
மிகவும் யோசித்துக் கொண்டு இருந்தால் விற்று தீர்ந்து விடலாம். ஏமாற்றமே மிஞ்சும்.
4. இந்த விற்பனையில் நூற்றுக்கணக்கில் டீல்கள் வந்து கொண்டு இருக்கும். அவற்றை தேடி கண்டு பிடிப்பது கஷ்டமாக இருக்கும்.
அதில் எளிமையாக்குகிறது துட்டு.காம். இந்த சேலின் மூன்று தினங்களும் வரக் கூடிய சூப்பர் டீல்களை தேடிப் பிடித்து உடனுக்குடன் பட்டியலிடுவோம். எனவே தொடர்ச்சியாக துட்டு.காம் பார்த்துக் கொண்டு இருங்கள்.

இரண்டு வகைகளில் துட்டு.காம் டீல்கள் பார்க்கலாம்.
i) http://thuttu.com தளத்தை உங்கள் பிரவுசரில் திறந்து வையுங்கள். புதிய டீல்கள் வர வர அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்.
ii) உங்கள் ஆண்டிராயிட் மொபைலில் துட்டு.காமின் ஆண்டிராயிட் ஆப்-ஐ நிறுவுங்கள். லிங்க் :https://play.google.com/store/apps/details?id=com.thuttu ஹாட் டீல்கள் வர வர உங்களுக்கு Notification வரும். விரைந்து வாங்கலாம்.
பேஸ்புக்கில் பெற தள்ளுபடி பேஸ்புக் பக்கத்திற்குhttps://www.facebook.com/thallubadi லைக் போட்டு சேர்ந்து கொள்ளுங்கள்.
ஆனால் போடப்படும் டீல்களை உடனுக்குடன் பேஸ்புக் உங்களுக்கு காட்டுவதில்லை. பல டீல்கள் தவறிப் போகும்.
எனவே ஆண்டிராயிட் மொபைல் உள்ளவர்கள் ஆப் மூலமாகவும் கணினியில் உள்ளவர்கள் துட்டு.காம்http://thuttu.com தளத்தை பார்ப்பதே சரியாக இருக்கும்.
இந்த விற்பனை நள்ளிரவு 12 மணி (26 அக்டோபர் 12AM ) முதல் ஆரம்பிக்கிறது. அப்போது இருந்தே நல்ல டீல்களின் வரவிருக்கும். Lightning Deal -கள் தினமும் காலை 7 மணிக்கு துவங்கி விடும்.
எனவே ஆஜராகி விடுங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங் பிராடு... மோசம் போன்ற பிம்பம் ஆன்லைன் ஷாப்பிங் பற்றி ஆழ்ந்த அறிவு இல்லாதவர்களால் ரெகுலராக பரப்பப் படுகிறது. அவை எல்லாம் உண்மை அல்ல.
Lightning Deals என்றால் என்ன?
ஸ்டாக் இல்லாமல் போவது ஏன்?
விரைவாக வாங்குவது எவ்வளவு முக்கியம்?
அமேசான் எப்படி செயல்படுகிறது?
அமேசானே எல்லா பொருட்களையும் விற்கிறதா? அல்லது இந்தியா எங்கும் உள்ள விற்பனையாளர்கள் பொருட்களை விற்கிறார்களா?
பொருட்களில் குறைபாடு நேர்ந்தால், விற்பனையாளர் மீது புகார் இருந்தால் எப்படி அமேசான் கஸ்டமர் கேர் மூலம் எளிமையாக நிவர்த்தி பெறுவது?
போன்று பல விஷயங்கள் பலருக்கு தெரிவதில்லை.
அந்த அறியாமையின் வெளிப்பாடே 'பிராடு' என்ற குற்றச்சாட்டில் முடிகிறது. பிராடு செய்தால் மார்க்கெட்டில் நிலைக்க முடியாது என அமேசானுக்கு தெரியாதா?
மூன்று வருடங்களாக இந்த பேஸ்புக் பக்கம் மூலம் டீல்கள் போட்டு வருகிறோம். பலரும் வாங்கி பயனடைந்து உள்ளனர். ஆன்லைன் ஷாப்பிங் பற்றி நன்றாக புரிந்து கொண்டோர் அதன் மகத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பர். தொடர்ச்சியாக பயனடைந்து வருவர்.
தொடர்ச்சியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வோருக்கு ஒரு வேண்டுகோள். அமேசான் தளம் பற்றியும், அதன் நம்பகத்தன்மை பற்றியும், ஆன்லைன் ஷாப்பிங் பற்றியும் உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
உங்கள் கருத்துக்கள் புதிதாக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்புபவர்களுக்கு மிக ஊக்கமாக, நம்பிக்கையாக இருக்கும். அவர்களுக்கு நீங்கள் உதவியதாக இருக்கும்.
உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள். அவர்களும் பயனடையட்டும்.

Re: அமேசானின் தீபாவளி விற்பனை
Tue Nov 03, 2015 8:45 am
இது ரொம்ப ஓவர்!
கூழ் ஊத்துறதுக்கு ஒரு சீசன் இருக்கிற மாதிரி, ஆன்லைன் விற்பனை தளங்கள் நம்மளை ஆப்படிக்கிறதுக்கும் ஒரு சீசன் இருக்கு. அதுதான் அக்டோபர் மாசம். போன வருஷம் ஃப்ளிப்கார்ட் மட்டும் இந்த நாட்கள்ல விலை கம்மினு தூண்டில் போட, இந்த ஆண்டு ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல்னு எல்லா முதலைகளும் வலைவீசி மீன் பிடிக்குது.
அதாகப்பட்டது அரேபியப் பாலைவனத்துல கிடைக்கிற பேரீச்சம்பழத்துல இருந்து கட்டழகி அனார்கலி கட்டி இருந்த கருகமணி வரைக்கும், நம்ம பயலுக விற்கிறாய்ங்க. இவிங்க கொடுமை எதுவரை போயிருக்குனா சமீபகாலமா மாட்டு வறட்டி எல்லாம் விற்க ஆரம்பிச்சுருக்காய்ங்க.
அந்த விற்பனை தளத்துல இருக்கிற பொருளோட உண்மையான விலை 500 ரூபாய் தாண்டாது. இருந்தும் உண்மையான விலை 1,600 ரூபாய், தள்ளுபடி 800, சிறப்பு விலை 800, உங்களுக்காக மட்டும் 600 ரூபாய்னு டகுல்பாஸ் வேலை காட்டுவாய்ங்க. நம்ம பசங்களும் உசைன் போல்ட் கணக்கா ஓடிப் போய் ஆர்டர் பண்ணுவாங்க.
அதுவும் நாம ரிலாக்ஸா இணையத்துல நேரம் போக்கலாமேனு வந்தா, நாலாப் பக்கமும் இவங்க விளம்பரத்தைப் போட்டு கேட் போடுவாய்ங்க. நாம என்னிக்கோ ஒரு பொருளோட விலையைத் தேடி இருப்போம். அதுக்கப்புறம் ஹட்ச் நாய் மாதிரி நாம கூடவே அது சுத்தும். ஃபேஸ்புக், ஜீ மெயில், கூகுள்னு நாம எந்தத் தளத்துக்குப் போனாலும் அதே பொருளை விளம்பரப்படுத்துவாங்க. கடைசியில, நம்ம மொபைலுக்கு மெசேஜ் அனுப்பி டார்ச்சர் பண்ணுவாங்க. இதுல இருந்து விடுதலை ஆவதற்காவது அந்தப் பொருளை வாங்கித் தொலைப்போம்.
நாட்டுக்கு நாலு நல்ல பேர் இருப்பாங்க. என்னவொரு கொடுமைனா அந்த நாலு பேருமே நாம வேலை பாக்கிற ஆபீஸ்லதான் இருப்பாங்க. ஏம்பா தம்பி, ஆஃபர் நிறைய இருக்கே, ஏதாவது வாங்கிப் போடுறதுன்னு ஆர்வத்தைத் தூண்டிவிட்டுப் போயிடுவாங்க. சரி கழுதையை வாங்கலாம்னு போனா, நாம ரொம்பநாளா வாங்கலாம்னு நினைச்ச பொருள் ரொம்ப கம்மியான விலைக்குப் போட்டு, 15 நிமிடத்தில் வாங்க வேண்டும்னு போட்டு இருப்பாங்க. அவசரகதியில ஆர்டர் பண்ணா, அப்பதான் நம்ம இணைய சேவை தன் வேலையைக் காட்டும். நம்ம முன்னோர்கள் புண்ணியத்துல எல்லாம் சரியா அமைஞ்சு, கடைசியா காசு கட்டப் போறப்போ, டீ தீர்ந்து போச்சு எழுந்திரிச்சுப் போன்னு சொல்ற மாதிரி நாம வாங்க ஆசைப்பட்ட பொருள் ஸ்டாக் முடிஞ்சுதுனு போர்டு போடுவாங்க. இந்த ரணகளத்துல ஆர்டர் பண்ணி ஜெயிக்கிற எல்லோரும் சக்சஸ் மீட்கூட நடத்தலாம் பாஸ்.
ஒரு வழியா அந்தப் பொருளை வாங்கிட்டா, அது நம்ம கைக்கு வர்றதுக்கு ஒரு நாள் குறிச்சு வெச்சுருப்பாங்க. சரி, இப்போ அந்தப் பொருள் எங்கே இருக்குனு பாக்கிறதுக்கு ஒரு செயலி வேற இருக்கும். பெங்களூருல இருந்து சென்னை வர வேண்டிய பொருள், டெல்லி எல்லாம் போய் சுத்திட்டு நம்ம கைக்கு வரும். ஆனா, அப்போதான் நமக்கு ஒரு ட்விஸ்ட் காத்துக் கிடக்கும். நாம அரும்பாடுபட்டு ஆர்டர் பண்ணின 42 இஞ்ச் சட்டைக்குப் பதிலா, 32 இஞ்ச்ல ஒரு சட்டை அனுப்பி வெச்சுருப்பாங்க. அவ்வ்வ்!
-கார்த்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum