வெந்தயக் கீரை – சேப்பங்கிழங்கு குழம்பு
Sat Oct 24, 2015 9:10 pm
என்னென்ன தேவை?
வெந்தயக் கீரை – 1 கட்டு, சேப்பங்கிழங்கு – 100 கிராம், வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி – பூண்டு விழுது – சிறிது, குழம்பு மிளகாய் தூள் – சிறிது, மஞ்சள் தூள் – கால் சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, கறிவேப்பிலை,
கொத்தமல்லி – சிறிது. அரைப்பதற்கு: தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், சோம்பு, கசகசா – தலா கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சேப்பங்கிழங்கை தோல் மட்டும் நீக்கி, வேக வைக்காமல், சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெந்தயக் கீரையை அலசி, நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சேப்பங்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பிறகு வெந்தயக் கீரையும் சேர்த்து வதக்கி, உப்பு, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும். அல்லது நன்கு கொதிக்கும் போது, குக்கரில் வெயிட் போட்டு, குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum