கீரை கடைசல்
Fri Oct 14, 2016 8:54 am
கீரை கடைசல்
தேவையான பொருட்கள்
பண்ணை கீரை 2 கைப்பிடி
தொய்ய கீரை 1 கைப்பிடி
குமுட்டி கீரை 1 கைப்பிடி
பச்சை மிளகாய் 6
சின்ன வெங்காயம் 6
பூண்டு பற்கள் 10
தேங்காய் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை
1. கீரையை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ளவும்.
2. வடச்சட்டியில் அடுப்புல வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு இவைகள் அனைத்தும் நன்கு வேகும் வரை வதக்கவும்.
3. இப்பொழுது வடைச்சட்டியில் கீரையை சேர்த்துகோங்க சிறுதீயில் ஒரு 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு குளிர வைத்துகொள்ள வேண்டும்.
4. இப்பொழுது இதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். ஒரு பொட்டு தண்ணீர்கூட உபயோக படுத்த கூடாது.
5. கீரை கடைசல் கேழ்வரகு களி, கம்புச் சோறு, சுடு அரிசி சோற்றுக்கு இது சரியான பக்க உணவு ( சைட்டிஷ் ).
Permissions in this forum:
You cannot reply to topics in this forum