தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Empty கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO)

Sat Oct 24, 2015 2:35 pm
நம் குழந்தைகளை காலையில் படுக்கையில் இருந்து எழுப்பி, பல் தேய்க்க வைத்து, குளிக்கச் செய்து, ஸ்கூல் பேக்கை சரிசெய்து கொடுத்து, ஸ்கூல் வேனில் ஏற்றிவிடும் வரை 'எழுந்திரு, பல் தேய், குளி, சாப்பிடு, ஹோம் ஒர்க் சரிபார், ஸ்கூல் பேக்கை ரெடி செய்' என ஒரே மாதிரியான வசனங்களைத்தான் நித்தம் நாம் பயன்படுத்திக் கொண்டிருப்போம். இதற்குப் பதிலாக  ‘ம்’ என்றால் பல் தேய் என்றும், ‘ம்ம்’ என்றால் குளி என்றும், ‘ம்ம்ம்’ என்றால் ஹோம் ஒர்க் சரிபார்த்து, ஸ்கூல் பேகை ரெடி செய் என்றும் நம் குழந்தைகள் புரிந்துகொள்ளுமாறு பழக்கினால் எப்படி இருக்கும்? 

இப்படி திரும்பத்திரும்ப செய்கிற நீண்ட செயல்பாடுகளை, ஒரு சிறிய செயல்பாட்டின் மூலம் இயக்கும் முறைக்கு உதவுவதே மேக்ரோ (Macro).

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Comp%207%20rightபதிப்பகத் துறையில் புரூஃப் ரீடராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒருவர், பொதுவான எழுத்துப் பிழைகளை சரிசெய்வதற்கு மேக்ரோ ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். 

இத்தனைக்கும் அவர் புரோகிராம் எழுதத் தெரிந்தவர் அல்ல. கம்ப்யூட்டர் துறையை பாடமாக எடுத்துப் படித்தவரும் அல்ல. அவர் படித்திருந்தது தமிழ் இலக்கியம். வயதோ 50-க்கும் மேல். இவரால் எப்படி மேக்ரோ எழுத முடிந்தது என ஆர்வம் மேலோங்க அவரிடம் கேட்டேன். 

‘பதினைந்து வருடங்களாக  பிழைத் திருத்தும் பணியை செய்து வருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கம்ப்யூட்டரில்தான் பிழை திருத்துகிறேன். தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாகச் செய்கின்ற எழுத்துப் பிழைகள் எனக்கு அத்துப்படி. 

ஒவ்வொரு முறையும் அந்தத் தவறுகளை திருத்தும்போது கொஞ்சம் சலிப்பு ஏற்பட ஆரம்பித்தது. உதாரணத்துக்கு தான், விட, கொண்டே, போல, வந்து போன்ற வார்த்தைகளை பிரித்து எழுதி இருப்பார்கள். 

இவை முந்தைய வார்த்தையோடு இணைந்து வெளிப்பட வேண்டும். இவற்றை 200, 300 பக்கங்கள்கொண்ட எம்.எஸ்.வேர்ட் டாக்குமென்ட்டில் ஒவ்வொரு இடமாகத் தேடி பிடித்து, பிழையை சரி செய்வதற்கு பதிலாக ஏதேனும் புரோகிராம் எழுதி வைத்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என நினைத்தேன்.  அந்த நேரத்தில் என் மகன், எனக்கு நீங்கள் தமிழில் எழுதிய எம்.எஸ்.ஆஃபீஸ் புத்தகத்தைப் பரிசளித்திருந்தான். அதில் மேக்ரோ என்ற கான்செப்ட் பற்றி  விளக்கம் கொடுத்திருந்தீர்கள். அதை அப்படியே என் பணிக்கு பயன்படுத்திக்கொண்டேன். 

கீபோர்டில் CTRL + W என்ற கீயை அழுத்தினால், மேலே நான் குறிப்பிட்ட பொதுவான பிழைகள் அத்தனையும் திருத்தப்படுமாறு மேக்ரோ ஒன்றை எழுதி வைத்துக்கொண்டேன். அதில் இருந்து ஒரு புத்தகத்தை பிழைத் திருத்துவதற்கு முன்னர் மேக்ரோ மூலம் பொதுவான பிழைகளை சரிசெய்துகொண்ட பின்னர்தான் படித்துப் பார்த்து பிழைகளை சரிசெய்ய உட்காருவேன். இதனால் என் நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. இன்று மேக்ரோ மூலம் 90 சதவிகித பிழைகளை சரிசெய்துவிடுகிறேன். மீதமிருக்கும் 10 சதவிகிதப் பிழைகளை படித்துப்பார்த்து சரிசெய்கிறேன். இதனால் சலிப்பு இல்லாமல் உற்சாகமாக பணி செய்ய முடிகிறது.’ என்றார்.

மேக்ரோ என்றால் என்ன?

கம்ப்யூட்டரில் நாம் ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு செய்வது மனச்சோர்வை உண்டாக்குவதோடு, நம் நேரத்தையும் உழைப்பையும்கூட வீணாக்கும். இதுபோன்ற சூழலில் நமக்கு உதவுகிறது மேக்ரோ எனும் வசதி. மேக்ரோவைப் பயன்படுத்துவதன் மூலம்  திரும்பத் திரும்பச் செய்கிற வேலைகளை ஒரு ஷார்ட்கட் கீயை அழுத்துவதன் மூலமோ  அல்லது பட்டனை கிளிக் செய்வதன் மூலமோ சுலபமாக முடிக்க முடியும்.

நாம் பயன்படுத்துகிற மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் பேக்கேஜில் உள்ள பெரும்பாலான அப்ளிகேஷன்களில் மேக்ரோ வசதி உள்ளது. நாம்  மேக்ரோவை உருவாக்கும்போது அதன் பின்னணியில் புரோகிராம் எழுதப்பட்டுக்கொண்டே வரும்.

உதாரணத்துக்கு நாம் எம்.எஸ்.வேர்ட் டாக்குமென்ட்டை எடுத்துக்கொள்வோம். இதில் நம் முகவரியை அடிக்கடி டைப் செய்ய வேண்டிய தேவை இருக்கும்போது ஒவ்வொரு முறையும் நம் முகவரியை டைப் செய்யாமல், ஒரு கிளிக்கில் நம் முகவரி வெளிப்படுமாறு செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு மேக்ரோ ஒன்றை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை மேக்ரோவை உருவாக்கி வைத்துக்கொண்டு விட்டால் பிறகு அதை தேவைப்படும்போது இயக்கி செயல்படுத்திக்கொண்டால் போதும்.

மைக்ரோ சாஃப்ட் வேர்டில் மேக்ரோ உருவாக்கும் முறை

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Comp%207%20600%201
மைக்ரோசாஃப்ட் வேர்ட் சாஃப்ட்வேரை இயக்கிக்கொள்ளலாம். இப்போது கிடைக்கும் எம்.எஸ்.வேர்டின் முகப்புத்திரையில் மேலே இருக்கும் பகுதிக்கு ரிப்பன் பகுதியில் View என்ற டேபில் உள்ள Macros என்ற கட்டளைத் தொகுப்பில் பொருத்தப்பட்டிருக்கும் Macros என்ற விவரத்தைப் பயன்படுத்தி மேக்ரோவை உருவாக்கிக்கொள்ளலாம்.
கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Comp%207%20600%202
 மைக்ரோசாஃப்ட் வேர்டில் File>New என்ற மெனுவிவரம் மூலம் புதிதாக ஒரு டாக்குமென்ட் ஃபைலை உருவாக்கிக்கொள்ளலாம். இதில் View என்ற டேபில் Macros என்ற கட்டளைத் தொகுப்பில் Macros என்ற விவரத்தை கிளிக் செய்தால் அதில் கீழ்க்காணுமாறு மூன்று விவரங்கள் இருப்பதைக் கவனிக்கலாம்.

* View Macro
* Record Macro
* Pause Recording

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Comp%207%20600%203 
இதில் Record Macro என்ற விவரத்தை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.  இப்போது Record Macro என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Macro, Assign Macro To, Store Macro In என மூன்று விவரங்கள் இருப்பதை கவனிக்கவும்.

a.    Macro: இந்த இடத்தில் மேக்ரோவின் பெயரை டைப் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, Address என டைப் செய்துள்ளோம்.

b.    Store Macro in: நாம் உருவாக்கும் மேக்ரோவை வேர்டில் எல்லா டாக்குமெண்ட்டுகளிலும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் All Documents  என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

c.    Assign Macro To:  மேக்ரோவை ஷார்ட்கட் கீயில் பொருத்திக்கொள்ள வேண்டும் என்றால் Keyboard என்ற விவரத்தையும், மெனுவில் பட்டனை உருவாக்கி பொருத்திக்கொள்ள வேண்டும் என்றால் Button என்ற விவரத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வெண்டும். உதாரணத்துக்கு கீபோர்டில் ஷார்ட்கட் கீயில் பொருத்திக்கொள்ளும் நோக்கில் Keyboard என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளோம்.

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Comp%207%20600%204
உடனடியாக Customize Keyboard என்ற தலைப்பிலான விண்டோ வெளிப்படும். இதில் கீழ்க்காணுமாறு மூன்று விவரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

 a.    Press a new short cut key: இந்த இடத்தில்தான் நாம் உருவாக்க இருக்கும் மேக்ரோவுக்கான ஷார்ட்கட் கீயை டைப் செய்துகொள்ள வேண்டும் உதாரணத்துக்கு, CTRL + B, D என்ற ஷார்ட்கட் கீயை மேக்ரோவுக்குப் பொருத்த வேண்டும் என்றால் கீபோர்டில் கன்ட்ரோல் கீயையும், B, D என்ற இரண்டு எழுத்துக்களையும் ஒருசேர அழுத்த வேண்டும். உடனடியாக CTRL + B, D என்பது இங்கு வெளிப்படும்.
 
b.    Assign: அடுத்து, நாம் உருவாக்கிய மேக்ரோவின் பெயரை ஷார்ட்கட் கீயாக பொருத்திக்கொள்ள Assign என்ற பட்டனை கிளிக் செய்துகொள்ள வேண்டும். 

 c.    Close: இறுதியில் Close என்ற பட்டனை கிளிக் செய்துகொண்டு Customize Keyboard என்ற விண்டோவில் இருந்து வெளிவரலாம்.

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Comp%207%20600%205
இப்போது கர்சரின் ஐகான் ஒரு ஸ்மைலி போன்ற வடிவில் மாறி இருக்கும். இனி, நமக்குத் தேவையானதை டைப்  செய்துகொள்ளலாம் அல்லது செயல்பாட்டினை செய்துகொள்ளலாம். இங்கு, நம் முகவரியை டைப் செய்துகொள்ளலாம்.
 
Compcare Software Private Limited
Velachery, Chennai - 600042

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Comp%207%20600%206
இப்போது டாக்குமென்ட்டின் ரிப்பன் பகுதியில் View > Macros > Macros என்ற விவரத்தின் மூலம் கிடைக்கின்ற சிறிய பாப்அப் விண்டோவில் Stop Recording என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Comp%207%20600%207
இனி கீபோர்டில் CTRL + B, D என்ற ஷார்ட்கட் கீக்களை அழுத்தினால் அந்த கீயில் பொருத்தியுள்ள முகவரி வெளிப்படும். எம்.எஸ்.வேர்டில் எந்த ஒரு டாக்குமென்ட்டைத் திறந்து  இந்த ஷார்ட்கட் கீயை அழுத்தினாலும் இதில் பொருத்தியுள்ள முகவரி வெளிப்படுவதைக் காணலாம்.

டைப் செய்த டாக்குமென்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளுக்கு ஒரே மாதிரியான ஃபான்ட்டின் பெயர், அளவு, கலர், வடிவமைப்பு போன்றவை தேவை என்றால் அதற்கு மேக்ரோ ஒன்றை உருவாக்கி வைத்துக்கொள்ளலாம். 

பிறகு அந்தப் பகுதிகளில் மேக்ரோவை இயக்கி வடிவமைப்பைப் பொருத்திக்கொள்ளலாம். இதனால் ஒரே மாதிரியான வடிவமைப்பு கிடைக்கும். நம் வேலையும், நேரமும் சேமிக்கப்படும். இதுபோல எந்த ஒரு வேலையை திரும்பத் திரும்பச் செய்ய நினைக்கிறோமோ, அவற்றுக்கு எல்லாம் மேக்ரோ உருவாக்கி வைத்துக்கொண்டு, தேவையானபோது ஒரே மவுஸ் கிளிக்கிலோ அல்லது கீபோர்ட் ஷார்ட்கட் கீயிலோ அவற்றை இயக்கிக்கொள்ளலாம். 

குறிப்பு

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO) Comp%207%20600%208
மேக்ரோவை மெனுக்களிலும், ரிப்பன் பகுதியிலும் இணைக்க வேண்டும் என்றால், Record Macro என்ற விண்டோவில் Assign Macro To என்ற பிரிவின் கீழ் உள்ள Button என்ற விவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

Disclaimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.  

- காம்கேர் கே. புவனேஸ்வரி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum