‘ஸ்மார்ட்’ போன், ‘லாக்'
Sat Oct 17, 2015 11:39 am
சமீபத்தில், வாகனத்தில் பயணிக்கும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, விழுந்து கிடந்தார். அவரது மொபைல் போனை எடுத்து அவரது உறவினருக்கு தகவல் கூற நினைத்தால், அந்த, ‘ஸ்மார்ட்’ போன், ‘லாக்’ ஆகி இருந்தது. அதனால், எங்களால், அவரது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துப் போனோம்.
இன்று பலர், மொபைல் போனை, ‘லாக்’ செய்து, உபயோகிக்கின்றனர். இதனால், இம்மாதிரி சமயங்களில், பிறரால் அதில் பதிவு செய்துள்ள எண்களை பார்க்க முடியாது.
இப்பிரச்னையை தீர்க்க, சில தற்காப்பு வழிமுறைகள் உள்ளன. அவை:
‘ஸ்மார்ட்’ போனில் தொடர்பு எண்களை, ‘ஜி – மெயில்’ அக்கவுண்டில் தான் பெரும்பாலானோர் பதிவு செய்கின்றனர். அதை தவிர்த்து, சில முக்கிய எண்களை, ‘சிம்’ கார்டில், பதிவு செய்ய வேண்டும். அதனால், இம்மாதிரியான விபத்துகளின் போது, ‘சிம்’ கார்டை மற்ற போனில் மாற்றி, நம்பர்களை தொடர்பு கொள்ள இயலும்.
மேலும், ஆண்ட்ராய்டு போன் பயனீட்டாளர்கள், தங்கள் போன், ‘செட்டிங்ஸ்’ மூலம், குறிப்பிட்ட நம்பரை, ‘லாக்’ செய்த பின்பும், போனில், ‘டிஸ்ப்ளே’ செய்ய முடியும். இந்த செட்டிங்கை பயன்படுத்தி, பெயர், நம்பர், ரத்த வகை போன்ற தகவல்களை, ‘டிஸ்ப்ளே’ செய்யலாம்.
வயதானவர்கள் முதல் படிக்காதவர் வரை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் இச்சூழ்நிலையில், விவரம் அறிந்தவர்கள், இதை, அவர்கள் போன்களில், ‘செட்’ செய்வதால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
‘ஸ்மார்ட்’ போனை, ‘ஸ்மார்ட்’டாக பயன்படுத்த தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum